என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    பப்ஜி மொபைல் கேம் இந்திய வெளியீட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பப்ஜி கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் இந்தியாவில் வெளியாகுமா என  நவம்பர் 30ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 

    இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சகம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பப்ஜி மொபைல் தாய் நிறுவனம் சீனாவின் டென்சன்ட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது. 

    தற்போது பப்ஜி மொபைல் கேம் மீண்டும் புது அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்படும் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டு அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை குறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய லைட் வெர்ஷனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் விலை முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோவை விட 20 சதவீதம் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஏர்பாட்ஸ் ப்ரோ

    ஆப்பிள் நிறுவனம் லைட் வேரியண்ட்டை ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனை துவங்கியதும் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

    ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உற்பத்தி அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 வாக்கில் ரூ. 24,900 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    சோனி நிறுவனத்தின் புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சோனி நிறுவனத்தின் புதிய தலைமுறை கேமிங் கன்சோல் பிஎஸ்5 உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விற்பனை துவங்கிய பல நாடுகளில் புதிய பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே இதன் இந்திய விற்பனை விவரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி நிறுவனம் பிஎஸ்5 கன்சோலை ஜனவரி மாத மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் என கூறப்படுகிறது. புதிய பிஎஸ்5 கன்சோலுக்கான முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

     சோனி பிஎஸ்5

    மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் புதிய பிஎஸ்5 கன்சோல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் சோனி சென்ட்டர்களும், பிஎஸ்5 முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக பிஎஸ்5 கன்சோல் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை துவங்க மேலும் சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. பிஎஸ்5 விற்பனை ஏற்கனவே துவங்கிய இருக்கும் பல்வேறு சந்தைகளிலும் கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு சூழலே நிலவுகிறது.

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

     ரெட்மி 9 பவர்

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் 3.5mm ஆடியோஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,  ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், பியெரி ரெட், எலெக்ட்ரிக் கிரீன் மற்றும் பிளேசிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்களின் எதிர்காலம் பற்றிய உண்மையை சாம்சங் நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யாது என சமீபத்தில் பலமுறை தகவல்கள் வெளியாகின. மேலும் நோட் சீரிஸ் மாடல்களில் பிரபல அம்சமான எஸ் பென் கேலக்ஸி எஸ்20 சீரிசில் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டன.

    இந்நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் பற்றி வெளியான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது. அடுத்த ஆண்டு கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்து இறுக்கிறது. 

    முன்னதாக சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் ரோ டே மூன், எஸ் பென் ஸ்டைலஸ் அனுபவத்தை மேலும் சில கேலக்ஸி சாதனங்களில் வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். கேலக்ஸி நோட் சீரிஸ் அம்சங்களில் அதிகம் விரும்பப்பட்ட சிலவற்றை மேலும் அதிக கேலக்ஸி சாதனங்களில் வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் எஸ் பென் ஸ்டைலஸ் கேலக்ஸி எஸ்21 சீரிசில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.


    மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தொலைத்தொடர்பு துறைக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து மத்திய சட்டம் மற்றும் தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் ஆகி யோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொலைத் தொடர்புக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2251.25 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதில் 5ஜி சேவைகளை வழங்கும் 3,300 முதல் 3,600 மெகா ஹெட்ஸ் வரையிலான அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாது. மற்ற அலைகற்றைகள் ஏலம் விடப்படும். ஏலம் விடப்பட இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் அடிப்படை விலை மதிப்பு ரூ. 3.92 லட்சம் கோடி. இதற்கான அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பம் இந்த மாதத்தில் வெளியிடப்படும்.

    ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விற்பனை செய்வதற்கான ஏலம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் மூலம் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்துக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இன்ஸ்டாகிராம் லைட் செயலி மீண்டும் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் லைட் செயலியை வெளியிட துவங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. 

    புதிய இன்ஸ்டாகிராம் லைட் ஆப் அளவில் 2MB-க்கும் குறைவாகவே இருக்கிறது. அளவில் மிக சிறியதாக இருந்தாலும், செயலி சீராகவும், வேகமாகவும் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த செயலி லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    முன்னதாக இதேபோன்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் 2018 ஆண்டு வாக்கில் மெக்சிகோவில் அறிமுகம் செய்தது. இதுதவிர பேஸ்புக் லைட் செயலியை அந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதுவும் அளவில் சிறியதாகவே இருந்தது.

    இன்ஸ்டாகிராம் லைட் செயலி இந்தியாவில் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோர் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம். விரைவில் இந்த செயலி சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் லைட் செயலி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, பங்களா, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது. கடந்த மாதம் மேக்ஒஎஸ் பிக் சர் ஒஎஸ் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புது அப்டேட் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர்-இயர் ஹெட்போனிற்கான சப்போர்ட் வழங்குகிறது.

