என் மலர்
புதிய கேஜெட்டுகள்
இந்தியாவில் மோட்டோரோலாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் சீரிஸ்களில் ஒன்றான மோட்டோ இ 2017 மாடல் சார்ந்த சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி மோட்டோ இ4 விலை, வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோவின் மோட்டோரோலா பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை வெளியிட்டதைத் தொடர்ந்து மோட்டோ இசட் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்தன. இந்நிலையில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட சில தகவல்கள் தெரியவந்துள்ளது.
மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் ஜூலை 17-ந்தேதி முதற்கட்டமாக கனடாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கனடாவில் CAD 249.99 அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,004 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737M குவாட்கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்படலாம். இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2800 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைபை மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் வசதி, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும்.
ஆப்பிளின் ஐபோன், ஐபேட்களில் பொருந்தக் கூடிய புதுவகை சிப்செட்டினை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் சிப்செட் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஆலைகளில் நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபேஷியல் ரெகக்னீஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதிய சிப்செட்கள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு பணிகளை இயக்கக்கூடிய வகையில் இருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று முக்கிய அல்லது மைக்ரோபிராசஸர் மற்றொன்று கிராபிக்ஸ் சிப்செட் அல்லது ஜிபியு.

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த சாதனங்களில் இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து பல்வேறு நிறுவனங்களை ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வு அறிக்கை ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் ஐபோன் 8 குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஆலைகளில் நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபேஷியல் ரெகக்னீஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதிய சிப்செட்கள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு பணிகளை இயக்கக்கூடிய வகையில் இருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று முக்கிய அல்லது மைக்ரோபிராசஸர் மற்றொன்று கிராபிக்ஸ் சிப்செட் அல்லது ஜிபியு.

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த சாதனங்களில் இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்து பல்வேறு நிறுவனங்களை ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வு அறிக்கை ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் ஐபோன் 8 குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் 5 விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிடவுள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் முந்தைய பிராசஸர்களை விட 35 சதவிகிதம் சிறியதாகவும், 25 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.

புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், அடுத்த தலைமுறை பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் இணைக்கப்பட்ட கிளவுட் சேவைகளை ஸ்மார்ட்போன், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்-மவுண்ட்டெட் டிஸ்ப்ளேக்கள், ஐ.பி. கேமரா, டேப்லெட்கள், கணினி மற்றும் இதர இயங்குதளம் கொண்டுள்ள சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் QHD 4K HDR டிஸ்ப்ளே, கூகுள் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி, பெசல் லெஸ் டிஸ்ப்ளே, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் நடைபெற்ற விழாவில் ஜியோணி S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை, டூயல் கேமரா அமைப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஜிங்:
ஜியோணி நிறுவனத்தின் S10 எனும் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இரட்டை டூயல் கேமரா அமைப்பினை வழங்கியுள்ளது. முன்னதாக இரட்டை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது.
புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் S10, S10B மற்றும் S10C என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜியோணி S10B மற்றும் S10C ஜூன் 9-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக S10 விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. ஜியோணி S10 ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோணி S10 சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி இன்-செல் டிஸ்ப்ளே
* மீடியாடெக் ஹீலியோ P25 பிராசஸர்
* 16 எம்பி, 8 எம்பி பிரைமரி கேமரா, 6P லென்ஸ் f/1.8 அப்ரேச்சர்
* 20 எம்பி, 8 எம்பி செல்ஃபி கேமரா
* 6 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3450 எம்ஏஎச் பேட்டரி
கடந்த ஆண்டு ஜியோணி வெளியிட்ட S9 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான S10 ஸ்மார்ட்போன் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்டிருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் இதன் விலை CNY 2,599 அதாவது இந்நிய மதிப்பில் ரூ.24,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போனின் மெமரியை நீட்டிக்கும் வசதி குறித்தும் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஜியோணி S10B சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* மீடியாடெக் ஹூலியோ P10 பிராசஸர்
* 13 எம்பி, 5 எம்பி பிரைமரி கேமரா
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3700 எம்ஏஎச் பேட்டரி
ஜியோணி S10B ஸ்மார்ட்போன் CNY 2,199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,700 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோணி S10C சிறப்பம்சங்கள்:

