என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். 

    அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது. 

    இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம். 



    கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும். 

    இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். 

    இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம். 

    புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதுவரை இந்த அப்டேட் பெறாதவர்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம். 

    லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.
    ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் கூகுள் பிக்சல் 2 (64 ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.13,898 விலையில் வாங்க முடியும்.
    புதுடெல்லி:

    ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை திருவிழா மே 13-ம் தேதி துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், அக்சஸரி உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கூகுள் பிக்சல் 2 (64 ஜிபி) ஸ்மார்ட்போன் சிறந்த சலுகைகளில் ஒன்றாக இருக்கிறது.

    இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், வாடிக்கையாளர்கள் ரூ.13,898 விலையில் இந்த ஸ்மார்ட்போனினை பெற முடியும்.

    பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை துவங்கிய மே 13-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை ரூ.42,999 விலையில் வாங்க முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்கும் போது ரூ.8000 வரை கேஷ்பேக் சேர்த்து ரூ.34,999 விலையில் வாங்க முடியும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.99 கூடுதலாக செலுத்தி பைபேக் கியாரண்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ப்ளிப்கார்ட் பைபேக் கியாரண்டி சலுகையில் ஸ்மார்ட்போனுக்கு 88% தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    பைபேக் கியாரண்டி சலுகையில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.21,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பயன்படுத்திய 6 முதல் 8 மாதங்களுக்குள் புதிய ஸ்மார்ட்போனினை வாங்க நினைத்தால், பிக்சல் 2 எக்சேஞ்ச் செய்து ரூ.21,200 வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் பிக்சல் 2 விலை ரூ.13,898 ஆக குறையும்.

    இந்த சலுகையை கூகுள் பிக்சல் 3 அல்லது மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பயன்படுத்தலாம். ஒருவேலை பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை 9 முதல் 12 மாதங்களில் திரும்ப வழங்கும் போது புதிய ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.18,250 வரை தள்ளுபடி பெற முடியும். 

    ப்ளிப்கார்ட் வழங்கும் பைபேக் சலுகை ஒரு வருடத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை 12 மாதங்களுக்குள் திரும்ப வழங்கி புதிய ஸ்மார்ட்போனினை வாங்க முடியும். இவ்வாறு எக்சேஞ்ச் செய்யும் போது புதிய ஸ்மார்ட்போனின் விலை எக்சேஞ்ச் தொகையை விட அதிகமாக இருக்க வேண்டும். 
    கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. 

    அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.



    இத்துடன் கூகுள் மேப்ஸ் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் கேமராவை காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும். 

    இந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அனிமேஷன் பொம்மைகளையும் மேப்ஸ் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். 



    இந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கம்ப்யூட்டரில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் டிஜிட்டல் துணையாக விளங்கும். 

    இதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை மேப்ஸ் பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டு இதற்கான அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன.
    புதுடெல்லி:

    கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைத்தளமான யூடியூப் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. 

    அந்த வகையில் யூடியூப் செயலியை பயன்படுத்துவோர் முன்கூட்டியே இடைவெளி காலத்தை நிர்ணயித்து யூடியூபிடம் தெரிவிக்கலாம். இதன் மூலம் நீண்ட நேரம் யூடியூப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட கால அளவில் இடைவெளி எடுக்க முடியும். யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் (Take a Break) அம்சம் இந்த வசதியை வழங்குகிறது.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் யூடியூப் செயலியை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யூடியூப் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இடைவெளி காலத்தை ஒவ்வொரு 15, 30, 60, 90 அல்லது 180 நிமிடங்களுக்கு தேர்வு செய்ய முடியும். வாடிக்கையாளர் இந்த கால அளவை தேர்வு செய்ததும், குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் வீடியோ தானாக பாஸ் (Pause) ஆகி விடும். 



