என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அமேசானின் அலெக்சா மூலம் இயங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய இம்கோ வாட்ச் பல்வேறு வசதிகளை கொண்டிருப்பதோடு பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:   

    அமேசானின் அலெக்சா மூலம் இயங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்சினை எர்ஹா இணைதளம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இம்கோ வாட்ச் சாதனத்தில் மாற்றத்தக்க டைம்-சோன், கேலெண்டர், மியூசிக் ப்ளூடூத் கண்ட்ரோல், நோட்டிபிகேஷன், ஸ்டெப் கவுன்ட்டர், ஹார்ட் ரேட் மாணிட்டர், மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் அலெக்சா வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை இந்த ஸ்மார்ட்வாட்ச் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டு ஸ்மார்ட் ஹோம் கேஜெட்களையும் இயக்க முடியும் என்றும், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் கேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் AMOLED ஃபுல் சர்க்கிள் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி பிளாஷ் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டுள்ள புதிய அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் விலை இந்திய சந்தையில் ரூ.13,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைனில் விற்பனைக்கு பட்டியலிடப்படவில்லை.
    ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்இ பீச்சர் போனின் இந்திய விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்த வகையில் புதிய பீச்சர் போன் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர் போன் விரைவில் வெளியிடப்படும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் லைஃப் பிரான்டிங் கொண்ட பீச்சர் போன்களின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாக 91 மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ போன்றே அந்நிறுவனத்தின் பீச்சர் போன்களின் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன்களில் ஜியோ சிம் வசதி, ஜியோ செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன் விலை:

    ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன்களில் குவால்காம் மற்றும் ஸ்ப்ரெட்ரம் சிப்செட் கொண்ட இரண்டு மாடல்கள் வெளியிடப்படும். அதன்படி குவால்காம் மாடல் 28 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,800 மற்றும் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் கொண்ட மாடல் 27 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,740 வரை நிர்ணயம் செய்யப்படலாம். 



    ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன் சிறப்பம்சங்கள்:

    * 2.4 இன்ச் ஸ்கிரீன்
    * 512 எம்பி ரேம்
    * 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * 2 எம்பி பிரைமரி கேமரா
    * வி.ஜி.ஏ. செல்ஃபி கேமரா
    * 4ஜி வோல்ட்இ, வை-பை, ஜி.பி.எஸ்.

    இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஜியோ 4ஜி வோல்ட்இ பீச்சர் போன் புகைப்படத்தில் போன் ஸ்கிரீனின் கீழ் ஆல்ஃபா நியூமெரிக் கீபோர்டு இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் மைஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ மியூசிக் செயலிகளை இயக்க பிரத்தியேக பட்டன்களும் காணப்படுகிறது. 

    ஜியோ பீச்சர் போன் மூலம் ஊரக பகுதிகளில் ஜியோ அதிவேக இண்டர்நெட் வழங்கி ஜியோ 4ஜி டெலிகாம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. ஜியோ 4ஜி சேவைகள் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் ஆறு மாதங்களிலேயே சுமார் 10 கோடி பேர் ஜியோ சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 5 ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் 20-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆண்ட்ராய்டு போலீஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கருப்பு நிற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, எல்இடி பிளாஷ், 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் பெரிய செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் 7 பிளஸ் போன்றே காட்சியளிக்கிறது. டூயல் கேமரா அமைப்பு கொண்டுள்ள ஒன்பிளஸ் 5 முன்னதாக வெளியான தகவல்களுக்கு முரணான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் DxO கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.



    ஒன்பிளஸ் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே, 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன்
    * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் 
    * 8 ஜிபி ரேம்
    * 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * இரட்டை கேமரா அமைப்பு
    * வாட்டர் & டஸ்ட் ப்ரூஃப் வசதி

    புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் கேமரா தரம் குறைந்த வெளிச்சத்திலும் அழகிய புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் அறிமுக நிகழ்ச்சி மதியம் 12:00EDT இந்திய நேரப்படி ஜூன் 20, இரவு 9:30 மணிக்கு துவங்குகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5 மும்பையில் ஜூன் 22, மதியம் 2.00 மணிக்கு துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் மாநாடு (WWDC 2017) முதல் நாளில் புதிய இயங்குதளம், மேக், ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு முக்கிய சாதனங்கள் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகின. WWDC முதல் நாளில் அறிமுகமானவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
    சான் ஜோஸ்:

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் சர்வதேச டெவலர்ப்பர்கள் மாநாடு (WWDC) நேற்று துவங்கியது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், மற்றும் அந்நிறுவன பொறியாளர்கள் ஆப்பிளின் புதிய இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யதனர். 

    அந்த வகையில் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டின் (WWDC) முதல் நாளில் ஆப்பிள் அறிமுகம் செய்தவற்றை தொடர்ந்து பார்ப்போம். 



