search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ
    X
    ஒப்போ

    அசத்தல் தோற்றம் கொண்ட ஒப்போ கான்செப்ட் போன் அறிமுகம்

    ஒப்போ நிறுவனம் அசத்தல் தோற்றம் கொண்ட புதிய ஸ்லைடு கான்செப்ட் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட சாதனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ் 2021 பெயரில் புதிதாக ரோலபில் கான்செப்ட் போனினை அறிமுகம் செய்தது. 

    இதன் விற்பனை இதுவரை துவங்காத நிலையில் தற்சமயம் ஒப்போ நிறுவனம் ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பு நென்டோ நிறுவனத்துடன் இணைந்து புதிதாக ஸ்லைடு கான்செப்ட் போனினை உருவாக்கி வருகிறது.

    புதிய ஸ்லைடு போன் மூன்று ஹின்ஜ்களை கொண்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு போனினை ஏழு வெவ்வேறு அளவுகளில் மடிக்க செய்கிறது. மக்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் புதுவிதமான பயன்பாட்டை எதிர்பார்ப்பதால், ஸ்லைடு போன் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஒப்போ மற்றும் நென்டோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

    கான்செப்ட் மாடலில் டக்டு-இன் ரக ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது. புதிய ஸ்லைடு போன் வெளியாக இன்னும் சில காலம் இருக்கிறது. எனினும், புதிய கான்செப்ட் மாடல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக இரு நிறுவனங்களும் இணைந்து ட்ரூ வயர்லெஸ் கான்செப்ட்டை உருவாக்கின. இந்த கான்செப்ட்டில் இயர்போன்கள் கேஸ் அல்லது பவர் ஹப் உடன் இணைந்து கொள்ளும். இது வயர்லெஸ் சார்ஜிங் செய்தபடி ஸ்பீக்கரில் இசையை தொடர்ந்து இயக்கும் திறன் கொண்டிருக்கும்.

    Next Story
    ×