    இனி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இடைவெளி எடுக்கவோ அல்லது தொடர்ந்து வீடியோக்களை பார்க்கவோ முடியும். விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கிடைக்கும் இந்த ஆப்ஷனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும் முடியும். இத்துடன் இரண்டு புதிய அம்சங்கள் யூடியூப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் டிசேபிள் சவுன்ட்ஸ் & வைப்ரேஷன்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேர்வு செய்ததும் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்திற்கு யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. ஷெட்யூல்டு டைஜஸ்ட் எனும் மற்றொரு அம்சம் வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் அனுப்பும்.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான யூடியூப் (13.17.55) பதிப்பில் டேக் எ பிரேக் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தை யூடியூப் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- டேக் எ பிரேக் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இதேபோன்று நோட்டிஃபிகேஷன் அம்சம் செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

    புதிய அப்டேட் கொண்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் புதியவை, இவை வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் இருக்க உதவுகிறது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் திட்டம் சார்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.
    கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கூகுள் அசிஸ்டண்ட் அப்டேட் இருந்தது.
    கலிஃபோர்னியா:

    கூகுளின் I/O 2018  நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கூகுள் அசிஸ்டண்ட் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்தது.

    டூப்லெக்ஸ் என அழைக்கப்படும் புதிய சேவை அறிமுகமானது முதல் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. விரைவில் டர்னிங் டெஸ்ட் தேர்ச்சி பெற இருக்கும் டூப்லெக்ஸ் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். டர்னிங் டெஸ்ட் என்பது இயந்திரங்கள் மனிதர்களுக்கு இணையாக அவர்களுடன் பேசும் திறனை பெற்றிருப்பதை சோதனை செய்வதாகும்.

    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்த டூப்லெக்ஸ் அம்சம் மருத்துவமனை, முடி திருத்தும் நிலையம் போன்ற இடங்களுக்கு உங்கள் சார்பில் அழைப்புகளை மேற்கொண்டு முன்பதிவுகளை உறுதி செய்யும் வசதியை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த அம்சம் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போன்றே கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.



    முன்பதிவுகளுக்கு நீங்கள் பேச வேண்டிய இடத்தில் உங்களுக்கு பதில் உங்களின் குரலாக செயற்கை நுண்ணறிவு அம்சம் இயங்குகிறது. மறுமுனையில் பேசுவோர் டூப்லெக்ஸ் தானாக அறிவிக்கும் வரை மனிதர்கள் தான் பேசுகின்றனர் என்று எண்ணும் வகையில் மிக நேர்த்தியாக இந்த அம்சம் வேலை செய்கிறது.

    கூகுள் I/O விழாவில் அறிமுகமானதும், இந்தளவு நேர்த்தியாக பேசும் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு சில சூழல்களில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்ற வகையில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

    அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் அம்சம் வழங்கப்படும் போது, அழைப்பை மேற்கொள்வது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் என்பதை டூப்லெக்ஸ் தெரியப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    "கூகுள் டூப்லெக்ஸ் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று - தொழில்நுட்பத்தில் வெளிப்படத்தன்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் இயந்திரம் தான் பேசுகிறது என்பதை தெரியப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டு, அனைவரும் மிக எளிமையாக இதனை அறிந்து கொள்ளும் வகையில் இது இருக்கும். கூகுள் I/O 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது முதற்கட்ட டெமோ தான், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது டூப்லெக்ஸ் சிஸ்டத்தில் முறையான பதில் வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்படும்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    இயந்திரங்கள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வரும் அப்டேட்களில் மனித குரலில் இருந்து இயந்திர குரல் முற்றிலும் வித்தியாசப்படுத்தப்படும் என்றும் டூப்லெக்ஸ் சிஸ்டம் மூலம் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் கூகுள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கூகுள் I/O 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட டூப்லெக்ஸ் அம்சம் துவக்க நிலையில் தான் இருக்கிறது. பெருமளவு அம்சங்கள் சேர்க்கப்பட்டும், மாற்றப்பட்டு முதற்கட்டமாக டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின் தான் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டூப்லெக்ஸ் வழங்கப்படும்.

    கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் கீநோட் வீடியோவை கீழே காணலாம்..,


    ஒன்பிளஸ் ப்ரியர்கள் தங்களுக்கான ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை ரூ.1000 கேஷ்பேக் சலுகையுடன் பெற ஃபாஸ்ட் ஏஎஃப் எனும் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் இந்தியா ஃபாஸ்ட் ஏஎஃப் (Fast AF) விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா தளத்தில் ரூ.1000 மதிப்புடைய இ-கிஃப்ட் கார்டுகளை மே 13 முதல் மே 16-ம் தேதி வரை வாங்க வேண்டும். இதை கொண்டு மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் ஒன்பிளஸ் 6 வாங்க பயன்படுத்த முடியும். 