* 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* ஸ்னாப்டிராகன் 427 பிராசஸர்
* 16 எம்பி பிரைமரி கேமரா
* 13 எம்பி செல்ஃபி கேமரா
* 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3100 எம்ஏஎச் பேட்டரி
ஜியோணி S10C ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 1,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவுள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் சார்ந்து எவ்வித தகவலையும் ஜியோணி வழங்கவில்லை.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபின் தனது புதிய ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபினின் எசென்ஷியல் பிராடக்ட்ஸ் இன்க் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எசென்ஷியல் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், ''எங்களது ட்விட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மே 30-ந்தேதி மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகிறது, தொடர்ந்து இணைந்திருங்கள்..'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அந்நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. புகைப்படத்தில் ஸ்மார்ட்போன் நிழல் காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல் கூடுதல் சாதனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது, எனினும் இந்த சாதனம் 360 டிகிரி கேமராவாக இருக்கும் என கூறப்படுகிறது.
எசென்ஷியல் பிராடக்ட்ஸ் நிறுவன ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது அதன் பெசல் லெஸ் வடிவமைப்பு. முன்னதாக ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான எரிக் ஸ்கிமிட் இந்த சாதனம் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார், எனினும் சரியான தேதியை குறிப்பிடவில்லை. சமீபத்தில் ரூபின் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

டீசர் புகைப்படத்தில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க சியோமி எம்.ஐ. மிக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதிலும் முன்பக்க பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2017-ம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் மாட்யூலர் சாதனமாக இருக்கலாம் என்றும், இவை காந்தம் கொண்ட கனெக்டர் மூலம் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கனெக்டர் பேட்டரியை சார்ஜ் செய்வதோடு, பல்வேறு இதர அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான மாட்யூல்களில் ஒன்றாக 360 டிகிரி கேமரா இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
லண்டனை சேர்ந்த ஆடம்பர போன் தயாரிப்பு நிறுவனமான வெர்ச்சு சுமார் 2.3 கோடி ரூபாய் விலையில் பீச்சர் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வெர்ச்சு கோப்ரா என அழைக்கப்படும் இந்த போனின் விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
லண்டன்:
ஆடம்பர போன் தயாரிப்பு நிறுவனமான வெர்ச்சு, புதிய வகை லிமிட்டெட் எடிஷன் பீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. சிக்னேச்சர் கோப்ரா என அழைக்கப்படும் லிமிட்டெட் எடிஷன் சீனாவில் CNY 2.47 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.3 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீன இணையத்தளங்களில் இந்த போன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
வெர்ச்சு சிக்னேச்சர் கோப்ரா வாங்க விரும்புவோர் முதல் தவணையாக CNY 1000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை செலுத்த வேண்டும், இதன் பின் மீதித் தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ச்சு பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க சிக்னேச்சர் கோப்ரா பீச்சர் போன்களில் வெறும் எட்டு யுனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என வெர்ச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் சீனாவில் ஒரே ஒரு போன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த பீச்சர் போன் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

