என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை பயனர்களுக்கு தினசரி டேட்டா பலன்களை வழங்குகிறது.
- 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய வி சலுகை சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையே வி நிறுவனம் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனிடையே போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி நிறுவனம் தற்போது புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 181 விலையில் கிடைக்கும் புதிய பிரீபெயிட் சலுகை தினசரி பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையுடன் கூடுதலாக இதனை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதிக டேட்டா பெற முடியும்.

வி நிறுவனத்தின் புதிய ரூ. 181 பிரீபெயிட் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் மறுநாள் தான் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையில் அன்றாட டேட்டாவை விரைந்து தீர்ப்போருக்காக புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரூ. 181 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக வி நிறுவனம் டேட்டா, வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கும் இரண்டு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை முறையே ரூ. 289 மற்றும் ரூ. 429 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
- டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோ சில நாட்களுக்கு முன் அதிரடியாக மாற்றப்பட்டது.
- டாகி-காயினில் இருந்து தற்போது டுவிட்டர் லோகோ மீண்டும் பழைய லோகோவிற்கே மாற்றப்பட்டு விட்டது.
டுவிட்டர் நிறுவனத்தின் நீலப் பறவை லோகோ சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டது. அனைவருக்கும் நன்கு பழகிப் போன டுவிட்டர் லோகோ டாகி-காயின், அதாவது ஷிபா இனு லோகோ-வாக மாற்றப்பட்டது. தற்போது டாகி-காயினுக்கு பதில் மீண்டும் பழையபடி நீலப் பறவை லோகோ மாற்றப்பட்டுவிட்டது. அடிக்கடி டுவிட்டர் லோகோ மாற்றப்படுவதற்கான கராணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
டாகி-காயின் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-கிற்கு எதிரான வழக்கு தொடர்ந்ததே இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. முட்டாள்கள் தினத்தை ஒட்டி எலான் மஸ்க் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எந்த காரணமாக இருந்த போதிலும், டுவிட்டர் தளத்தில் தற்போது மீண்டும் நீலப் பறவை லோகோ வழங்கப்பட்டு விட்டது. டுவிட்டரை ரிலோட் செய்யும் போது பழையபடி நீலப் பறவை லோகோ திரையில் தோன்றுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தான் டுவிட்டர் நிறுவன லோகோ மாற்றுவதவாக எலான் மஸ்க் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். டுவிட்டர் லோகோவுக்கு மாற்றாக டாகி-காயின் லோகோ இடம்பெற்றது. மூன்று நாட்களுக்கு டுவிட்டர் லோகோ டாகி-காயினாக இருந்த நிலையில், தற்போது டுவிட்டர் தளத்தில் மீண்டும் நீலப் பறவை லோகோ காணப்படுகிறது. டுவிட்டர் தளத்தின் லோகோ அதன் வெப் வெர்ஷனில் மட்டுமே மாற்றப்பட்டது.
டுவிட்டர் மொபைல் வெர்ஷனில் நீலப் பறவை லோகோ மாற்றப்படாமலேயே இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, இதனை லாபகரமாக மாற்றுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க். தற்போது அதன் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.
- டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.
- டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயது என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பொது மக்கள் இணையத்தில் பணம் இழப்பது சமீப காலங்களில் பெருமளவு அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த வரிசையில் தற்போது நிதி ஆலோசகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர் டேட்டிங் வலைதள சேவையான டிண்டரில் சுமார் HK14 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிண்டரில் அறிமுகமான பெண்ணிடம் சிக்கிய நிதி ஆலோசகர், தான் ஏமாற்றப்படுவதை அறியாமல் மோசடியில் சிக்கியுள்ளார்.
டிண்டர் மோசடியில் ஏமாற்றப்பட்ட நபருக்கு 55 வயதாகிறது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஹாங்காங்கின் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் நபருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பெண் முதலீட்டு புரோக்கருக்கும் டிண்டரில் மேட்ச் ஏற்பட்டதே, இந்த மோசடியின் ஆரம்பப் புள்ளி.