    இந்த கிஃப்ட் கார்டுகளை கொண்டு ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.1000 மதிப்புடைய கேஷ்பேக் தொகையை அமேசான் பே பேலென்ஸ் கணக்கில் பெற முடியும். இத்துடன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் ஒரு வருட வாரண்டியுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது. 



    ஒன்பிளஸ் கேஷ்பேக் தொகையை பெறுவது எப்படி?

    - ரூ.1000 ஒன்பிளஸ் 6 அமேசான் இந்தியா இ-கிஃப்ட் கார்டினை ஃபாஸ்ட் ஏஎஃப் விற்பனையில் வாங்க வேண்டும்.

    - மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் ஒன்பிளஸ் 6 வாங்கும் போது கிஃப்ட் கார்டினை ரிடீம் செய்து, அமேசான் பே கணக்கில் ரூ.1000 கேஷ்பேக் பெற முடியும்.

    - இதன்மூலம் ஒன்பிளஸ் 6 வாங்குவோர் ரூ.2000 மதிப்புடைய சலுகையை பெற முடியும். இத்துடன் அறிமுக தின சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கிகள் சார்பில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    - மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் ஒரு வருட வாரண்டியுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி பெற முடியும்.

    முன்னதாக ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வுக்கு கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுகள் விற்பனை துவங்கிய நான்கு நிமிடங்களில் நிறைவுற்றன. மே 17-ம் தேதி நடைபெற இருக்கும் ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வினை நேரலையில் பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வை தொடர்ந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பாப்-அப் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இங்கு ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை குறிப்பிட்ட நகரங்களில் அனுபவிக்கவும் முதலில் வாங்கவும் முடியும்.
    பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.

    இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட்  பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார். 

    ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
    கூகுள் I/O 2018 நிகழ்வின் முதல் நாளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் கூகுள் மேப்ஸ் தளத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    கலிஃபோர்னியா:

    கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது. 

    கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றியமைக்கப்படுவதாகவும், இனி அருகாமையில் இருக்கும் புதிய மற்றும் வித்தியாசமானவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். இனி மேப்ஸ் சேவையை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளை தேடும் போது அங்கு இருக்கும் பிரபல உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க முடியும்.

    இத்துடன் டிரென்டிங் லிஸ்ட்கள் மற்றும் நீங்கள் உணவு பிரியர் (Foodie) என்றால், டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை பட்டியலிட்டு காண்பிக்கும், மேலும் உள்ளூர் வாசிகள் வழங்கும் தகவல்கள், கூகுள் அல்காரிதம்கள் மற்றும் நம்பத்தகுந்த பதிப்பகங்கள் வழங்கும் தகவல்களை கொண்டு புதிய உணவகங்களை அறிந்து கொள்ள முடியும்.



    கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் மற்றொரு புதிய அம்சமாக யுவர் மேட்ச் (Your Match)  இருக்கிறது. இந்த அம்சம் நீங்கள் புறப்படும் இடத்தில் எந்தளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் இதற்கான காரணங்களையும் குறிப்பிட்ட உணவு அல்லது பானங்களை டேப் செய்ததும் வழங்கும். மெஷின் லேர்னிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுள் இந்த தகவல்களை வழங்குகிறது. 

    இதற்கு அடிப்படையாக நீங்கள் தேர்வு செய்திருக்கும் விருப்பங்களையும், நீங்கள் செல்லும் பகுதிகள் மற்றும் பல்வேறு இதர தகவல்களை கொண்டு வழங்குகிறது. இந்த பட்டியல் நீங்கள் விரும்பும் மாற்றங்களுக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் குழுவாக வெளியே செல்லும் போது முன்கூட்டிய திட்டமிட ஏதுவாக குறிப்பிட்ட இடங்களை அழுத்தி பிடித்து தேர்வு செய்ய வேண்டும், இதனை மற்றவர்கள் விரும்பும் பட்சத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதனால அதிகம் பேர் விரும்பும் பகுதிகளை அறிந்து கொண்டு விரைவில் செல்ல வேண்டிய இடத்தை முடிவு செய்ய முடியும். 



