என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கூகுள் நிறுவனம் இந்தியாவில் குழந்தைகளுக்கென புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை சொல்லிக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. #BoloApp #Google



    கூகுள் நிறுவனம் குழந்தைகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் அம்சம் கொண்ட ஆண்ட்ராய்டு செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. போலோ என அழைக்கப்படும் இந்த செயலியை கூகுளின் ஸ்பீச் மற்றும் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.  

    குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகள் உச்சரிப்பில் தவறு செய்யும் போது அவர்களை சரி செய்கிறது. குழந்தைகளுக்கு தனிப்பட்ட டியூஷன் டீச்சர் போன்று வாசிக்க சொல்லிக் கொடுக்கும் வகையில் போலோ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 40 ஆங்கில கதைகளும், 50 இந்தி கதைகளை போலோ ஆப் கொண்டிருக்கிறது. குழந்தைகளில் வாசிக்கும் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு கதைகளிலும் கடினத்தன்மை மாறுபடும். இத்துடன் செயலியினுள் சுவாரஸ்ய வார்த்தை விளையாட்டுகளில் பங்கேற்று குழந்தைகள் இன்-ஆப் ரிவார்டு மற்றும் பேட்ஜ்களை வென்றிட முடியும்.



    பல்வேறு குழந்தைகள் ஒன்றிணைந்து ஒரே செயலியில் பங்கேற்று, அவர்களது தனிப்பட்ட திறமையை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் தியா ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும் சொற்களை மட்டும் வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், விரைவில் மற்ற மொழிகளில் இயங்கும் படி இந்த செயலியில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

    செயலி ஆஃப்லைனிலும் சீராக இயங்குகிறது. இதனால் குழந்தைகள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த முடியும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனிப்பட்ட விவரங்கள் குறிப்பிட்ட சாதனத்தினுள் சேமிக்கப்படுகிறது. போலோ ஆப் தற்சமயம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு இந்தியா முழுக்க பீட்டா முறையில் கிடைக்கிறது.

    கூகுளின் போலோ ஆப் தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. #Nokia2 #Smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கியிருக்கிறது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 2017 ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

    நோக்கியா 2 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்குவதற்கென ஹெச்.எம்.டி. குளோபல் கூகுள் மற்றும் குவால்காம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. புதிய இயங்குதளம் ஸ்மார்ட்போனில் சீராக இயங்க வைக்க மேனுவல் முறையில் அப்டேட் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. 



    நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் செய்வது எப்படி?

    நோக்கியா 2 ஆண்ட்ராய்டு அப்டேட் பக்கத்திற்கு செல்லவும்.
    நோக்கியா அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும்.
    சாதனத்தை IMEI குறியீடு கொண்டு வேலிடேட் செய்ய வேண்டும்.
    நெட்வொர்க் ஆப்பரேட்டர் பெயரை பதிவிட வேண்டும்.
    லொகேஷனை சேர்க்க வேண்டும்.
    “Android Oreo for Nokia 2 software license terms” விதிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
    நிறைவுற்றதும் Request OTA பட்டனை க்ளிக் செய்யவும்.
    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ OTA அப்டேட் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

    நோக்கியா 2 ஸ்மார்ட்போனினை வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்திருக்கிறது. 
    இணையதளம் பயன்படுத்தும் அனைவரும் சிலசமயம் எரர் 522 என்ற வலைப்பக்கத்தை நிச்சயம் பார்த்திருப்பர். இது ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். #Internet



    இணையத்தில் பிரவுசிங் செய்யும் போது சில வலைதளங்களில் எரர் 522 (Error 522) எனும் வலைப்பக்கம் திறப்பதை பலரும் பார்த்திருப்போம். 

    பொதுவாக வலைதளங்களை பயன்படுத்தும் போது மூன்று கட்டங்களை கடந்தே அவை நம் பார்வைக்கு திரையில் தோன்றும். முதலில் பயனர் தரப்பில் இருந்து இணையம் வழியாக குறிப்பிட்ட வலைதள முகவரியின் சர்வெருக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு சர்வெரில் இருந்து பயனர் பதிவிட்ட வலைதளம் திறக்கும். 

    இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான வலைதளங்கள் இதேபோன்று செயல்படுகின்றன. அந்த வகையில், சில சமயங்களில் வலைதளங்களில் ஹேக்கிங் அல்லது மால்வேர் தாக்குதல் நடந்திருந்தால் வலைதளம் திறக்காமல் போகும். இதுபோன்ற சூழல்களில் ஹேக்கர்கள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கு ஏற்ப எரர் (பிழை) ஏற்பட்டு அது பயனர் கணினி அல்லது மொபைலில் பிரதிபலிக்கும்.



    அந்த வகையில் எரர் 522 (Error 522) எனும் பக்கத்தை பார்க்க நேர்ந்தால், குறிப்பிட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில் வலைதளத்தின் பின்னணியில் செயல்படும் ஹோஸ்ட் (வலைதளம் சேமிக்கப்பட்டிருக்கும் தளம்) செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். 

    இவ்வாறு இணையத்தில் நீங்கள் தேட முற்படும் வலைதளங்களின் ஹோஸ்ட் முடக்கப்பட்டிருந்தால், எரர் 522 பக்கம் திரையில் தோன்றும். இதேபோன்று ஹோஸ்ட் தவிர பல்வேறு நிலைகளில் வலைதளங்கள் வழக்கம்போல் இயங்கவிடாமல் ஹேக்கிங் செய்ய முடியும்.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. #Messenger



    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் புதிய டார்க் மோட் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

    மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஃபேஸ்புக் அறிவித்தது. விரைவில் வெளியாகும் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தாலும், இந்த அம்சம் கிடைக்க நான்கு மாதங்களாகி விட்டது. சில மாதங்களாக சோதனையில் இருந்து வந்த டார்க் மோட் அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படாமலே இருந்தது.

    தற்சமயம் இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும், அனைத்து தளங்களிலும் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், செக் குடியரசு, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் டார்க் மோட் வழங்கப்பட்டிருப்பதாக ரெடிட் பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.



    இந்தியாவிலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் டார்க் மோட் வசதி சீராக வேலை செய்கிறது. மெசஞ்சரில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்ய சாட் ஸ்கிரீனில் நிலா எமோஜியை அனுப்பினாலே போதுமானது. புதிய டார்க் மோட் பரவலாக வழங்கப்பட்டிருக்கிறது. 

    இதனால் புதிய அம்சம் மிகவிரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தெரிகிறது. முழு சோதனை நிறைவுறதாதை வெளிப்படுத்தும் விதமாக டிஸ்ப்ளே முழுக்க இருளாகாது. மேலுமமம் பயனர்கள் எமோஜியை அனுப்பியதும்  "You Found Dark Mode!" என தெரியும். 

    இதுதவிர டார்க் மோட் திரை முழுக்க இருளாகாமல், சிலபகுதிகளில் கருப்பு நிறமில்லாமல், வெள்ளையாக காட்சியளிக்கிறது. மெசஞ்சரின் அடுத்தடுத்த அப்டேட்களில் இது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக வளர்ந்து வரும் டிக்டாக் அமெரிக்கா வத்தக சபையில் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. #TikTok



    இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலி சமீபத்தில் 100 கோடி டவுன்லோடுகளை கடந்ததாக அறிவித்தது. இந்நிலையில், டிக்டாக் செயலி அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை விதிகளை மீறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

    13 வயதிற்கும் குறைவான குழந்தைகளிடம் இருந்து தகவல்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அந்நிறுவனம் 57 லட்சம் டாலர்களை அபராதமாக செலுத்த அமெரிக்க வர்த்தக சபை உத்தரவிட்டது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்துவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.



