search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    முகேஷ் அம்பானி
    X
    முகேஷ் அம்பானி

    ரிலையன்ஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது

    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன சொத்து மதிப்பு புதிய உச்சத்தை கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறார். எண்ணை சுத்திகரிப்பு ஆலை, கியாஸ் ஆலை, ஜியோ டெலிபோன் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு படி 1 பங்கின் விலை ரூ. 1579.95 காசாக உயர்ந்தது. அதாவது இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 41.2 சதவிகிதம் உயர்ந்தது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் அடிப்படையில் அவற்றின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது. 

    இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனமும் ரூ.10 லட்சம் சொத்து மதிப்பை எட்டியது இல்லை. இந்தியாவில் 2-வது மிகப்பெரிய நிறுவனமாக செயல்படும் டி.சி.எஸ்.சின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 501 கோடியாக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியின் மதிப்பு ரூ.6 லட்சத்து 92 ஆயிரம் கோடியாக உள்ளது. 4-வது இடத்தில் உள்ள இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

    இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய ஜியோ போன் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

    ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

    இந்த நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்திருப்பதால் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தும் அதிகளவில் உயர்ந்திருக்கிறது. அதாவது இன்றைய மதிப்புபடி அவருக்கு தனிப்பட்ட முறையில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.

    இதன் மூலம் அவர் உலகின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த தடவை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் அவர் 13-வது இடத்தில் இருந்தார். இப்போது பங்கு மதிப்பு உயர்வால் பட்டியலில் முந்தி இருக்கிறார்.

    அவருடைய தனிப்பட்ட சொத்து மட்டும் இந்த ஆண்டில் இதுவரை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கூடுதலாக உயர்ந்திருக்கிறது. இது 37 சதவிகித வளர்ச்சி ஆகும். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கு முந்தைய இடத்தில் இருந்து டேவிட்கோச், சார்லஸ் கோச், லேரிபேச் உள்ளிட்டோரை முந்தி இருக்கிறார்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.10 லட்சம் கோடி சொத்து என்பது குவைத், உக்ரைன் உள்ளிட்ட 153 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் ஒரு ஆண்டு செலவில் 5-ல் 1 பங்கு ஆகும்.
    Next Story
    ×