    நீங்கள் புறப்பட வேண்டிய இடத்தை தேர்வு செய்ததும், அங்கு முன்பதிவு செய்ய வேண்டிய வேலையை கூகுள் உங்களுக்காக செய்து முடிக்கும். ஃபார் யு (For You) என்ற அம்சம் உங்களது பகுதியின் அருகாமையில் நடக்கு்ம புதிய தகவல்களை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கும், இதை கொண்டு அருகாமையில் உள்ள தலைசிறந்த இடங்களுக்கு சென்று வர முடியும். 

    கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிள்ப்கார்ட் வலைத்தளத்தின் அதிகபட்ச பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-இன் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அமெரிக்க நிறுவன வியாபாரத்தில் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது. வால்மார்ட் மற்றும் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனங்கள் இணைந்து பிளிப்கார்ட் தளத்தின் சுமார் 75% பங்குகளை வாங்க இருப்பதாக இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

    பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட் பிளிப்கார்ட் தளத்தின் சுமார் 60% பங்குகளையும், ஆல்ஃபாபெட் சுமார் 15% பங்குகளை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200 கோடி) என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 51% பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் வால்மார்ட் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி), பிளிப்கார்ட் மொத்த மதிப்பு 18 முதல் 20 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.21 லட்சம் முதல் ரூ.1.34 லட்சம் கோடி) என தெரிவிக்கப்பட்டது.

    பிளிப்கார்ட் தலைமை அதிகாரி பின்னி பன்சால் மற்றும் நிறுவனத்தின் மூத்த தலைமை அதிகாரிகள் பெங்களூரு தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும், பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையே ஒப்பந்தம் உறுதியானதும், பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.
    இந்திய வான் எல்லைகளில் பறக்கும் விமான பயணிகள் விமானத்தில் இருந்தபடி ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். #facebook #fligh
    புதுடெல்லி:

    இந்திய வான் எல்லைககளில் பறக்கும் விமான பயணிகள் விரைவில் தங்களது மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போன்களை விமானத்தில் இருந்தபடி பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை சமீபத்தில் வழங்கியுள்ளது.

    அந்த வகையில் விமானத்தில் இருந்தபடி அழைப்புகளை மேற்கொள்வது, மின்னஞ்சல், ஃபேஸ்புக் போன்ற சேவைகள் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்டவற்றை பறக்கும் போதே பார்த்து ரசிக்கலாம். இதுவரை விமானத்தில் கால் வைக்கும் போது பயணிகள் தங்களின் மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் போன்ற மின்சாதனங்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கோரிய விமான நிறுவனங்கள் விரைவில் இவ்வாறான அறிவிப்புகளை வழங்காது.

    இது எப்படி சாத்தியமாகிறது. இந்த தொழில்நுட்பம் குறித்த பலரின் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.



    விமானத்தினுள் கனெக்டிவிட்டி என்றால் என்ன?

    விமானத்தினுள் கனெக்டிவிட்டி (In-flight connectivity) சிஸ்டம்கள் பொதுவாக இருவித தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. முதலில் ஆன்போர்டு ஆன்டெனா தரையின் அருகாமையில் உள்ள டவரில் இருந்து சிக்னல்களை பெறும். தரையில் இருக்கும் டவர்களின் உதவியின்றி குறிப்பிட்ட கோணத்தில் விமானம் பறக்கும் வரை சீரான இணைப்பு கிடைக்கும்.

    இரண்டாவதாக சாட்டிலைட்கள் மூலம் சிக்னல்கள் விமானத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆன்டெனாக்களுக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்த வழிமுறை விமானம் தரையில் இருக்கும் நெட்வொர்க்களை விட தண்ணீரின் மேல் பறக்கும் போது சிறப்பாக வேலை செய்யும்.



    அடுத்து என்ன நடக்கும்?

