என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவரான செயான் ஷாஃபீக் தனக்கென சமூக வலைத்தள செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவரது உழைப்பில் உருவான கேஷ்புக் பற்றி விரிவாக பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தள சேவைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 16-வயதான பத்தாம் வகுப்பு மாணவரான செயான் ஷாஃபீக் கேஷ்புக் என்ற பெயரில் தனக்கென சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற செயான் கேஷ்புக் செயலியை 2013 ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தார், எனினும் தற்போதைய சமூக வலைத்தளங்களுக்கான தடை இவரது செயலியை பிரபலப்படுத்தியுள்ளது. தனது நண்பரான உசைர் ஜெயினுடன் இணைந்து கேஷ்புக் செயலியை மே 2-ந்தேதி மீண்டும் வெளியிட முடிவு செய்தார்.
தனது பகுதியை இணைப்பில் வைத்திருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த தடை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள கேஷ்புக் தற்சமயம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை தற்சமயம் பயன்படுத்தி வருபவர்களில் பலரும் செயலியின் அம்சங்கள் பயனுள்ளதாக இருப்பதை தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துடன் தொடர்புடைய கேஷ்புக் செயலி, அதன் பயனாளிகளை காஷ்மீர் மொழியில் இயக்கவும் வழி செய்கிறது. தனது 11 வயது முதல் கோடிங் பாடங்களை கற்று வந்த செயான் அடுத்தடுத்து சி++ மற்றும் ஜாவா உள்ளிட்ட பாடங்களையும் கற்று கொண்டார்.
சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலானோர் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்களை பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில், செயான் தனது சமூக வலைத்தளத்தின் சேவைகளை மேலும் நீடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்களை விள்ம்பரம் செய்யவும் செயான் முடிவு செய்துள்ளார்.
எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எட்ஜ் சென்ஸ் வசதி கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யு11-ஐ தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் எனும் ஆப்ஷன் அமேசிங் சில்வர், சஃபையர் புளூ, பிரில்லியண்ட் பிளாக், ஐஸ் வைட் மற்றும் சோலார் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
புத்தம் புதிய எச்டிசி யு11 உலகம் முழுக்க இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் இதன் விலை EUR 749 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் குவாட் எச்டி 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளமும், எச்டிசி சென்ஸ் ஸ்கின் வழங்கப்பட்டுள்ளது.

