என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூளையில் பிராசஸர்களை பொருத்தி பக்கவாதத்தை சரி செய்ய ஆய்வாளர்கள் தீவிரம்
    X

    மூளையில் பிராசஸர்களை பொருத்தி பக்கவாதத்தை சரி செய்ய ஆய்வாளர்கள் தீவிரம்

    ஏ.ஆர்.எம். எனும் நிறுவனம் சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொருத்தி செயலற்று போன உடல் பாகங்களை வழக்கம் போல் இயக்க வழி செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி: 

    மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொருத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை துவங்க இருப்பதாக ஏ.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    லண்டனை சேர்ந்த ஏ.ஆர்.எம். நிறுவனமும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சென்சார் மானிட்டர் நியூரல் என்ஜினீயரிங் மையமும் இணைந்து தொழில்நுட்பத்தை மனித மூளையில் இணைப்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இதுபோன்ற ஆய்வுகள் தொழில்நுட்ப துறையில் புதுமையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

    ஏ.ஆர்.எம். மற்றும் பல்கலைக்கழகம் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தில் மூளை மற்றும் கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ்களை உருவாக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் தசைகளை இயக்க மூளை எவ்வாறு தூண்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்வதும் இந்த ஆய்வின் நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும்.

    இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் சிப்செட்கள் மிகவும் சிறியதாகவும், குறைந்தளவு வெப்பத்தை மட்டும் வெளிப்படுத்தும் திறன் கொண்டாதவும் இருக்க வேண்டும். Cortex-M0 எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி ஏ.ஆர்.எம். தனது ஆய்வுகளை துவங்கும் என தெரிவித்துள்ளது. 

    தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ரீதியில் மகிப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வு பணிகளுக்கான காலக்கெடு இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த ஆய்வின் நோக்கம் சாத்தியமாகி முதற்கட்ட சோதனைகள் வெற்றி பெறும் காலம் குறித்து எவ்வித கணிப்பும் இல்லை.

    எனினும் பக்கவாத நோய் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தங்களது உடல் பாகங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 
    Next Story
    ×