    விமானத்தில் இருக்கும் ஆன்டெனாக்களுக்கு சிக்னல் கிடைக்க பெற்றதும், பயணிகளின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் போன்ற மின்சாதனங்களுக்கு ரவுட்டர் மூலம் இன்டர்நெட் வசதி வழங்கப்படும். இந்த ரவுட்டர் விமானத்தில் உள்ள ஆன்டெனாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

    சாட்டிலைட்கள் உதவியுடன் ஆன்டெனா சிக்னல்களை தரையில் இருக்கும் மையத்திற்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் அவை பில்லிங் சர்வெர் மூலம் திருப்பியனுப்பப்படுகிறது. பில்லிங் சர்வெர் டேட்டா பயன்பாட்டு அளவை கணக்கிடும் வேலையை செய்கிறது.

    ஒருவேளை இன்டர்நெட் இணைப்பு வைபை மூலம் வழங்கப்படும் பட்சத்தில் பயணிகள் தங்களது மின்சாதனங்களை இன்-ஃபிளைட் அல்லது ஏர்பிளேன் மோடில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். இங்கு விமானத்தில் உள்ள ஆன்டெனாக்கள் டெலிகாம் சேவை நிறுவனங்களுடன் இணைந்து கொள்ளும்.
     
    விமானம் தரையில் இருந்து 3000 அடி உயரத்திற்கு கிளம்பியதும், ஆன்டெனா சாட்டிலைட் சார்ந்த சேவைகளுக்கு மாற்றப்படும். இதனால் பல்வேறு நெட்வொர்க்களில் மாறும் போதும் சீரான இணைய வசதியை பயணிகளுக்கு வழங்க முடியும். இந்த சேவையை வழங்க விமான நிறுவனங்கள் இஸ்ரோ அல்லது வெளிநாட்டு சாட்டிலைட்களின் உதவியை நாடலாம்.



    இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

    இந்த தொழில்நுட்பம் இயங்க விமான நிறுவங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சர்வெர் மற்றும் சாட்டிலைட் சிக்னல்களை டேட்டா பாக்கெட்களாக மாற்றும் உபகரணங்களை விமானத்தில் பொருத்த வேண்டும். இத்துடன் சீரான சேவையை வழங்குவதற்கு ஏற்ப உபகரணங்களை வைக்க வேண்டும்.

    விமானம் ஒரு சாட்டிலைட்டில் இருந்து மற்றொன்றிற்கு மாறும் போது பொதுவாக இன்டர்நெட் இணைப்பு தடைப்படலாம். பொதுவாக தரையில் உள்ள வைபை சேவைகளை விட விமானத்தில் கிடைக்கும் வைபை வேகம் குறைவாகவே இருக்கும். எனினும் புதுவித தொழில்நுட்பங்களின் வரவு இந்த நிலையை மாற்றலாம்.



    இதற்கான கட்டணம் அதிகமாகுமோ?

    விமானத்தில் இன்ஸ்டால் செய்யப்படும் உபகரணங்களுக்கான அடிப்படை கட்டணங்களை விமான பயணிகள் ஏற்க வேண்டியிருக்கும். இதனால் விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களில் உபகரணங்களை இன்ஸ்டால் செய்வது எளிமையாக இருக்கும்.

    இதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் விமான பயணச்சீட்டு கட்டணத்தில் சேர்க்கப்படலாம். விமானத்தில் உயர் ரக உபகரணங்களை இன்ஸ்டால் செய்வதால், குறைந்த கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

    இந்தியாவில் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த சேவையை இந்திய எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் ஏற்கனவே வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    புகைப்படம்: நன்றி Small Cells Everywhere, iPass
    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2018 முதல் காலாண்டு விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. இதில் ஐபோன் X விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2018 முதல் காலாண்டில் ஐபோன் X அதிகம் விற்பனையாகியுள்ளது. ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின் படி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன. 

    ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் 5 இடங்களில் இடம்பிடித்த ஒற்றை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சியோமியின் ரெட்மி 5ஏ இருக்கிறது. நான்காவது இடத்தில் ஐபோன் 7 இருக்கிறது.



    புகைப்படம்: நன்றி Strategy Analytics
    2018 முதல் காலாண்டில் சுமார் 16 லட்சம் யூனிட் விற்பனையான ஐபோன் X மட்டும் 5% பங்குகளை பெற்றிருப்பதாக ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் 1.25 கோடி ஐபோன் 8 யூனிட்களை விற்பனை செய்து ஒட்டுமொத்த சந்தையின் 3.6% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    இதைத் தொடர்ந்து ஐபோன் 8 மாடல் சுமார் 83 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சந்தையில் 2.4% பங்குகளை பெற்றிருக்கிறது. ஐபோன் 7 சுமார் 56 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது.

