search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது?
    X

    இணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது?

    இணையதளம் பயன்படுத்தும் அனைவரும் சிலசமயம் எரர் 522 என்ற வலைப்பக்கத்தை நிச்சயம் பார்த்திருப்பர். இது ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். #Internet



    இணையத்தில் பிரவுசிங் செய்யும் போது சில வலைதளங்களில் எரர் 522 (Error 522) எனும் வலைப்பக்கம் திறப்பதை பலரும் பார்த்திருப்போம். 

    பொதுவாக வலைதளங்களை பயன்படுத்தும் போது மூன்று கட்டங்களை கடந்தே அவை நம் பார்வைக்கு திரையில் தோன்றும். முதலில் பயனர் தரப்பில் இருந்து இணையம் வழியாக குறிப்பிட்ட வலைதள முகவரியின் சர்வெருக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு சர்வெரில் இருந்து பயனர் பதிவிட்ட வலைதளம் திறக்கும். 

    இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான வலைதளங்கள் இதேபோன்று செயல்படுகின்றன. அந்த வகையில், சில சமயங்களில் வலைதளங்களில் ஹேக்கிங் அல்லது மால்வேர் தாக்குதல் நடந்திருந்தால் வலைதளம் திறக்காமல் போகும். இதுபோன்ற சூழல்களில் ஹேக்கர்கள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கு ஏற்ப எரர் (பிழை) ஏற்பட்டு அது பயனர் கணினி அல்லது மொபைலில் பிரதிபலிக்கும்.



    அந்த வகையில் எரர் 522 (Error 522) எனும் பக்கத்தை பார்க்க நேர்ந்தால், குறிப்பிட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சூழலில் வலைதளத்தின் பின்னணியில் செயல்படும் ஹோஸ்ட் (வலைதளம் சேமிக்கப்பட்டிருக்கும் தளம்) செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். 

    இவ்வாறு இணையத்தில் நீங்கள் தேட முற்படும் வலைதளங்களின் ஹோஸ்ட் முடக்கப்பட்டிருந்தால், எரர் 522 பக்கம் திரையில் தோன்றும். இதேபோன்று ஹோஸ்ட் தவிர பல்வேறு நிலைகளில் வலைதளங்கள் வழக்கம்போல் இயங்கவிடாமல் ஹேக்கிங் செய்ய முடியும்.
    Next Story
    ×