    மேலும் ஆப் ஸ்டோர் பிரைவசி லேபில், ஆப்பிள் நியூஸ் விட்ஜெட்கள், மேம்பட்ட போட்டோஸ் ஆப் மற்றும் ஆப்பிள் ப்ரோரா புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. இத்துடன் காற்றின் தரம் சார்ந்த ஆரோக்கிய விவரங்கள் வெதர் மற்றும் சிரி சேவையில் வழங்கப்படுகிறது.

     மேக்ஒஎஸ் பிக் சர்

    மேக்ஒஎஸ் 11 பிக் சர் வெளியானது முதல் ஆப்பிள் வெளியிட்ட பெரும் அப்டேட் இது ஆகும். இதில் மேம்பட்ட இன்டர்பேஸ், மெனு பார், சைடு பார், மேம்பட்ட டாக், ஆப் ஐகான் மற்றும் கண்ட்ரோல் சென்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சங்கள் தவிர மேக் தளத்தின் பக் சரி செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் சிஸ்டம் பிரிபெரன்ஸ் செயலியில் சாப்ட்வேர் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

    வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் அப்டேட்களை தானாக அனுப்பிவிடும். ஒருவேளை அப்டேட் கிடைக்காத பட்சத்தில் இவ்வாறு செய்யலாம்.
    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரூ. 5999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, எக்ஸ் ஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடலில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டோபாஸ் புளூ, குவாட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடல் விலை ரூ. 5999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 55 இன்ச் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக துல்லியமான நிறங்களை பிரதிபலிக்கிறது. இதனால் அதிக திறன் கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், கேமிங் மற்றும் இதர தரவுகளை சீராக ரென்டர் செய்ய முடியும். இதற்கென இந்த டிவியில் MEMC சிப் வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி டிவி

    மேலும் புதிய சியோமி டிவி மிக மெல்லிய பெசல்கள், 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் பிரேம், சேண்ட் பிளாஸ்ட் கோட்டிங் மற்றும் கார்பன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 10, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் HDMI 2.1  மற்றும் eARC வழங்கப்பட்டு உள்ளது. இது அதிக பேண்ட்வித் ஆடியோ, ஆட்டோமேடிக் லோ லேடென்சி மற்றும் 5ms இன்புட் லேக் கொண்டிருக்கிறது. இதனால் கேமிங் அனுபவம் தலைசிறந்ததாக இருக்கும். இந்த டிவியில் 30 வாட் திறன் கொண்ட 6 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் சியோமி  Mi QLED TV 4K 55 இன்ச் மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 மாடலுடன் அந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனி சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி வருகிறது. இந்நிலையில் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டிஎம் ரோ புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எஸ் பென் வசதியுடன் ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என ரோ தனது வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார். 2020 ஆம் ஆண்டு எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, ஜனவரி மாதம் மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எஸ் பென் வசதி கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா அல்லது டாப் எண்ட் எஸ்21 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சர்வதேச  வெளியீட்டை தொடர்ந்து இந்த சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் அசத்தல் தோற்றம் கொண்ட புதிய ஸ்லைடு கான்செப்ட் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட சாதனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ் 2021 பெயரில் புதிதாக ரோலபில் கான்செப்ட் போனினை அறிமுகம் செய்தது. 

    இதன் விற்பனை இதுவரை துவங்காத நிலையில் தற்சமயம் ஒப்போ நிறுவனம் ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பு நென்டோ நிறுவனத்துடன் இணைந்து புதிதாக ஸ்லைடு கான்செப்ட் போனினை உருவாக்கி வருகிறது.

    புதிய ஸ்லைடு போன் மூன்று ஹின்ஜ்களை கொண்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு போனினை ஏழு வெவ்வேறு அளவுகளில் மடிக்க செய்கிறது. மக்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் புதுவிதமான பயன்பாட்டை எதிர்பார்ப்பதால், ஸ்லைடு போன் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஒப்போ மற்றும் நென்டோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

    கான்செப்ட் மாடலில் டக்டு-இன் ரக ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது. புதிய ஸ்லைடு போன் வெளியாக இன்னும் சில காலம் இருக்கிறது. எனினும், புதிய கான்செப்ட் மாடல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து ட்ரூ வயர்லெஸ் கான்செப்ட்டை உருவாக்கின. இந்த கான்செப்ட்டில் இயர்போன்கள் கேஸ் அல்லது பவர் ஹப் உடன் இணைந்து கொள்ளும். இது வயர்லெஸ் சார்ஜிங் செய்தபடி ஸ்பீக்கரில் இசையை தொடர்ந்து இயக்கும் திறன் கொண்டிருக்கும்.

    ×