என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நெக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது.
கடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் தனது அபெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விவோ ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஹால்ஃப்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மற்றும் பாப்-அப் வகையிலான செல்ஃபி கேமரா கொண்டிருக்கும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கான்செப்ட் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்னதாக முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட்ட நிலையில், சீன வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசரில் புதிய ஸ்மார்ட்போன் நெக்ஸ் என அழைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. புதிய டீசரின் படி விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம், ஹால்ஃப்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் இதர அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் பிரீமியம் வேரியன்ட் பாப்-அப் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY 4999 (இந்திய மதிப்பில் ரூ.52,600) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY 3798 (இந்திய மதிப்பில் ரூ.40,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை 5.99 இன்ச், 18:9 ரக டிஸ்ப்ளே, 8 எம்பி பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஏப்ரல் 2018-இல் சேர்த்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஏப்ரல் 2018-இல் சேர்த்துள்ளன. இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் அதிகபட்சமாக 55.5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடியா செல்லுலார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 21.67 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சேவை வழங்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் சுமார் 104.9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இவற்றில் ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, எம்டிஎன்எல் மற்றும் டெலினார் நிறுவனங்களும் அடங்கும். என செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பு படம்
இம்மாதம் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டெலிகாம் துறையில் சீரான கனெக்டிவிட்டி நாடு முழுக்க வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ராஜன் எஸ் மேத்யூ தெரிவித்தார்.
இந்தியாவில் 30.86 கோடி வாடிக்கையாளர்களுடன் பாரதி ஏர்டெல் நிறுவனம் முன்னணி இடத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் இந்தியா சுமார் 22.2 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய செல்லுலார் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களில் 12 இடங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 6.64 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வோடபோன் சேவையை பயன்படுத்தியதில் 2.42 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சலுகை வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சாம்சங் இந்தியா நிறுவனங்கள் இணைந்து சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேஷ்பேக் மற்றும் இதர சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளன.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி தூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. செப்டம்பர் 30, 2018 வரை கிடைக்கும் இந்த சலுகையில் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு உடனடி கேஷ்பேக் ரூ.2,750 (ரூ.50 மதிப்புள்ள 55 வவுச்சர்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதேபோன்று கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கும் ரூ.2,750 (ரூ.50 மதிப்புள்ள 55 வவுச்சர்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியாவில் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செயய்ப்பட்டன. தற்சமயம் அறிவிக்கப்பட்டிருப்பதை போன்ற அறிமுக சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த சலுகை தற்சமயம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஜெ2 டுயோ ஸ்மார்ட்போனும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனுக்கு எவ்வித அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டவில்லை.
விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த டிராய் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை முறைப்படுத்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை வழங்கியுள்ளது.
இதன் மூலம் விளம்பரம் குறுந்தகவல்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்ய முடியும். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விளம்பர கொள்கையின் மூலம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தகவல் பரிமாற்றங்களை செய்யும் வாடிக்கைாயளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.
2010-ம் ஆண்டு முதல் இதுவரை மட்டும் சுமார் 23 கோடி வாடிக்கையாளர்கள் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. எனினும் பதிவு செய்யப்படாத விளம்பர நிறுவனங்கள் சார்பில் எண்ணற்ற அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக அமைகிறது. சமீப காலங்களில் இதுபோன்ற விளம்பர அழைப்புகள் அதிகரித்து இருக்கிறது.

கோப்பு படம்
டிராய் பரிந்துரை செய்திருக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பம் க்ரிப்டோகிராஃபி முறையில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாத்து, அவசியம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவற்றை வழங்கும் படி செய்யும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வழிமுறையில் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றோர் மட்டுமே தகவல்களை இயக்க முடியும் அதுவும் சேவையை வழங்கும் போது மட்டுமே இவை வழங்கப்படும்.
புதிய தொழில்நுட்பம் சார்ந்த விதிமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களிடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பிளாக்செயின் பயன்படுத்துவது சார்ந்த பரிந்துரை மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மீதான விவாதங்கள் ஜூன் 11-ம் தேதி முதல் துவங்கும் என டிராய் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா நியூகினியா:
பப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்படும் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.
“எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.
ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.
அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தபட்சம் ரூ.3799 முன்பணமாக செலுத்தினால் போதும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் (www.airtel.in/onlinestore) கிடைக்கிறது. இவற்றுடன் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் மாத தவனை முறையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1499 முதல் துவங்குகிறது.

3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வலைத்தளத்தில் ரூ.3799 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். இதன் பின் 12 மாதங்களுக்கு ரூ.1,499 மாத தவனையாக செலுத்த வேண்டும். இவற்றுடன் பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.
நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும். முந்தைய நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அதே போஸ்ட்பெயிட் சலுகைகள் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்படுகிறது.

நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாதம் 50 ஜிபி டேட்டா, ரோல்ஓவர் சலுகை, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, இலவச ஏர்டெல் டிவி சந்தா மற்றும் ஏர்டெல் செக்யூர் டிவைஸ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோர், அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்துக்கு சென்று சாதனத்தை தேர்வு செய்து, முன்பணம் செலுத்தலாம். ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு, ஆக்டிவேட் ஆனதும் போஸ்ட்பெயிட் சலுகை தானாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3600 கோடிகளை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். எனினும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரனை முடிவில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 3600 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
காப்புரிமை விவகார வழக்கின் தீர்ப்பு குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பணத்தையும் தான்டிய விவகாரம் ஆகும். வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அதிம் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாச மற்றும் புதுவித சாதனங்களை வழங்குவதற்கென எங்களது குழுவினர் அயராது உழைக்கின்றனர். என தெரிவித்துள்ளது.

கோப்பு படம்
ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.
காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
ஐபோன் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றியவர்களுக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டிருந்த பேட்டரிக்கள் ஐபோன்களின் வேகத்தை குறைத்து, அவற்றை வேண்டுமென்றே ஷட் டவுன் செய்ய வைத்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமாய் வெடித்த நிலையில் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.
இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேட்டரி மாற்றுவோருக்கு ஆப்பிள் சார்பில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை மாற்றுவோருக்கு ரூ.3900 கிரெடிட் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஆப்பிள் வழங்கும் தொகையை பெற தகுதி உள்ளவர்களுக்கு பேட்டரியை மாற்றும் போது இந்த தொகை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு மே 23-ம் தேதி முதல் மின்னஞ்சல் வாயிலாக ஆப்பிள் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கோப்பு படம்
இந்த விவகாரத்தில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட மாடல்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31, 2018 வரை ஐபோன் 6 அல்லது அதற்கும் அதிக மாடல்களை பயன்படுத்திய வாடிக்கையாளர்ளில் வாரன்டி இல்லாமல் தங்களது பேட்டரிகளை மாற்றியிருந்தால் இந்த சலுகையில் தகுதியுடையவர்களாவர் என ஆப்பிள் நிறுவனம் புதிதாய் துவங்கியுள்ள சப்போர்ட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் பேட்டரியை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் மாற்றியவர்களுக்கு மட்டுமே கிரெடிட் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரன்டியில் உள்ள ஐபோன் பேட்டரிகளை மாற்றியவர்களுக்கும் இது பொருந்தும்.
ஆப்பிள் கிரெடிட் திட்டத்திற்கு தகுதியுடைவர்களுக்கு மே 23-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் ஆப்பிள் நிறுவனம் தொடர்பு கொள்ளும். ஒருவேளை ஆப்பிள் சார்பில் தொடர்பு கொள்ளப்படவில்லை எனில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தை அனுகலாம்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் நைட் மோட், ரிட்வீட், லைக் எண்ணிக்கை, ரிப்ளை சார்ந்த அப்டேட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ட்வீட் கம்போஸ் பாக்ஸ் மிக எளிமையாக ட்வீட் மற்றும் டைம்லைன் ஆப்ஷன்களிடையே செல்ல வழி செய்கிறது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் ஏற்கனவே கிடைக்கும் நிலையில் மற்ற தளங்களுக்கும் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. இந்த மோட் ட்விட்டர் தீம் நிறத்தை இருளிக்கி இரவு நேரங்களில் பயன்படுத்தும் போதும் கண்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
ட்விட்டர் மொபைல் தளத்தில் ரியல்-டைம் ட்வீட் ரிப்ளைக்கள், ரீட்வீட்கள், லைக் உள்ளிட்டவற்றை பார்க்க அடிக்கடி ரீலோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. புதிய அப்டேட் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டு ரீலோடு செய்யாமலேயே ரியல்-டைம் அப்டேட்களை பார்க்க முடியும்.
ட்விட்டரில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ட்விட்டர் லைட், ட்விட்டர் விண்டோஸ் தளங்களிலும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு அனிமேஷன் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.
கவலை வேண்டாம், அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கியுள்ளது. புதிய பொம்மை கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். ஸ்வாப் செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம்.
இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் ஐஓஎஸ் பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், அசிஸ்டண்ட் உள்ளிட்ட சில அம்சங்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் புதிய அம்சங்கள் அவ்வப்போது சிறிய அப்டேட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.
இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க '@' குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் '+' குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம்.
பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

கோப்பு படம்
சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.
புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.
உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:
தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். ஆனாலும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியுள்ளது.
எட்டு ஆண்டு கால பிரச்சனையில் இம்முறை ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.

காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2012-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
பின் பல்வேறு மேல்முறையீடுகளில் சாம்சங் நிறுவனம் 45 கோடி டாலர்களை செலுத்த உத்தரவிடப்பட்டது. மீதம் இருந்த 100 கோடி டாலர்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் இறுதியாக 54.8 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் சார்பில் சாம்சங் சுமார் 39.9 கோடி டாலர்களை வழங்க வேண்டும் என வாதாடி வருகிறது. முதல் காப்புரிமை ஒட்டுமொத்த மொபைல் போன் சார்ந்தது என்பதால் 100 கோடி டாலர்களை சாம்சங் வழங்க வேண்டும் என ஆப்பிள் கேட்டுள்ளது. ஆனால் சாம்சங் சார்பில் 2.8 கோடி டாலர்களை மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.