    மியூசிக்கல்.லி என்ற பெயரில் அறியப்பட்டு பின் டிக்டாக் என்ற வடிவில் இயங்கி வரும் செயலி சிறுவர்கள் பதிவிடும் தகவல்களை பதிவு செய்ததாக அமெரிக்க வர்த்த சபை குற்றம்சாட்டியது. 100 கோடி பேர் பயன்படுத்தி வரும் டிக்டாக் செயலியில் குறிப்பிட்ட சதவிகிதம் (அமெரிக்காவில் 65 லட்சம் பேர்) 13 வயதுக்கும் குறைவானோர் ஆகும்.

    டிக்டாக் செயலியை அதிக சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்த போதும், டிக்டாக் நிர்வாகம் பெற்றோர் அனுமதியின்றி சிறுவர்களிடம் தகவல்களை பெற்றதாக வர்த்தக சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அபராத தொகை மற்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

    டிக்டாக் செயலியில் இளைஞர்கள் பிரபல வீடியோக்களில் அவரவர் விரும்பும் பகுதியில் 15 விநாடிகளுக்கு லிப்-சின்க் செய்து அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அமெரிக்க வர்த்தக சபையின் விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என பிரத்யேகமாக தனி செயலியை உருவாக்குவதாக டிக்டாக் அறிவித்துள்ளது. இந்த செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளாது.
    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #FoldableiPhone



    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் என இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

    இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் விண்ணப்பித்திருக்கும் படிவத்தில் ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கீல் (ஹின்ஜ்) வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    அதன்படி மடிக்கக்கூடிய ஐபோனில் கீல் மூலம் மடங்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை சிறிதளவு சூடாக வைக்க சாதனத்தின் உள்புறம் சூடேற்றும் அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் டிஸ்ப்ளேக்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.



    குளிர்ச்சியாக இருக்கும் நிலையில் டிஸ்ப்ளேக்கள் மடிக்கப்படும் போது அவை உடையாமல் இருக்க அவை சிறிதளவு சூடேற்றப்படும் என ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. மடிக்கக்கூடிய பகுதி இலுமினேட்டிங் பிக்சல்கள் மூலம் தானாக சூடேற்றப்படும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    காப்புரிமை விண்ணப்பத்தில் இருக்கும் வடிவமைப்பு ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோனில் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தை ஆப்பிள் டிசம்பர் 2017 இல் சமர்பித்து இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனினை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Patently Apple
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. 

    வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. 

    இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.

    இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    பிரபல ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான க்விக் ஹீல் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 28 போலி செயலிகளை நீக்கியிருக்கிறது. #QuickHeal #Google



    கூகுள் பிளே ஸ்டோரில் குறைந்தபட்சம் சுமார் 48,000 பேர் வரை இன்ஸ்டால் செய்திருந்த 28 செயலிகளை கூகுள் நீக்கியிருக்கிறது. இந்த செயலிகள் போலியாக இயங்கி வந்தது கண்டறியப்பட்டதால் இவை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. 

    பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் அவற்றின் டிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டிருந்த படி இயங்கவில்லை என்றும், அவை வழங்கிய பெயருக்கு ஏற்றவாரு செயல்படவில்லை என கூகுள் தெரிவித்திருக்கிறது. நீக்கப்பட்டிருக்கும் 28 செயலிகளையும் சர்வேஷ் டெவலப்பர் என்ற ஒரே டெவலப்பர் உருவாக்கி இருக்கிறார்.

    நீக்கப்பட்ட போலி செயலிகள் பெரும்பாலும் நிதி சார்ந்த சேவைகளையும், ஸ்டிக்கர், டிப்ஸ் மற்றும் வெப் ஹோஸ்டிங், டி.என்.எஸ். உள்ளிட்டவை ஆகும். போலி செய்திகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்ட க்விக் ஹீல் பிளே ஸ்டோரில் இருந்த போலி செயலிகளை கண்டறிந்தது.

