search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமார் 2.3 கோடி ரூபாய்க்கு பீச்சர் போன் அறிமுகம்
    X

    சுமார் 2.3 கோடி ரூபாய்க்கு பீச்சர் போன் அறிமுகம்

    லண்டனை சேர்ந்த ஆடம்பர போன் தயாரிப்பு நிறுவனமான வெர்ச்சு சுமார் 2.3 கோடி ரூபாய் விலையில் பீச்சர் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வெர்ச்சு கோப்ரா என அழைக்கப்படும் இந்த போனின் விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    ஆடம்பர போன் தயாரிப்பு நிறுவனமான வெர்ச்சு, புதிய வகை லிமிட்டெட் எடிஷன் பீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. சிக்னேச்சர் கோப்ரா என அழைக்கப்படும் லிமிட்டெட் எடிஷன் சீனாவில் CNY 2.47 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.3 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீன இணையத்தளங்களில் இந்த போன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

    வெர்ச்சு சிக்னேச்சர் கோப்ரா வாங்க விரும்புவோர் முதல் தவணையாக CNY 1000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை செலுத்த வேண்டும், இதன் பின் மீதித் தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ச்சு பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    உலகம் முழுக்க சிக்னேச்சர் கோப்ரா பீச்சர் போன்களில் வெறும் எட்டு யுனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என வெர்ச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் சீனாவில் ஒரே ஒரு போன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த பீச்சர் போன் குறித்து எவ்வித தகவலும் இல்லை. 



    புதிய வெர்ச்சு சிக்னேச்சர் கோப்ரா பீச்சர் போன் பிரான்ஸ்-ஐ சேர்ந்த பௌச்சிரான் எனும் நிறுவனம் வடிவமைத்தது. இதன் கோப்ரா வடிவமைப்பில் 439 ரூபிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் பீச்சர் போனினை சுற்றி கோப்ரா எனும் பாம்பு வடிவமைப்பு பொருத்தப்பட்டு, அதன் கண்களில் 2 எமிரால்டு கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

    புதிய வெர்ச்சு போனில் பல்வேறு இதர கற்களும் பொருத்தப்பட்டுள்ளது. வெர்ச்சு போனில் 388 வெவ்வேறு பாகங்கள் லண்டன் முழுக்க வடிவமைக்கப்பட்டு, இவை எவ்வித இயந்திரமும் இன்றி கைகளிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×