என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
- ஐகூ பிராண்டின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது ஐகூ. 2020 வாக்கில் இந்தியாவில் கால்பதித்த ஐகூ பிராண்டு பல்வேறு ஸ்மமார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
ஐகூ இதுவரை அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐகூ நிறுவனத்தின் சமீபத்திய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தலைசிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிநவீன ரேம் மற்றும் மெமரி உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 59 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும், ஆண்டு விழா சிறப்பு விற்பனையை ஒட்டி ஐகூ 11 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐகூ 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஐகூ 9 விலை ரூ. 42 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை ரூ. 30 ஆயிரத்து 990 விலையிலேயே வாங்கிட முடியும். இது ஐகூ 9 ஸ்மார்ட்போனின் பழைய விலையை விட ரூ. 12 ஆயிரம் வரை குறைவு ஆகும். ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ. 64 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஐகூ நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐகூ நியோ 6 5ஜி மாடல் விலை தற்போது ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.
ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஐகூ ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
- டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர். ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார்.

ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது.
- புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும்.
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G13 குறைந்த விலையில் கிடைக்கிறது.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்கிறது.
உலகில் முழுவதிலும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானோருக்கும் அத்தியாவசியமான சாதனமாக மாறிவிட்டது. எனினும், ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. அடிக்கடி புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதால், குறிப்பிட்ட விலை பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது சவாலான காரியமாக இருக்கிறது.
எனினும் ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி, போக்கோ, லாவா, மோட்டோ என பல்வேறு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. போட்டி அதிகரித்து வருவதை அடுத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது மாடல்களில் சிறந்த அம்சம் இருப்பதை உறுதிப்படுத்த பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சக்திவாய்ந்த பிராசஸர்களில் இருந்து, போதுமான ஸ்டோரேஜ், அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேக்கள், சிறந்த கேமராக்கள் என அசத்தல் அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில், ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய மாடல் வாங்க விரும்புவோர் தேர்வு செய்ய சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

மோட்டோ G13
6.5 இன்ச் டிஸ்ப்ளே HD+ ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இந்த மோட்டோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் மோட்டோ G13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

லாவா யுவா 2 ப்ரோ
இந்தியாவில் ரூ. 7 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் இந்த லாவா ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 13MP பிரைமரி கேமராவுடன் இரு விஜிஏ கேமராக்கள், 5MP செல்ஃபி கேமரா, ஸ்கிரீன் ஃபிளாஷ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் அடாப்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

மோட்டோ E13
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. ரூ. 6 ஆயிரத்து 999 எனும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மோட்டோ E13 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 MP1 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ரியல்மி C55
இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C55 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளை சேர்த்தால் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் LCD டிஸ்ப்ள, Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஸ்மார்ட்போனுடன் சியோமி பேட் 6 சீரிஸ் டேப்லெட் மாடல்களும் அறிமுகமாகும் என அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிறுவனம் தற்போது சியோமி 13 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய கேமரா சாதனம் ஒன்றின் டீசரை வெளியிட்டு இருக்கிறார். இந்த சாதனம் ஸ்மார்ட்போனை வழக்கமான கேமரா போன்று பயன்படுத்தும் வசதியை வழங்கும் என அதன் தோற்றத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. புதிய சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சியோமி நிறுவனர் வெளியிட்டு இருக்கும் சாதனம் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது. லெய் ஜூன் வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் உள்ள கேமரா க்ரிப் சாதனம் கொண்டு சியோமி 13 அல்ட்ரா மாடலை பயனர்கள் வழக்கமான கேமராவுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. ஸ்மார்ட்போன் கேமரா விஷயத்தில் சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அதன்படி புதிய சாதனம் நான்கு 50MP பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 1 இன்ச் அளவில் சோனி IMX989 சென்சாருடன் வேரியபில் அப்ரெச்சர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டீசரில் இடம்பெற்று இருக்கும் கேமரா க்ரிப்-இல் பிரத்யேக ஷட்டர் பட்டன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
- ப்ளிப்கார்ட் தளத்தில் சம்மர் சேவர் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புதிதாக சம்மர் சேவர் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது. இன்று (ஏப்ரல் 13) துவங்கிய சிறப்பு விற்பனை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 6a, ஐபோன் 13, நத்திங் போன் 1, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் உள்பட பல்வேறு மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க இருப்போர் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையை பயன்படுத்தி அதிக சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. பிக்சல் 6a மாடல் ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 30 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 66 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் விலை ரூ. 27 ஆயிரத்து 499 என்றும் நத்திங் போன் (1) விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.
- வி நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
- வி மாற்றியமைத்து இருக்கும் இரு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகின்றன.
வி நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 298 விலையில் வழங்கி வரும் இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. டேட்டா மற்றும் காலிங் பலன்களுடன் வி சமீபத்தில் அறிவித்த ரூ. 181 சலுகையை தொடர்ந்து, இரு சலுகை பலன்கள் மாற்றப்பட்டுள்ளது.
ரூ. 129 விலையில் கிடைக்கும் வி சலுகைகள் தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. மாற்றப்பட்ட பலன்களை பொருத்தவரை ரூ. 129 சலுகை தற்போது அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா உள்ளிட்டவை 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

