என் மலர்

  செய்திகள்

  ரூ.2 கோடி பரிசு வழங்கும் ஏர்டெல் டிவி ஆப்
  X

  ரூ.2 கோடி பரிசு வழங்கும் ஏர்டெல் டிவி ஆப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் சார்ந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோர் அதிகபட்சம் ரூ.2 கோடி வரை வெல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்துவோருக்கு இன்டெராக்டிவ் ஆன்லைன் கேம் அனுபவத்தை வழங்குகிறது. ஏர்டெல் டிவி செயலியில் நடக்கும் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்டு தற்சமயம் நடைபெறும் ஐபிஎல் கிரிகெட் தொடர்ந்து சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 

  போட்டியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு தினசரி ரொக்க பரிசு மற்றும் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையிலான தொகையை வாடிக்கையாளர்கள் வென்றிட முடியும் என ஏர்டெல் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் ('Airtel TV Free Hit Live') கேமிங் அனுபவம் இரண்டு விதங்களில் கிடைக்கிறது. ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் நான்-லைவ் இது தினமும் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் லைவ் வெர்ஷன் போட்டி நடைபெறும் போதே நடத்தப்படும்.

  ஏர்டெல் நடத்தும் ஐபிஎல் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்து போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் தற்சமயம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது.

  ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும். இந்த போட்டியில் டிஜிட்டல் தொகுப்பாளர் ஒன்றும் இருக்கும். இந்த போட்டியை விளையாட வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியில் தினமும் இரவு 7.30 மணிக்கு லாக்-இன் (Log In) செய்ய வேண்டும்.   செயலியில் காணப்படும் டிஜிட்டல் தொகுப்பாளர் ஐபிஎல் டி20 தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கும். போட்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கும் சரியான பதில் வழங்கும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். டி20 போட்டிகளின் போது செயல்படும் இந்த போட்டியில் கலந்து கொள்வோருக்கு லைஃப் எனும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு போட்டியாளர்கள் எலிமினேஷனை தவிர்க்க முடியும்.

  இத்துடன் போட்டியை முழுமையாக பார்ப்போருக்கு லைவ்ஸ் ஆப்ஷன் நீட்டிக்கப்படும், இதை போட்டியாளர்கள் அடுத்த போட்டிகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட், நான்-லைவ் வெர்ஷன் போட்டி ஒவ்வொரு டி20 போட்டி துவங்கும் போதும் ஆக்டிவேட் ஆகும். வீட்டில் இருந்தபடி போட்டியை பார்த்து ரசிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என உருவாக்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்கள் போட்டியினை சரியாக கணித்து உடனடியாக பரிசு தொகையை வென்றிட முடியும்.

  போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும். போட்டியின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்படும் இலக்கை அடையும் போட்டியாளர்களுக்கு பரிசு தொகை தினமும் பகிர்ந்து வழங்கப்படும். இரண்டு போட்டிகளிலும் வென்றிடும் வெற்றியாளர்கள் நோட்டிஃபிகேஷன் மூலம் அறிவிக்கப்படுவர்.
  Next Story
  ×