    இண்டாவது காலாண்டு துவங்கியிருக்கும் நிலையில், ஐபோன் X தொடர்ந்து உலகின் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. அதிசிறந்த வடிவமைப்பு, கேமரா, புதுவித செயலிகள் மற்றும் பரவலாக விற்பனைக்கு கிடைப்பது உள்ளிட்டவை இந்த மாடலுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது என ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் நிறுவன மூத்த ஆய்வாளர் ஜூஹா வின்டர் தெரிவித்துள்ளார்.

    ஐபோன் X சர்வதேச விற்பனை நவம்பர் 2017-இல் துவங்கிய நிலையில், இதுவரை சுமார் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் டாப் 5 இடத்தை பிடித்த ஒற்றை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் சியோமி ரெட்மி 5ஏ சுமார் 54 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 
     

    கோப்பு படம்: சியோமி ரெட்மி 5ஏ

    சீனாவில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அறிமுக சலுகையாக முதல் 50 லட்சம் யூனிட்களுக்கு பேஸ் வேரியன்ட் விலை ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த அறிமுக சலுகை மார்ச் மாதத்துடன் நிறைவுற்றது.

    ஸ்டிராடெஜி அனாலிடிக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சர்வதேச சந்தையில் விற்பனையான டாப் 7 ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பிடித்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சுமார் 53 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
    ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் சார்ந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோர் அதிகபட்சம் ரூ.2 கோடி வரை வெல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்துவோருக்கு இன்டெராக்டிவ் ஆன்லைன் கேம் அனுபவத்தை வழங்குகிறது. ஏர்டெல் டிவி செயலியில் நடக்கும் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்டு தற்சமயம் நடைபெறும் ஐபிஎல் கிரிகெட் தொடர்ந்து சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 

    போட்டியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு தினசரி ரொக்க பரிசு மற்றும் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையிலான தொகையை வாடிக்கையாளர்கள் வென்றிட முடியும் என ஏர்டெல் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் ('Airtel TV Free Hit Live') கேமிங் அனுபவம் இரண்டு விதங்களில் கிடைக்கிறது. ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் நான்-லைவ் இது தினமும் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் லைவ் வெர்ஷன் போட்டி நடைபெறும் போதே நடத்தப்படும்.

    ஏர்டெல் நடத்தும் ஐபிஎல் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்து போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் தற்சமயம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது.

    ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும். இந்த போட்டியில் டிஜிட்டல் தொகுப்பாளர் ஒன்றும் இருக்கும். இந்த போட்டியை விளையாட வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியில் தினமும் இரவு 7.30 மணிக்கு லாக்-இன் (Log In) செய்ய வேண்டும். 



    செயலியில் காணப்படும் டிஜிட்டல் தொகுப்பாளர் ஐபிஎல் டி20 தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கும். போட்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். டி20 போட்டிகளின் போது செயல்படும் இந்த போட்டியில் கலந்து கொள்வோருக்கு லைஃப் எனும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு போட்டியாளர்கள் எலிமினேஷனை தவிர்க்க முடியும்.

    இத்துடன் போட்டியை முழுமையாக பார்ப்போருக்கு லைவ்ஸ் ஆப்ஷன் நீட்டிக்கப்படும், இதை போட்டியாளர்கள் அடுத்த போட்டிகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட், நான்-லைவ் வெர்ஷன் போட்டி ஒவ்வொரு டி20 போட்டி துவங்கும் போதும் ஆக்டிவேட் ஆகும். வீட்டில் இருந்தபடி போட்டியை பார்த்து ரசிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என உருவாக்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்கள் போட்டியினை சரியாக கணித்து உடனடியாக பரிசு தொகையை வென்றிட முடியும்.

    போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும். போட்டியின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்படும் இலக்கை அடையும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை தினமும் பகிர்ந்து வழங்கப்படும். இரண்டு போட்டிகளிலும் வென்றிடும் வெற்றியாளர்கள் நோட்டிஃபிகேஷன் மூலம் அறிவிக்கப்படுவர்.
    ×