    பின் போலி செயலிகள் பற்றிய விவரங்களை க்விக் ஹீல் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பியது. நீக்கப்பட்ட 28 செயலிகள் முழுக்க அதிகப்படியான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்ததோடு, பயனர்களின் திரை முழுக்க விளம்பரங்களை காட்சிப்படுத்தி வந்தன. அனைத்து செயலிகளும் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்ததாக க்விக் ஹீல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Quick Heal

    கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலில் ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட அம்சங்களை சில செயலிகள் வழங்கவில்லை என்றும் க்விக் ஹீல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலிகள் பயனர்களுக்கு ஏதேனும் பணியை கொடுத்து அவர்களுக்கு வருவாய் ஈட்டச்செய்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி பயனர்கள் இந்த செயலிகளில் தோன்றும் விளம்பரங்களை பார்க்கவும், சில செயலிகளை கூடுதலாக இன்ஸ்டால் செய்து அவற்றில் சில விளம்பரங்களை க்ளிக் செய்ய வேண்டும். சில செயலிகள் பயனர்கள் பத்து புள்ளிகளை பெற்றால் பேடிஎம் மூலம் பணம் பெறலாம் என்ற வாக்கில் விளம்பரம் செய்திருக்கின்றன. 

    எனினும், இவ்வாறு செய்த பின்பும் பயனர்களுக்கு பேடிஎம் மூலம் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பயனர்கள் முழு புள்ளிகளை பெற்றாலும், மீண்டும் பழைய இணையபக்கம் திறப்பதாக பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
    ஃபேஸ்புக் நிறுவன சேவையில் பேக்கிரவுண்டு லொகேஷன் டிராக்கிங்கை பிளாக் செய்வதற்கென புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வருகிறது. சர்ச்சைகளில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் ஃபேஸ்புக் தற்சமயம் புதிய செட்டிங்களை தனது சேவையில் இணைத்திருக்கிறது. 

    முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய செட்டிங்களை கொண்டு பயனர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க முடியும். செட்டிங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள், பயனர் செயலியை பயன்படுத்தாத சமயத்தில் இரண்டடுக்கு முறையில் உங்களது இருப்பிட விவரங்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும். 



    முதலாவதாக பயனர் தனது இருப்பிட விவரங்களை இயக்க ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் இரண்டாவதாக பின்னணியில் தகவல்களை சேகரிக்கலாமா என ஃபேஸ்புக் பயனரிடம் கேட்கும். சேவையை பயன்படுத்தாத போது ஏன் பின்னணி தகவல்களை சேகரிக்க வேண்டும் என்கிறீர்களா?

    இவ்வாறு தகவல்களை சேகரிப்பதன் மூலம் அருகாமையில் இருக்கும் நண்பர்கள், செய்ய வேண்டியதற்கான பரிந்துரைகள் மற்றும் குறிப்பாக பனர்களின் அருகாமையில் இருப்பவர் பற்றி பரிந்துரைக்க முடியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு, ஆப்பிள் பின்னணியில் தகவல்களை சேகரிக்கும் வசதியை வழங்கியிருக்கிறது. இதனால் ஃபேஸ்புக் இதற்கென தனியே அப்டேட் வழங்கி வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களின் லொகேஷன் செட்டிங்களை மாற்ற வேண்டுமா என கேட்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging



    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பவர்கள் காப்புரிமையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வரைபடங்களை பார்க்கும் போது ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் போன்று தெரிகிறது.

    இது ஏர்பவர் சார்ஜிங் மேட் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. சார்ஜிங் மேட்களை கொண்டு வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.  ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி ஏர்பாட்ஸ் கேசை ஏர்பவர் சாதனத்தின் மேல் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். 


    புகைப்படம் நன்றி: uspto

    ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உருவாக்குவதற்கென பல்வேறு காப்புரிமைகளை ஆப்பிள் பெற்றிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் மற்றும் கூடுதல் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனங்களை அறிமுகம் செய்தது.

    2018 ஆம் ஆண்டு இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்பாட்ஸ் கடந்த ஆண்டு விற்பனைக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகின. 