வி ரூ. 298 சலுகை தற்போது 50 ஜிபி 4ஜி டேட்டா, வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள், ஒரிஜினல்ஸ், செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
சமீபத்தில் வி நிறுவனம் ரூ. 181 பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகை 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனினும், இதில் தினமும் 1 ஜிபி டேட்டா அடிப்படையில் வழங்கப்படவில்லை. இவை ஏற்கனவே உள்ள பிரீபெயிட் சலுகையுடன் சேர்த்து பயன்படுத்த முடியும். இது தனி சலுகை என்பதை விட பூஸ்டர் பேக் ஆகும்.
- சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- சியோமி 13 ப்ரோ மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் (ஏப்ரல் 6) துவங்கிய சிறப்பு விற்பனை இம்மாத இறுதிவரை நடைபெற உள்ளது. இதில் சியோமி 13 ப்ரோ மாடலுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது எக்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தும் போது பயனர்களுக்கு அதிகபட்சம் ரூ. 8 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதன்படி சியோமி 13 ப்ரோ விலை ரூ. 71 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இத்துடன் சியோமி மற்றும் ரெட்மி பயனர்களுக்கு கூடுதலாக எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 69 ஆயிரத்து 9990க்கும் கீழ் குறைந்துவிடுகிறது.
சியோமி 13 ப்ரோ அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU
12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி
மெமரி டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
50MP டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
4820 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
- அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
- 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.
உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.
இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்று அழைக்கப்படுகிறது.
- ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனை மையம் மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் ஆப்பிள் விற்பனை மையம் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்றும் டெல்லியில் துவங்கப்பட இருக்கும் ஸ்டோர் ஆப்பிள் சகெட் என்றும் அழைக்கப்படுகிறது.

புதிய ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தினுள் உள்ள பேரிகார்டுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேட்களை தழுவி டிசைன் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் என்ற வகையில் பிரத்யேக கலை வடிவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் பிகேசி சார்பில் டுடே அட் ஆப்பிள் எனும் சீரிஸ் 'மும்பை ரைசிங்' என்ற பெயரில் அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முதல் நாளில் இருந்து ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஆப்பிள் சகெட்டுக்காக பிரத்யேக ஆப்பிள் மியூசிக் பிளே லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் உருவாகி இருக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோரான ஆப்பிள் பிகேசி ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் சகெட் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
- இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.
கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...


ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்
- விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை முழுமையாக கைப்பற்றும் பணிகளில் டாடா குழுமம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இம்மாத இறுதியில் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறும் என கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்து இருக்கும் விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலையில் பாகங்களை ஒருங்கிணைக்கும் எட்டு அசெம்ப்ளி லைன்கள் உள்ளன. ஆலையை கையகப்படுத்தியதும் டாடா குழுமம் ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவை மாற்ற முடியும். ஏற்கனவே விஸ்ட்ரன், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் விஸ்ட்ரன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கும் நிலையில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன.
மத்திய அரசு இந்தியாவை உற்பத்தி களமாக மாற்றும் திட்டத்தை ஊக்குவித்து வருவதோடு, ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற நினைப்பதை அடுத்து டாடா குழுமம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதும், டாடா குழுமம் பெகட்ரான் உற்பத்தி ஆலைகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.