கடந்த பிப்ரவரி மாதம் டிண்டரில் மேட்ச் ஆனதைத் தொடர்ந்து நிதி ஆலோசகர் மற்றும் முதலீட்டு புரோக்கர் இருவரும் வாட்ஸ்அப்பில் உரையாடலை ஆரம்பித்துள்ளனர். இவர்களின் டேட்டிங் ஆன்லைனில் ஜோராக நடந்து வந்துள்ளது. டேட்டிங்கை தொடர்ந்து டிண்டரில் அறிமுகமான பெண் ஆலோசனையை கேட்டு மார்ச் 6 ஆம் தேதியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி வரை பல்வேறு வலைதளங்களில் நிதி ஆலோசகர் முதலீடு செய்து இருக்கிறார்.
இவ்வாறு பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 22 தனித்தனி பரிவர்த்தனைகளில் நிதி ஆலோசகர் HK 14.2 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி வரை முதலீடு செய்து இருந்தார். இவரின் முதலீடுகளுக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என பெண் வலியுறுத்தி வந்துள்ளார். பெண் கூறியப்படி தனக்கு லாபம் கிடைக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த நிதி ஆலோசகர், காவல் துறை உதவியை நாடினார். அப்போது காவல் துறையினர் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் அறிந்து கொள்கிறார்.
காவல் துறையினர், முதலீட்டாளர்களை ஏமாற்ற பல்வேறு போலி வலைதளங்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் போலி வலைதளங்களை நம்பி எவ்வித முதலீடுகளையும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதலீட்டு ஆலோசகர் பின்னணி குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும்.
அதிக லாபம் கொடுப்பதாக கூறுவோரிடம், அதிக கேள்விகளை கேட்க வேண்டும். இவ்வாறு கூறுவோர் நிச்சயம் ஏமாற்றும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி விவரங்களை கேட்கும் பட்சத்தில், அதிக கவனமுடன் இருப்பது அவசியம் ஆகும். நேரடியாக சந்திக்காத யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.
நேரில் சந்திப்பதை பல்வேறு காரணங்களை கூறி தவிர்ப்போரிடம் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.
- சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.
இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிசை புதிதாக எல்லோ நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ஐபோன் 14 எல்லோ நிறம் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் எல்லோ நிற வேரியண்ட்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐபோன் 14 எல்லோ வேரியண்ட் 128 ஜிபி மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 901 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் 14 எல்லோ நிற மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 71 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவற்றை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 எல்லோ நிற வேரியண்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 901 வரை குறைந்துவிடுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 அம்சங்கள்:
6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன்
ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட்
128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
12MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா
கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம்
ஐஒஎஸ் 16
ஃபேஸ் ஐடி சென்சார்
5ஜி, வைபை, ப்ளூடூத்
டூயல் சிம்
லைட்னிங் போர்ட்
- வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் சாட்களை லாக் மற்றும் ஹைட் செய்ய முடியும்.
- இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் சாட்களை கைரேகை சென்சார் மூலம் லாக் செய்யலாம்.
பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங்கில் உள்ள ஏராளமான புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பயனர்கள் பிரைவேட் சாட்-ஐ லாக் மற்றும் ஹைட் (மறைத்து வைத்தல்) செய்யும் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து WaBetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.8.2 அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. எதிர்கால ஸ்டேபில் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படும்.