புதிய வெர்ச்சு சிக்னேச்சர் கோப்ரா பீச்சர் போன் பிரான்ஸ்-ஐ சேர்ந்த பௌச்சிரான் எனும் நிறுவனம் வடிவமைத்தது. இதன் கோப்ரா வடிவமைப்பில் 439 ரூபிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் பீச்சர் போனினை சுற்றி கோப்ரா எனும் பாம்பு வடிவமைப்பு பொருத்தப்பட்டு, அதன் கண்களில் 2 எமிரால்டு கற்கள் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய வெர்ச்சு போனில் பல்வேறு இதர கற்களும் பொருத்தப்பட்டுள்ளது. வெர்ச்சு போனில் 388 வெவ்வேறு பாகங்கள் லண்டன் முழுக்க வடிவமைக்கப்பட்டு, இவை எவ்வித இயந்திரமும் இன்றி கைகளிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் நீட்டிக்கும் வசதி கொண்ட உலகின் முதல் டிஸ்ப்ளேவினை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டிஸ்ப்ளே சார்ந்த தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் SID 2017 எனும் டிஸ்ப்ளே சார்ந்த விழாவில் உலகின் முதல் நீட்டிக்கும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் நீட்டிக்கும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளே இரண்டு பக்கங்களிலும் மடிக்க முடியும் என தெரிவித்துள்ளது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட வளைக்கும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேக்கள் ஒரு பக்கம் மட்டுமே மடிக்க கூடியதாக இருந்தது.

சாம்சங்-இன் புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் தற்சமயம் பயன்பாட்டில் இருப்பதை விட தலைசிறந்த ஒன்றாக இருக்கும் என தொழில்நுட்ப சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சாம்சங்-இன் புதிய டிஸ்ப்ளே அதிகபட்சம் 12 மில்லிமீட்டர் வரை நீட்டிக்க முடியும் என்றும், இதே நிலையிலும் அதிக ரெசல்யூஷனினை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
டிஸ்ப்ளே சார்ந்த விழாவில் 9.1 இன்ச் அளவு கொண்ட நீட்டிக்கும் OLED டிஸ்ப்ளேக்களை அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாம்சங்-இன் புதிய வகை டிஸ்ப்ளேக்கள் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் சாதனங்களில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. "அன்-நோன் ஹார்ட்" (Unknown Heart) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
நோக்கியா நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டு நோக்கியா போன்களின் புகைப்படம் வீடியோ வடிவில் கசிந்தது. நோக்கியா புகைப்படக்காரர் மூலம் ஏற்கனவே இரண்டு புகைப்படங்கள் கசிந்த நிலையில் "அன்-நோன் ஹார்ட்" என்ற பெயரில் நோக்கியா போனின் புகைப்படம் ஒன்று கீக்பென்ச் தளத்தில் கசிந்துள்ளது.
முன்னதாக நோக்கியா 3, நோக்கியா 5 உள்ளிட்டவை கீக்பென்ச் தளத்தில் ஹார்ட் என்ற பெயரில் கசிந்திருந்தது, இதனால் தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்கள் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 7 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரோலண்ட் குவாண்ட் எனும் டிப்ஸ்டெர் கீக்பென்ச் பக்கங்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நோக்கியாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றொரு கீக்பென்ச் தகவலில் இந்த ஸ்மார்ட்போனில் 2.21 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 7 என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இதேபோல் 1.90 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர், 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனும் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளமும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8 என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இந்தியாவில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட தயாராகி வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 விற்பனை துவங்கியுள்ளது. இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 ரூ.3310 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா A77 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லாவா நிறுவனத்தின் A77 எனும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ, 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா A77 நீலம், தங்கம், மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லாவா நிறுவனத்தின் Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.
4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா Z10 மற்றும் Z25 இந்தியாவில் முறையே ரூ.11,500 மற்றும் ரூ.18,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. Z10 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்திலும், Z25 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் லாவா Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு இந்திய மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

லாவா A77 சிறப்பம்சங்கள்:
* 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
* 1 ஜிபி ரேம்
* 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.0
* 2000 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் லாவா A77 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.4,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
கூகுள் நிறுவனத்தின் வருடாந்தர டெவலப்பர் நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கூகுளின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் இந்த நிகழ்வில் கூகுள் லென்ஸ் சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
புதுடெல்லி:
ஸ்நாப்சாட் போன்ற பல்வேறு செயலிகளில் புகைப்படங்களின் மேல் டிஜிட்டல் பூ பொருத்தும் வசதி சில காலமாக நம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் கூகுளின் புதிய வசதி நிஜ பூக்களின் மேல் டிஜிட்டல் தரவுகளை உடனடியாக வழங்குகிறது.
கூகுளின் வருடாந்தர டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுள் லென்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார்.

