என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் பிளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    விரைவில் பிளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    பிள்ப்கார்ட் வலைத்தளத்தின் அதிகபட்ச பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-இன் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அமெரிக்க நிறுவன வியாபாரத்தில் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது. வால்மார்ட் மற்றும் கூகுளின் ஆல்ஃபாபெட் நிறுவனங்கள் இணைந்து பிளிப்கார்ட் தளத்தின் சுமார் 75% பங்குகளை வாங்க இருப்பதாக இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

    பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட் பிளிப்கார்ட் தளத்தின் சுமார் 60% பங்குகளையும், ஆல்ஃபாபெட் சுமார் 15% பங்குகளை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200 கோடி) என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 51% பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் வால்மார்ட் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி), பிளிப்கார்ட் மொத்த மதிப்பு 18 முதல் 20 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.21 லட்சம் முதல் ரூ.1.34 லட்சம் கோடி) என தெரிவிக்கப்பட்டது.

    பிளிப்கார்ட் தலைமை அதிகாரி பின்னி பன்சால் மற்றும் நிறுவனத்தின் மூத்த தலைமை அதிகாரிகள் பெங்களூரு தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும், பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையே ஒப்பந்தம் உறுதியானதும், பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×