என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சலுகை கட்டணங்களும் சமீபத்தில்உயர்த்தப்பட்டன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் ரூ. 199 முதல் துவங்குகிறது. இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப் நெட் நிமிடங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 149 சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 300 ஆஃப் நெட் நிமிடங்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன சேவைகளுடன் ஒப்பிடும் போது தினசரி டேட்டா வழங்கும் குறைந்த விலை சலுகையாக இது இருக்கிறது. தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகையின் விலை ரூ. 219 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும்.
வோடபோன் ரூ. 249 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் போன்று வோடபோன் சலுகையிலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 சீரிஸ் மாடல்களில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய குறைபாடு மூலம் ஆப்பிள் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் லொகேஷன் சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் லொகேஷன் விவரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என தெரிவித்துள்ளது.
ஐபோன் 11 சீரிஸ் மாடல்களில் யு1 சிப் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப் அல்ட்ரா பேண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது பல்வேறு வைடு பேண்ட் சாதனங்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும். இதன் மூலம் ஆப்பிள் ஏர் டிராப் கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

ஆப்பிள் சேகரிக்கும் தகவல்கள் சாதனத்தில் மட்டும் நடைபெறுகிறது, விவரங்கள் எதுவும் சர்வெருக்கு அனுப்பப்படுவதில்லை. எதிர்காலத்தில் வரும் ஐ.ஒ.எஸ். அப்டேட்களில் இந்த அம்சத்தை செயலிழக்கச் செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சில ஆராய்ச்சியாளர்கள் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முயன்று ஆப்பிள் வாடிக்கையாளர் விவரங்களை சேகரிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். எனினும், ஆப்பிள் ஏன் இந்த விவகாரத்திற்கு உடனடியாக பதில் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
செல்போன் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான ஏர்டெல் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் விற்பனை மூலம் 300 கோடி டாலர்கள் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் 2019 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.23,044 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.119 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இந்நிலையில் இந்நிறுவனம் பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் 300 கோடி டாலர் திரட்ட தயாராகி உள்ளது.

பெரும் இழப்பு ஏற்பட்டதை தொடர்து ஏர்டெல் நிறுவனம் தனது சேவை கட்டணங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து, சில தினங்களுக்கு முன் புதிய விலை பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஏர்டெல் தனது சேவை கட்டணங்களின் விலையை 40 சதவீதம் வரை உயர்த்தியது.
ஏர்டெல் மட்டுமின்றி வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களும் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தி புதிய விலை பட்டியலை வெளியிட்டன.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பார்தி ஏர்டெல் பங்கு ரூ.464.20-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.445.05-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.447.20-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.96 சதவீத சரிவாகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவை கட்டணங்கள் 39 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வந்தன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன.
இதன்படி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினமும் 1½ ஜி.பி. டேட்டா, ஒரு மாத திட்டத்துக்கான கட்டணம் ரூ.153-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

புதிய சலுகையின் படி ரூ. 199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ரூ. 249 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்களும், ரூ. 349 – தினமும் 3 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ. 399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்களும், ரூ. 444 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்களும் வழங்கப்படுகிறது. ரூ. 555 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ரூ. 2199 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
ரூ. 129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 329 விலை சலுகையில் 6 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 1299 சலுகையில் 24 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
சலுகைகளில் ஜியோ பிரைம் பலன்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசாவன், ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி, ஜியோகிளவுட் மற்றும் ஜியோஹெல்த்ஹப் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 6-ம் தேதி முதல் பயன்படுத்தலாம்.
பில் கேட்ஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வைரல் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மகளுடன் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சிறுகதையுடன் சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாக வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படத்தில், பில் கேட்ஸ் உணவகம் ஒன்றில் உணவுக்கான கட்டணத்துடன் 5 டாலர்கள் டிப்ஸ் வழங்கினார். உடனே உணவு பரிமாறிய ஊழியர் பில் கேட்ஸ்-ஐ வினோதமாக பார்த்தார். பில் கேட்ஸ் என்ன ஆனது என கேட்டார். ஊழியர்: உங்களது மகள் 500 டாலர்கள் டிப்ஸ் வழங்கினார், உலக பணக்காரரான நீங்கள் வெறும் 5 டாலர்கள் வழங்கியுள்ளீர்கள் என கூறினார். இதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த பில் கேட்ஸ், அவர் உலக பணக்காரரின் மகள், நான் மரம் வெட்டுபவரின் மகன். கடந்த காலத்தை என்றும் மறக்காதீர்கள், அது உங்களின் சிறந்த ஆசான்! என குறிப்பிடப்பட்டுள்ளது.


வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் உள்ள தகவல்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உண்மையில் நடைபெற்றதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், பில் கேட்ஸ் மரம் வெட்டுபவரின் மகன் இல்லை என உறுதியாகியுள்ளது.
பில் கேட்ஸ் தனது வாழ்க்கை குறிப்பில் தன் தந்தை வில்லியம் ஹெச். கேட்ஸ் என்பதும் அவர் வழக்கறிஞர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார் என பில் கேட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.
பில் கேட்ஸ் தாயார் மேரி கேட்ஸ், வாஷிங்டன் ரீஜென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் பில் கேட்ஸ் தந்தை பற்றிய உண்மை தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் வந்த குறுந்தகவலை நம்பி ரூ.8 லட்சம் பணத்தை இழந்த வாலிபர், தன் பணத்தை மீட்டுத்தரக் கோரி காவல் துறை உதவியை நாடியுள்ளார்.
அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுண் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ராஜா. இவரது மனைவி சகாய அனிஷா. இவர் நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவரின் செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் வாட்ஸ்அப் குளோபல் அவார்டு வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
மேலும் வாட்ஸ்அப்பில் அவருக்கு பரிசு தொகையாக ரூ.2 ¾ கோடி பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு பரிசு தொகையை பெற வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும் படி கூறப்பட்டிருந்தது.
எனது கணவரும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அந்த எண்ணில் பேசியவர்கள், என் கணவரிடம் பரிசு தொகையை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். இதற்காக அவர்கள் வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்தனர். அந்த வங்கி கணக்குக்கு என் கணவர் அவரது பாங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமும், வங்கி மூலமும் பல தவணைகளாக ரூ. 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 பணம் செலுத்தினார்.

பணம் பெற்றுக் கொண்டவர்கள் எங்களுக்கு பரிசு தொகையை கொடுக்கவில்லை. அதன்பின்பு தான் அவர்கள் எங்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. எங்களை ஏமாற்றி ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 600 பண மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் லைசா சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் புகாரில் குறிப்பிட்ட நாக்பூர் நபர்கள் ராகுல், நெல்சன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி இதுபோன்ற மோசடிகள் நாடு முழுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு அடிக்கடி அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். இதுபோன்ற தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மோசடி நபர்கள் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை வாட்ஸ்அப்பில் பரப்பி பணம் பறிக்க முயற்சிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுபோல வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு ரகசிய எண்களை கேட்டும் பண மோசடி நடக்கிறது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும் ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் உஷாராக இருக்கும்படி போலீசார் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் இன்னும் தங்களின் உழைப்பால் சேர்த்த பணத்தை இழந்து வரும் சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவன சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியல் முழு விவரங்களை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது சேவைகளின் கட்டணத்தை உயர்த்தியது. புதிய விலை டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலாகிறது. டெலிகாம் சந்தையில் கடந்த காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக வோடபோன் ஐடியா அறிவித்து இருக்கிறது.
புதிய விலைப்பட்டியலின் படி அன்லிமிட்டெட் சலுகைகள் ரூ. 149 முதல் துவங்கி, ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 249 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரூ. 299 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன.
84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ. 379, ரூ. 599 மற்றும் ரூ. 699 விலையில் கிடைக்கின்றன. அதன்படி ரூ. 379 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு மாதத்திற்கு 6 ஜி.பி. டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

வருடம் முழுக்க வேலிடிட்டி வழங்கும் இரு சலுகைகளை ரூ. 1499 மற்றும் ரூ. 2399 விலையில் வழங்குகிறது. இதில் ரூ. 1499 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மாதத்திற்கு 24 ஜி.பி. டேட்டா, 3600 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 2399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் சலுகை தவிர குறுகியகால சாஷெட் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 19 முதல் துவங்குகிறது. ரூ. 19 சலுகையில் வோடபோன் ஐடியாவில் இருந்து வோடபோன் ஐடியா எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 150 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் சலுகை வேண்டாம் என்போருக்கு காம்போ வவுச்சர் சலுகை வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 49 மற்றும் ரூ. 79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பலன்களை பொருத்தவரை ரூ. 49 சலுகையில் ரூ. 38 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 79 சலுகையில் ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா மற்றும் அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் ரூ. 97, ரூ. 197, ரூ. 297 மற்றும் ரூ. 647 விலையில் ரீசார்ஜ் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 97 சலுகையில் ரூ. 45 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ. 197 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 297 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 647 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.ெஸ். வழங்கப்படுகிறது.
புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 3-ம் தேதியில் இருந்து பயன்படுத்த முடியும். இவற்றை மைவோடபோன் அல்லது மைஐடியா செயலி மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
கேரளாவில் ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்த நபருக்கு டைல்ஸ் பார்சல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாடு முழுவதும் அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சுரேஷ் என்பவர் நவீன கேமரா வாங்க விரும்பினார். இதற்காக ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தில் கேமரா கேட்டு பதிவு செய்தார்.
இதற்காக ரூ.27 ஆயிரத்து 500 பணமும் செலுத்தினார். விஷ்ணு சுரேசுக்கு ஒரு வாரத்தில் பார்சல் மூலம் கேமரா வந்து சேருமென நிறுவனம் தகவல் தெரிவித்தது. நிறுவனம் கூறியபடி, விஷ்ணுசுரேசுக்கு ஒரு வாரத்தில் கேமரா பார்சல் வந்தது. அதை திறந்து பார்த்த விஷ்ணு சுரேஷ், அதிர்ச்சி அடைந்தார்.