அந்த வகையில் கூகுள் லென்ஸ் கொண்டு உங்களது போனின் கேமராவை பயன்படுத்தி தகவல்களை தேடி தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் இடத்தில் அழகிய பூ ஒன்றை பார்த்தால், அதன் பெயர் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள பூவின் மேல் உங்களது ஸ்மார்ட்போன் கேமராவை காண்பிக்க வேண்டும்.
இதே போல் உணவகத்தின் பெயர் பலகையில் கேமராவை காண்பித்தால், குறிப்பிட்ட உணவகத்திற்கு ஏற்கனவே சென்றவர்கள் வழங்கிய விமர்சனங்களை அறிந்து கொள்ள முடியும். இதனால் மக்களிடம் நல்ல விமர்சனம் பெற்ற உணவகத்தை கூகுள் லென்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக கூகுள் லென்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் போட்டோஸ் செயலியில் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் கூகுள் லென்ஸ் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்பாட்டில் இல்லாத மிகப்பெரிய திட்டத்தை கூகுள் லென்ஸ் துவங்கியுள்ளது.
ஏ.ஆர்.எம். எனும் நிறுவனம் சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொருத்தி செயலற்று போன உடல் பாகங்களை வழக்கம் போல் இயக்க வழி செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொருத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை துவங்க இருப்பதாக ஏ.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டனை சேர்ந்த ஏ.ஆர்.எம். நிறுவனமும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சென்சார் மானிட்டர் நியூரல் என்ஜினீயரிங் மையமும் இணைந்து தொழில்நுட்பத்தை மனித மூளையில் இணைப்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இதுபோன்ற ஆய்வுகள் தொழில்நுட்ப துறையில் புதுமையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஏ.ஆர்.எம். மற்றும் பல்கலைக்கழகம் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தில் மூளை மற்றும் கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ்களை உருவாக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் தசைகளை இயக்க மூளை எவ்வாறு தூண்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதும் இந்த ஆய்வின் நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும்.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் சிப்செட்கள் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு வெப்பத்தை மட்டும் வெளிப்படுத்தும் திறன் கொண்டாதவும் இருக்க வேண்டும். Cortex-M0 எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி ஏ.ஆர்.எம். தனது ஆய்வுகளை துவங்கும் என தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ரீதியில் மகிப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வு பணிகளுக்கான காலக்கெடு இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த ஆய்வின் நோக்கம் சாத்தியமாகி முதற்கட்ட சோதனைகள் வெற்றி பெறும் காலம் குறித்து எவ்வித கணிப்பும் இல்லை.
எனினும் பக்கவாத நோய் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தங்களது உடல் பாகங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8 கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் ஐபோன் 2017 பதிப்பு வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய சாதனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஐபோன் 8 சார்ந்து பல்வேறு வரைபடம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவை தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8-இல் கிளாஸ் பேக் கொண்ட வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஐபோன் அக்சஸரீ தயாரிப்பவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை கொண்டு வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐபோன் 8-இல் செங்குத்தாக பொறுத்தப்பட்ட இரட்டை கேமரா, எட்ஜ்-டூட-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்புறம் இருப்பதால் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் அதிவேக சார்ஜிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் கேமரா அமைப்பு முந்தைய தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது. மேலும் ஐபோன் 7 உடன் ஒப்பிடும் போது சற்றே அகன்ற, பெரிய மற்றும் தடிமனான ஐபோன் 8 இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்த காப்புரிமையில் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட டச் ஐடி சென்சார் மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா காப்புரிமை மற்றும் முத்திரை வழங்கும் அலுவலகம் ஆப்பிள் சமீபத்தில் பெற்ற 56 காப்புரிமைகள் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபோனில் சாம்சங் OLED வகை டிஸ்ப்ளேக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
புகைப்படம்: Engadget






