என் மலர்
செய்திகள்

நீட்டிக்கும் வசதி கொண்ட உலகின் முதல் டிஸ்ப்ளே: விரைவில் அறிமுகம் செய்யும் சாம்சங்
சாம்சங் நிறுவனம் நீட்டிக்கும் வசதி கொண்ட உலகின் முதல் டிஸ்ப்ளேவினை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டிஸ்ப்ளே சார்ந்த தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் SID 2017 எனும் டிஸ்ப்ளே சார்ந்த விழாவில் உலகின் முதல் நீட்டிக்கும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் நீட்டிக்கும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளே இரண்டு பக்கங்களிலும் மடிக்க முடியும் என தெரிவித்துள்ளது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட வளைக்கும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேக்கள் ஒரு பக்கம் மட்டுமே மடிக்க கூடியதாக இருந்தது.

சாம்சங்-இன் புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் தற்சமயம் பயன்பாட்டில் இருப்பதை விட தலைசிறந்த ஒன்றாக இருக்கும் என தொழில்நுட்ப சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சாம்சங்-இன் புதிய டிஸ்ப்ளே அதிகபட்சம் 12 மில்லிமீட்டர் வரை நீட்டிக்க முடியும் என்றும், இதே நிலையிலும் அதிக ரெசல்யூஷனினை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
டிஸ்ப்ளே சார்ந்த விழாவில் 9.1 இன்ச் அளவு கொண்ட நீட்டிக்கும் OLED டிஸ்ப்ளேக்களை அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாம்சங்-இன் புதிய வகை டிஸ்ப்ளேக்கள் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் சாதனங்களில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Next Story