பார்சலுக்குள் கேமராவுக்கு பதில் டைல்ஸ் இருந்தது. இதுபற்றி விஷ்ணு சுரேஷ் உடனடியாக ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். நிறுவனத்தினர் தவறுக்கு வருந்துவதாகவும், புதிய கேமரா பார்சலை அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாகவும் உறுதி கூறினர்.
வழக்கமாக இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடப்பது உண்டு. இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமே பொருட்கள் வாங்க தொடங்கிய பின்பு இத்தகைய மோசடிகள் குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கேரளாவில் இதுபோன்ற பார்சல் மோசடி நடந்திருப்பது வாலிபர்கள், பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக ரூ.27 ஆயிரத்து 500 பணமும் செலுத்தினார். விஷ்ணு சுரேசுக்கு ஒரு வாரத்தில் பார்சல் மூலம் கேமரா வந்து சேருமென நிறுவனம் தகவல் தெரிவித்தது. நிறுவனம் கூறியபடி, விஷ்ணுசுரேசுக்கு ஒரு வாரத்தில் கேமரா பார்சல் வந்தது. அதை திறந்து பார்த்த விஷ்ணு சுரேஷ், அதிர்ச்சி அடைந்தார்.

பார்சலுக்குள் கேமராவுக்கு பதில் டைல்ஸ் இருந்தது. இதுபற்றி விஷ்ணு சுரேஷ் உடனடியாக ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். நிறுவனத்தினர் தவறுக்கு வருந்துவதாகவும், புதிய கேமரா பார்சலை அடுத்த ஒரு வாரத்திற்குள் அனுப்புவதாகவும் உறுதி கூறினர்.
வழக்கமாக இதுபோன்ற மோசடிகள் அவ்வப்போது நடப்பது உண்டு. இப்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்து ஏராளமானோர் ஆன்லைன் மூலமே பொருட்கள் வாங்க தொடங்கிய பின்பு இத்தகைய மோசடிகள் குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கேரளாவில் இதுபோன்ற பார்சல் மோசடி நடந்திருப்பது வாலிபர்கள், பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன சொத்து மதிப்பு புதிய உச்சத்தை கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறார். எண்ணை சுத்திகரிப்பு ஆலை, கியாஸ் ஆலை, ஜியோ டெலிபோன் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு படி 1 பங்கின் விலை ரூ. 1579.95 காசாக உயர்ந்தது. அதாவது இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 41.2 சதவிகிதம் உயர்ந்தது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் அடிப்படையில் அவற்றின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனமும் ரூ.10 லட்சம் சொத்து மதிப்பை எட்டியது இல்லை. இந்தியாவில் 2-வது மிகப்பெரிய நிறுவனமாக செயல்படும் டி.சி.எஸ்.சின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 501 கோடியாக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியின் மதிப்பு ரூ.6 லட்சத்து 92 ஆயிரம் கோடியாக உள்ளது. 4-வது இடத்தில் உள்ள இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய ஜியோ போன் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்திருப்பதால் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தும் அதிகளவில் உயர்ந்திருக்கிறது. அதாவது இன்றைய மதிப்புபடி அவருக்கு தனிப்பட்ட முறையில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.
இதன் மூலம் அவர் உலகின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த தடவை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் அவர் 13-வது இடத்தில் இருந்தார். இப்போது பங்கு மதிப்பு உயர்வால் பட்டியலில் முந்தி இருக்கிறார்.
அவருடைய தனிப்பட்ட சொத்து மட்டும் இந்த ஆண்டில் இதுவரை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கூடுதலாக உயர்ந்திருக்கிறது. இது 37 சதவிகித வளர்ச்சி ஆகும். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கு முந்தைய இடத்தில் இருந்து டேவிட்கோச், சார்லஸ் கோச், லேரிபேச் உள்ளிட்டோரை முந்தி இருக்கிறார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.10 லட்சம் கோடி சொத்து என்பது குவைத், உக்ரைன் உள்ளிட்ட 153 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் ஒரு ஆண்டு செலவில் 5-ல் 1 பங்கு ஆகும்.
வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். செயலியில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ப் ஐ.ஒ.எஸ். பதிப்புகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் புதிய 2.19.120 வெர்ஷனில் கால் வெய்ட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அழைப்பை ஏற்க முடியும்.
புதிய ஐ.ஒ.எஸ். அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் ஸ்கிரீன், பிரெய்லி (கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் எழுத்துமுறை ) கீபோர்டு வசதியை வழங்கி இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரைவசி செட்டிங்களை வாட்ஸ்அப் வழங்கியது.