போனின் வேகத்தை கவனிக்க 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க எச்டிசியு 11 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, 1.4 அல்ட்ரா பிக்சல், அல்ட்ரா ஸ்பிரெட் ஆட்டோஃபோகஸ், f/1.7 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சாரக்ஜ் 3.0 வசதி மற்றும் GPS/ A-GPS, GLONASS, யுஎஸ்பி 3.1 டைப் சி-போர்ட், ப்ளூடூத் 4.2, வைபை, மற்றும் என்எஃப்சி வசதி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் IP67 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ:
எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் அறிமுக வீடியோவை இங்கு காணலாம்.,
எச்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் யு 11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
எச்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் யு 11 ஸ்மார்ட்போன் மே 16-ந்தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்நிலையில், யு 11 ஸ்மார்ட்போனின் விலை அந்நிறுவனத்தின் முந்தைய வெளியீடான யு அல்ட்ராவை விட குறைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதன்படி எச்டிசி யு 11 ஸ்மார்ட்போன் 659 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,302 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வித்தியாச அம்சங்களை கொண்டு வெளியாக இருக்கும் எச்டிசி யு 11 ஸ்மார்ட்போனில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி யு 11-இல் 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் எச்டிசி யு ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இததுடன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்ஃபி கேமராவும், 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
சாம்சங் நிறுவனம் டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் Z4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் தனது டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. Z4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் இந்தியாவிலும் வெளியிடப்படும்.
மே 16 -17 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற இருக்கும் டைசன் டெவலப்பர் கான்ஃபெரன்ஸ் நிகழ்ச்சியிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் புதிய Z4 ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் Z4 ஸ்மார்ட்போனில் டைசன் ஓ.எஸ். 3.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 143 கிராம் எடை கொண்டுள்ள Z4 ஸ்மார்ட்போனில் 2050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ், எல்டிஇ கேட் 4 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் Z4 ஸ்மார்ட்போனின் கேமராவை இயக்க சிறப்பான ஜெஸ்ட்யூர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல் முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ற எளிமையான இன்டர்ஃபேஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் புகைப்படங்களை வேகமாக எடுக்க கேமரா லான்ச் செய்ய ஏதுவான வசகதிகள் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு ஃபிளிப் போன் ஒன்றை தயாரித்து வருவதாகவும், விரைவில் இந்த போன் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் ஃபிளிப் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த போனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் போன்களை நினைவூட்டும் வகையில் உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்டு தயாராகும் ஃபிளிப் போன் SM-W2017 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வயர்லெஸ் சார்ஜிங் வசதிக்கான சான்றினை சமீபத்தில் பெற்றிருக்கும் SM-W2017 போனில் கைரேகை ஸ்கேனர், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், சாம்சங் நாக்ஸ் மற்றும் சாம்சங் பே சேவைகளை இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.2 இன்ச் OLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகின்றது மெமரியை கூடுதலாக நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
2300 எம்ஏஎச் திறன் கொண்டு சக்தியூட்டப்படும் சாம்சங் ஃபிளிப் போன் ஸ்பெஷல் எடிஷனாக வெளியிடப்படலாம் என்றும் இதன் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் தற்சமயம் வரை வெளியாகவில்லை.
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. மே 12-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஹூவாய் வெளியிட்ட ஹானர் 8 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஹானர் 8 லைட் அதிநவீன கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிப்ரவரி மாதம் வெளியான ஹானர் 8 லைட் குறைந்த வெளிச்சம் கொண்ட பகுதிகளிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் ஃபினிஷ் வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கிரின் 655 ஆக்டா கோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளதால் 3D கேம் மற்றும் வீடியோக்களையும் எவ்வித சிரமமும் இன்றி சீராக இயக்க முடியும். 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள ஹானர் 8 லைட் 12 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது.
அதிநவீன கேமரா லென்ஸ் கொண்டுள்ள ஹானர் 8 லைட் கொண்டு வெளிச்சம் குறைவான பகுதிகளையும் சிறப்பாக படமாக்க முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த EMUI 5.0 வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத், வைபை, டூயல் சிம் ஸ்லாட், 3ஜி, 4ஜி, எல்டிஇ, மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு சார்ந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 ஸ்மார்ட்போன் மே 16-ந்தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கென பிரத்தியேக வெளியீட்டு நிகழ்ச்சியை சியோமி நடத்த இருப்பதாகவும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் 8000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறன்றது.
சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இந்த வகை பிராசஸர் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போனும் இது தான் என கூறப்படுகின்றது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி 4 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது. இது ரெட்மி 3 மற்றும் ரெட்மி 3S போன்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த MIUI மற்றும் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
சீனாவில் ரெட்மி 4 ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்ட மாடல் CNY 699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,905 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் 3ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மாடல் CNY 899 அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,888 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தென் கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அந்நாட்டில் தாணியங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது. இதற்கான அனுமதியை சாம்சங் நிறுவனத்திற்கு தென் கொரியா வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தாணியங்கி கார்களை தாயரித்து வெளியிடும் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறது. தாணிங்கி கார் மற்றும் இதர வாகனங்கள் இயங்கும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு விட்டாலும், சாலைகளில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இயங்க வைக்கும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது தாணியங்கி கார்களை சோதனை செய்வதற்கான அனுமதியை அந்நாட்டு அரசிடம் கோரியிருந்தது. இந்நிலையில், சாம்சங் தனது தாணியங்கி கார்களை சோதனை செய்ய தென் கொரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாம்சங் மென்பொருள் மற்றும் சென்சார்களை கொண்டு தாணிங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது.

இதேபோன்று பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் பாஸ்டன் மற்றும் நுடோனோமி நிறுவனங்களுடன் இணைந்து சிங்கப்பூரில் தாணியங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது. நுடோனோமி நிறுவனத்தின் மென்பொருள், சென்சார் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்டவை பியூஜியோட் 3008 மாடல்களில் இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
பின் இதற்கு தேவையான தொழில்நுட்பங்களை பொறுத்தி, முதற்கட்ட சோதனைகள் துவங்கும் என நுடோனோமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐந்தாம் நிலை தாணியங்கி முறைகளில் இயக்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தாணியங்கி முறைகளின் ஐந்தாம் நிலையில் ஓட்டுநரின் எவ்வித உதவியும் இன்றி வாகனம் தானாகவே இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற தொழில்நுட்பம் கொண்ட கார்களை உருவக்க பல்வேறு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன.
முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை வைத்திருக்கும் டைம்லெர் மற்றும் ராபர்ட் போஷ் நிறுவனங்கள் இணைந்து தாணியங்கி கார்களை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பி.எம்.டபுள்யூ மற்றும் இன்டெல் மற்றும் மொபைல்ஐ நிறுவனங்கள் இணைந்து தாணியங்கி கார்களை தயாரித்து வருவதாக தெரிவித்திருந்தன.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் இணைந்து நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் திறன் கொண்ட கேமராவை உருவாக்கி உள்ளனர். தற்சமயம் உலகின் அதிவேக கேமரா இது தான் என்றும் கூறப்படுகின்றது.
புதுடெல்லி:
உலகில் அடுத்த தலைமுறை சூப்பர் - ஃபாஸ்ட் கேமரா 15 தான். தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகம் கொண்ட கேமராவான 15, ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும்.
ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் இந்த கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும்.

அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குழு வேதியலில் பிளாஸ்மா டிஸ்சார்ஜ்களை படமாக்க பயன்படுத்தப்படும் என்றும், வெவ்வேறு ரசாயன மாற்றங்களையும் மிக அழகாக படமாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கேமரா மூலம் கண் இமைப்பதை படமாக்கி அதனை நொடிக்கு 24 ஃபிரேம் என்ற வீதத்தில் பிளே செய்தால் வீடியோவை பார்த்து முடிக்க 2000 ஆண்டுகள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து பல்வேறு சேவைளை வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஜியோ 4ஜி பீச்சர் போன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இதன் விலை உள்ளிட்ட தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சீனாவை சேர்ந்த மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனமான ஸ்ப்ரெட்ரம் கம்யூனிகேஷன்ஸ் பீச்சர் போன்களின் துவக்க விலையை பாதியாக குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் 4ஜி வசதி கொண்ட பீச்சர் போனின் விலை ரூ.1,500 முதல் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இந்தியாவில் ரூ.1,500 விலையில் பீச்சர் போனினை வழங்க உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம், இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது', என ஸ்ப்ரெட்ரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நீரஜ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 4ஜி பீச்சர் போன்களின் விலை ரூ.3,000 முதல் துவங்குகிறது. இரு நிறுவனங்களும் தங்களது சாதனங்களின் விலையை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோவும் மலிவு விலை 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோ பீச்சர் போன் விலை ரூ.1,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

ஸ்ப்ரெட்ரம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் மேற்கொண்டுள்ள இரண்டு வருட ஒப்பந்தத்தின் படி லைஃப் பிரான்டு பிளேம் 5 ஸ்மார்ட்போனினை தயாரித்து வழங்குகிறது. இத்துடன் லாவா M14G பீச்சர் போனினையும் ஸ்ப்ரெட்ரம் தயாரித்து வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூ.3,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், 4ஜி வசதி கொண்ட பீச்சர் போன்கள் 2017 ஆம் ஆண்டிலும் பிரபலமாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் இந்திய சந்தை 3ஜி நெட்வொர்க்கில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாறியுள்ளதால் வரும் மாதங்களில் 4ஜி வசதி கொண்ட பீச்சர் போன்களின் வரவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் மே மாதம் 3-ந்தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் டீசர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன் நிறுவனம் ஸ்மார்ட்ரான், மே 3-ந்தேதி புதிய எஸ்ஆர்.டி.போன் என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள டீசர் புகைப்படத்தில் மே 3-இல் ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் புதிய சாதனம் வெளியாகும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் தான் சச்சின் டெண்டுல்கர் பிரான்டிங் கொண்ட முதல் சாதனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரம் செய்துள்ள போதும், ஸ்மார்ட்போனிற்கென ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களை விளம்பரம் செய்யும் வகையில் வாடிக்கையாளர்கள் புதிய சாதனத்தின் அறிமுக விழா நடைபெறும் மே 3-ந்தேதி சச்சின் டெண்டுல்கரை நேரடியாக சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
ஸ்மார்ட்ரான் நிறுவனம் சார்பில் புதிய சாதனம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், 'மாஸ்ட்ரி அட் தி கோர்' என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய எஸ்.ஆர்.டி.போன் அதிக சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஸ்மார்ட்ரான் வெளியிட்ட ஸ்மார்ட்ரான் டி.போனில் (t.phone) AMOLED ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டது. இத்துடன் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஹைப்ரிட் லேப்டாப் ஒன்றும் வெளியிடப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்களின் பத்தாவது ஆண்டு என்ற நிலையில், இந்த மாடல் ஐபோன் 8 அல்லது ஐபோன் X என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ப்ளூ ப்ரின்ட்டில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஐபோனில் இரட்டை கேமரா அமைப்பு போனின் இடதுபுறத்தில் செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் முந்தைய ஐபோனில் வழங்கப்பட்ட A10 ஃபியூஷன் சிப்செட்-ஐ விட மேம்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த A11 சிப்செட் வழங்கப்படும் என்றும் இது சிம் மாட்யூலின் கீழ் பொறுத்தப்படும்.
இத்துடன் டிஸ்ப்ளேவின் மேல்பக்கம் 3D கேமரா மற்றும் இன்ஃப்ரா ரெட் பயோமெட்ரிக் ஸ்கேனர் வழங்கப்படும் என்றும். கீழ் பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டாப்டிக் என்ஜின் மற்றும் இரண்டு 3D டச் என்ஜின்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொறுத்தப்படும். இத்துடன் பேட்டரி செயல்பாட்டை அதிகரிக்கும் விதமாக இரண்டு பேட்டரிகள் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

கைரேகை ஸ்கேனர் புதிய ஐபோனின் முன்பக்கம் பொறுத்தப்படும் என்றும், ஃபுல் விஷன் டிஸ்ப்ளே திரையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. எனினும் கைரேகை ஸ்கேனர் எவ்வாறு பொறுத்தப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் சாம்சங் OLEDக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