காண்டாக்ட் மற்றும் க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கிய தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும். லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். சாட் லாக் செய்யப்பட்டால், அதனை பாஸ்வேர்டு அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும்.
ஒருவேளை புதிய அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் போனினை மற்றவர்கள் எடுத்து சாட்களை திறக்க முயற்சித்தாலும், அவர்களால் முழு சாட்களையும் அழிக்காமல் பார்க்க முடியாது. லாக்டு சாட்-இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர் கேலரியில் தானாக சேமிக்கப்படாது.
சாட், ஆடியோ சாட், எடிட் மெசேஞ்ச் மற்றும் ஷார்ட் வீடியோ மெசேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன. மேலும் இவை எதிர்கால அப்டேட்டிலேயே வெளியிடப்பட உள்ளன. புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
Photo Courtesy: WABetaInfo
- கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
- கடல்நீரில் மூழ்கி இருந்த ஆப்பிள் வாட்ச் மீட்கப்படும் போதும் சீராக இயங்கும் நிலையில் இருந்தது.
ஆப்பிள் வாட்ச் மாடல்கள் எப்படி பயனர் உயிரை காப்பாற்றுகின்றன என்பதை கூறும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. தற்போது கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் ஆப்பிள் வாட்ச் முன்பு இருந்ததை போன்றே சீராக இயங்கியது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் பாய்மர கப்பலில் பயணம் செய்த ஜெஃபர்சன் ரோச்சா, கடலில் இறங்கி நீந்த திட்டமிட்டார். கடலில் மகிழ்ச்சியாக நீந்திய ரோச்சா, தனது ஆப்பிள் வாட்ச்-ஐ தவறுதலாக கடலில் தொலைத்துவிட்டார். அவர் கடலில் தொலைத்த ஆப்பிள் வாட்ச் மாடல் ஃபைண்ட் மை (Find Me) எனும் அம்சம் கொண்டிருந்தது. எனினும், அது எந்த ஆப்பிள் வாட்ச் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

கடலில் ஆப்பிள் வாட்ச் தவறவிட்டதை அறிந்து கொண்ட ரோச்சா உடனடியாக படகில் ஏறி ஆப்பிள் வாட்ச் ஆஃப் ஆவதற்குள் அதனை 'ஃபைண்ட் மை' அம்சம் மூலம் தேட துவங்கினார். ஃபைண்ட் மை ஆப் மூலம் தேட துவங்கியதும், ஆப்பிள் வாட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. பின் காணாமல் போன மறுநாள் அவருக்கு நோட்டிஃபிகேஷன் அலர்ட் கிடைத்துள்ளது.
அதில் ஆப்பிள் வாட்ச் ஆக்டிவேட் ஆகி இருப்பதாக தகவல் இருந்தது. உடனே லாஸ்ட் மோட்-ஐ ஆக்டிவேட் செய்த ரோச்சா, தனது தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டார். தேடல் முயற்சிக்கு பலன் அளிக்காத நிலையில், வேறு யாரேனும் அதனை கண்டெடுத்தால் தன்னை தொடர்பு கொள்வர் என்றும் ரோச்சா நம்பினார்.

இவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து ரோச்சாவை 16 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு ஆப்பிள் வாட்ச் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆப்பிள் வாட்ச்-ஐ 50 வயது ஓட்டுனர் கண்டெடுத்தார் என்பதை ரோச்சா, அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார்.
இவரது வாட்ச்-ஐ கண்டெடுத்த ஓட்டுனர் பெனோனி அண்டோனியோ ஃபிஹோ மக்கள் தொலைக்கும் பொருட்களை கண்டெடுத்தால், அதனை அவர்களிடம் சேர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் மீட்டெடுத்த ரோச்சாவின் ஆப்பிள் வாட்ச் அதன் முந்தைய நிலையிலேயே சீராக இயங்கியது.
ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 2-வை தொடர்ந்து அறிமுகம் செய்த அனைத்து மாடல்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கி வருகிறது. இது ஆப்பிள் வாட்ச் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரையிலான நீரில் மூழ்கினாலும் சீராக இயங்கும் வசதியை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அதிகபட்சம் 100 மீட்டர்கள் ஆழத்தில் விழுந்தலும் சீராக இயங்கும்.
காணாமல் போன ஆப்பிள் வாட்ச்-ஐ மீட்பது எப்படி?
- ஐபோனில் ஆப்பிள் வாட்ச் செயலியை திறக்கவும்.
- ஆல் வாட்சஸ் ஆப்ஷனில் மை வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- வாட்ச் அருகில் உள்ள இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து, ஃபைண்ட் மை ஆப்பிள் வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஐபோனில் ஃபைண்ட் மை ஆப்-இல் வாட்ச் லொகேஷனை பார்க்க அதற்கான ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆப்பிள் வாட்ச் அருகாமையில் இருப்பதை காண்பித்தால், உடனே பிளே சவுண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Photo Courtesy: Arquivo Pessoal
- செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தற்போது பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?
- தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்த மார்டின் கூப்பர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
மொபைல் போனை கண்டுபிடித்த முதல் நபர் தற்போது எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. செல்போன் தந்தை என்று அறியப்படும் 94 வயதான மார்டின் கூப்பர், உலகின் முதல் செல்போனை கண்டுபிடித்தவர், செல்போனில் முதல் அழைப்பை மேற்கொண்டவர் என்ற பெருமையை கொண்டிருக்கிறார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மார்டின் கூப்பர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இதில் தற்போது அவர் பயன்படுத்தி வரும் புதிய ஸ்மார்ட்போன், அதிநவீன மொபைல் போன் துறை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதன்படி மார்டின் கூப்பர் தற்போது முற்றிலும் புதிய ஐபோன், ஐபோன் 14 சீரிஸ் மாடலை பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படும் முற்றிலும் புதிய ஐபோனினை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய போனினை தொடர்ச்சியாக பயன்படுத்த துவங்கும் முன், அதில் ரோட் டெஸ்ட் செய்கிறார்.
புதிய ஐபோன் மட்டுமின்றி மார்டின் கூப்பர் ஆப்பிள் வாட்ச் ஒன்றையும் பயன்படுத்தி வருகிறார். தனது சாதனங்களை கொண்டு மின்னஞ்சல் பயன்படுத்துவது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, அன்றாட பணிகளை மேற்கொள்து மற்றும் காது கேட்கும் சாதனங்களை இயக்குவது உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறார்.
1928 டிசம்பர் மாத வாக்கில் பிறந்த மார்டின் கூப்பர், கொரிய போரில் அமெரிக்க ராணுவ அதிகாரியாக நீர்மூழ்கி கப்பலில் பணியாற்றி இருக்கிறார். பின் இந்த பணியை விட்டு வெளியேறிய மார்டின் கூப்பர் 1954 வாக்கில் மோட்டோரோலா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மோட்டோரோலா நிறுவனத்தில் மட்டும் 29 ஆண்டுகள் மார்டின் கூப்பர் பணியாற்றி வந்தார்.
மோட்டோரோலா நிறுவனத்திலேயே 1973 வாக்கில், உலகின் முதல் மொபைல் போன்- மோட்டோரோலா டைனாடேக் 8000X மாடலை மார்டின் கூப்பர் உருவாக்கினார். இதை கொண்டு தான் உலகின் முதல் செல்போன் அழைப்பையும் மார்டின் கூப்பர் மேர்கொண்டார்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த சிறப்பு சலுகை ஐபோன் 14 ரெட் நிற வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எண்ட்ரி லெவல் ஐபோன் மாடலை வாங்க நினைப்போருக்கு இந்த சலுகை அதிக பலனுள்ளதாக இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய எண்ட்ரி லெவல் ஐபோன் மாடலுக்கு ஏராளமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சலுகையை பொருத்தவரை ஐபோன் 14 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 68 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. அறிமுகமான போது இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் தளத்தில் சமீபத்திய ஐபோன் மாடலுக்கு ரூ. 11 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

எனினும், இந்த சலுகை ஐபோன் 14 மாடலின் ரெட் நிற வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும். ஐபோன் 14 ரெட் நிற வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரம் ஆகும். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் ஐபோன் 14 வாங்கும் போது ரூ. 4 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் போது, அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் தோன்றும்.
- பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பூர்வ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க டுவிட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன.
அதன்படி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும்.

எனினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் பட்சத்தில், அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.
பிப்ரவரி மாத வாக்கில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.
மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.
இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.
- யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
- தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.
பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.