ஐஒஎஸ் தளத்திற்கான 2.19.120 வாட்ஸ்அப் அப்டேட் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப் ஸ்டோர் சென்று தங்களின் செயலியை அப்டேட் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதை போன்று புதிய அப்டேட் கால் வெயிட்டிங் வசதியை வழங்குகிறது.
இந்த அம்சம் பீட்டா சோதனைகளில் சிக்காமல், நேரடியாக ஸ்டேபில் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. கால் வெயிட்டிங் அம்சம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் அழைப்பில் இருக்கும் போது, அவர்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளை அறிந்து கொள்ள வழி செய்யும். இதனால் வாடிக்கையாளர்கள் அழைப்பை ஏற்பதும், பின்னர் அழைப்பது பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
இதுதவிர புதிய அப்டேட் புதிய வடிவமைப்பு கொண்ட சாட் ஸ்கிரீனை வழங்குகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்களை வேகமாக பார்க்க முடியும். இவற்றுடன் குறுந்தகவல்களை பிரெய்லி மோடில் வாய்ஸ்ஓவர் மோட் பயன்படுத்தி நேரடியாக அனுப்ப முடியும்.
புதிய அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வாடிக்கையாளர்களில் சிலரது அக்கவுண்ட்களை டிசம்பர் மாதம் நீக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் தளத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத அக்கவுண்ட்களை டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நிரந்தரமாக அழிக்க இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மரணித்தவர்தகளின் அக்கவுண்ட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தளத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ட்விட்டர் தளத்தை பயன்படுத்த வைக்க முடியும்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக ட்விட்டரினை பயன்படுத்தாதவர்களது அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படுவது பற்றி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தகவல் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்தை ஆறு மாதங்களாக பயன்படுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்கை நினைவில் கொள்ள தற்சமயம் எந்த வழிமுறையும் இல்லை. எனினும், இதனை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் ட்விட்டர் குழு இயங்கி வருகிறது.
பின்லாந்தை சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை கையகப்படுத்தியது. இதனால் அங்கு 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பானின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். ஆனால், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை பாக்கி வைத்திருந்தது. அந்த பணத்தை வசூலிக்க அரசு தீவரமாக நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் 2014-ம் ஆண்டு நோக்கியா ஆலையை மூடி விட்டு வெளியேறினார்கள். அந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. இந்த நிலையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளது.
சால்காம்ப் நிறுவனம் செல்போன் உதிரிப்பாகங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. குறிப்பாக செல்போன் சார்ஜர்கள், அடாப்டர்கள் மற்றும் பல்வேறு போன் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆப்பிள் போன் நிறுவனத்துக்கு தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்களை சால்காம்ப் நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது.
ஏற்கனவே இந்த நிறுவனம் சென்னையில் இரண்டு இடங்களிலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு இடத்திலும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இப்போது நோக்கியா ஆலையை வாங்கி உள்ள சால்காம்ப் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிலை அங்கு தொடங்க உள்ளது.
நோக்கியா ஆலை மற்றும் அதன் அருகே உள்ள லைட் ஆன் மொபைல் ஆகிய நிறுவனங்களையும் சால்காம்ப் வாங்கி இருக்கிறது. ரூ.350 கோடியில் இவை வாங்கப்பட்டு உள்ளன. அதாவது நோக்கியா ஆலையில் 55 சதவீத இடத்தை சால்காம்ப் நிறுவனம் வாங்கி இருப்பதாக அந்த நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் சசிகுமார் தெரிவித்தார்.
நோக்கியா ஆலை மொத்தம் 10 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது. அதில் உள்ள கட்டிடங்களை தனது உதிரிப்பாக உற்பத்திக்காக சால்காம்ப் பயன்படுத்துகிறது. அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அப்போது ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.

ஆலை தொடங்கியதும் சால்காம்ப் நிறுவனம் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது சம்பந்தமாக மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
சால்காம்ப் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட தொடங்கும். அதன்பிறகு படிப்படியாக 5 ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன் மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும், 50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆப்பிள் போன் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்.ஆர். போனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ளது. செல்போன் உற்பத்தியில் முக்கிய மையமாக இந்தியா உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில உற்பத்தியை தொடங்குகிறது. அங்கு இரண்டு வகையான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. அந்த பகுதியில் மேலும் பல செல்போன் உதிரிப்பாகங்கள் தொழிற்சாலைகள் வர இருப்பதாக தமிழக அதிகாரி ஒருவர் கூறினார்.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சால்காம்ப் நிறுவனம் தமிழகத்தில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் தான் தனது உற்பத்தி நிறுவனங்களை சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