    சமீபத்தில் வெளியான தகவல்களில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனம் சந்தா முறையிலான செய்தி சேவையை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் நன்கொடை வழங்க ஏதுவாக புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க முடியும். #Instagram #Apps



    ஃபேஸ்புக் 2019 திட்டங்களில் வணிகம் மிகமுக்கிய பங்குவகிக்கும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் உறுதி செய்திருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் புதிய ஸ்டிக்கர் சேர்க்கப்படுகிறது.

    ஃபேஸ்புக்கின் டொனேட் பட்டன்கள் மூலம் இதுவரை 100 கோடி டாலர்கள் வரை திரட்டப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் ஆண்ட்ராய்டு செயலியில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் புதிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. தொண்டு காரியங்களுக்காக நிதி வழங்கியதும், அதே கட்டண விவரங்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் இதர பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.



    ஆண்ட்ராய்டு செயலியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் கோடுரளில், பயனர்கள் எவ்வாறு தொண்டு நிறுவனங்களை தேடி அவற்றை தொடர்பு கொள்ளலாம் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இனி பயனர்கள் டொனேட் பட்டன் ஸ்டிக்கரை தங்களது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு செய்ததும் ஃபாளோவர்கள் ஸ்டோரியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். ஃபேஸ்புக்கில் பண பரிமாற்றங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனினும், அதிக தொகை கொடுத்து வர்த்தகம் செய்யும் போது வணிக நிறுவனங்கள் விளம்பரங்களை வாங்க முடியும். 

    இன்ஸ்டாகிராமில் நிதியுதவி வழங்கும் வசதி ஆரம்பகட்டத்தில் தான் இருக்கிறது. விரைவில் இன்ஸ்டாகிராம் கொண்டு மக்கள் நிதி திரட்டி தொண்டு நிறுவனங்களுக்கு உதவ முடியும். என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
    ட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ட்விட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #Twitter #SocialMedia
    ட்விட்டர் சமூக வலைதளம் என்றாலே பிரபலங்களின் வெரிஃபைடு அக்கவுண்ட் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ட்விட்டரை அதிகளவு பயன்படுத்துவோர் பிரபலங்கள் தான் என நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

    பல லட்சம் ஃபாளோவர்களை பெற்று ட்விட்டரில் பிரபலங்களாக அறியப்படுவோர் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றுவர். ஆனால் குறைந்த ஃபாளோவர்களுடன் அவ்வப்போது சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தீவிரமாக ட்விட்டர் பயன்படுத்துகின்றனர் என வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதவிர இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களை விட, குறைந்தபட்சம் 100 முதல் 200 ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களே ட்விட்டர் தளத்தை அதிகளவு சரியாக பயன்படுத்துகின்றனர் என்கிறது வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வு.

    ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிக ஃபாளோவர்களை வைத்திருப்பவர்களை விட, குறைந்தளவில் மிக சரியான தொடர்புகளை வைத்திருப்போரை பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என வெர்மாண்ட் நடத்திய ஆய்வு முடிவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.



    சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் ஆபத்து காலங்களில் அதிகளவு ட்விட்களை பதிவிட்டிருந்தனர். இவர்கள் பதிவிடும் பெரும்பாலான ட்விட்கள் மிகமுக்கிய தகவல்களை கொண்டிருந்ததாக ஆய்வுக் குழுவை சேர்ந்த பெஞ்சமின் எமிரி தெரிவித்தார்.

    இவ்வாறாக பயனர்கள் குறைந்தளவு ஃபாளோவர்களை கொண்டிருந்தாலும், இவர்களது ஃபாளோவர்கள் பெரும்பாலும் அதிகளவு நண்பர்கள், குடும்பத்தார் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வாறு நெருங்கிய உறவுகள் ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பலருக்கும் கொண்டு செல்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இயற்கை பேரிடர் போன்ற ஆபத்து காலங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் மீட்பு பணிகள் அல்லது நிவாரண பொருட்கள் பற்றியே அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றனர். #Twitter #SocialMedia
    ×