    * ஆப்பிள் டிவி ஒ.எஸ்:

    ஆப்பிள் டிவி ஒ.எஸ்.-இல் அதிகப்படியான தரவுகள், அமேசானின் பிரைம் வீடியோ சேவை வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி செயலியில் இந்த சேவைகள் வழங்கப்படும் என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். 



    * வாட்ச் ஒ.எஸ். 4:

    ஆப்பிள் வாட்ச் சாதனத்தை இயக்கும் வாட்ச் ஒ.எஸ்.-இன் புதிய பதிப்பு அறி்முகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் அதிகப்படியான மாற்றங்கள் வழங்கப்படவில்லை. எனினும் சில அம்சங்கள் அனைவரையும் கவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்ச் ஒ.எஸ். இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட சிரி மெஷின் லேர்னிங் மூலம் வாட்ச் திரையில் தோன்றக் கூடியவற்றை ஸ்மார்ட் முறையில் காண்பிக்கும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கான நினைவூட்டல் (ரிமைண்டர்), டிராஃபிக் நிலவரம், செய்திகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கண்ட்ரோல்களை இயக்க முடியும்.

    ஃபிட்ணஸ் அம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட் வொர்க்அவுட் கண்ட்ரோல்கள், உடற்பயிற்சி சார்ந்த தகவல்களை பெற முடியும். இத்தடன் வாட்ச் திரையை பிளாஷ்லைட் போன்று பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் மற்ற சாதனங்களுடன் வேலை செய்யும், இதனால் குளூக்கோஸ் மாணிட்டர், ப்ளூடூத் உள்ளிட்டவைகளுடன் இணைந்து வேலை செய்யும். 



    * மேக் ஒ.எஸ். ஹை சியரா:

    புதிய மேக் ஒ.எஸ்.-இல் ஆப்பிள் அதிகப்படியான மாற்றங்களை வழங்கவில்லை. எனினும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அம்சங்களில் ஸ்மார்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சஃபாரி பிரவுசருக்கான அப்டேட்கள், வீடியா பிளாக்கிங் மற்றும் போட்டோ எடிட்டிங் உள்ளிட்ட அம்சங்களில் புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் அதிக சக்திவாய்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப்ஷன் அன்-ரியல் கேமிங் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது.



    * புதிய மேக்:

    ஆப்பிள் ஐமேக் சாதனத்தில் அதிவீன டிஸ்ப்ளே, அதிவேக பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் திறன் கொண்ட பிராசஸர், விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை உருவாக்கும் வசதி, புதிய போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களில் அதிவேக சிப்செட் மற்றும் டிரைவ்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இதேபோன்று மேக்புக் ஏர் சாதனத்தில் அதிவேக சிப்செட் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஐமேக் சாதனத்தின் முண்ணோட்டம் ஒன்றையும் ஆப்பிள் வெளியிட்டுள்ளது, 27 இன்ச் டார்க் கிரே நிறம் கொண்டுள்ள ஐமேக் ப்ரோ 18 பிராசஸர் கோர்களினால் சக்தியூட்டப்படுகிறது. 

    டிசம்பர் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ள ஐமேக் விலை 4999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,21,613 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    * ஐ.ஒ.எ.எஸ் 11:

    ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை இயக்கும் ஐ.ஒ.எஸ். 11 ஐமெசேஜ்களை சாதனங்களிடையே சிறப்பாக இயக்கி, மெமரியை சேமிக்கும். பழைய போட்டோ மெசேஜ்களை கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து சாதனத்தின் மெமரியை பயனுள்ளதாக பயன்படுத்த வழி செய்யும். 

    ஆப்பிள் பே சேவையை ஐமெசேஜ் மூலம் மற்றவர்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம், இதற்கென ஆப்பிள் பே கேஷ் கார்டு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



    * 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ:
     

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டேப்லெட் மெல்லிய வடிவமைப்பு, ஹோம் பட்டன் மற்றும் கீபோர்டு கவர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ $649 அதாவது இந்திய மதிப்பில் ரூ.41,753 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    * ஹோம்பாட்:

    ஆப்பிளின் சிறிய ஹோம்பாட் ஸ்பீக்கர் சோனோஸ் மற்றும் அமேசான் எக்கோ சாதனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மியூசிக்கோலாஜிஸ்ட் எனும் வசதியை கொண்டுள்ளது. 

    செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மியூசிக்கோலாஜிஸ்ட் ஆப்பிள் அக்கவுண்ட் மூலம் பாடல்களை இயக்க சிரியுடன் உரையாடும்.
    ஸ்மார்ட்போன்களை உடையாமல் பார்த்து கொள்ளும் மலிவு விலை, எடை குறைந்த, கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    ஸ்மார்ட்போன்களை வாங்கி ஒரு வாரமாவது தவறி கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கிறது. இதற்காகவே பலரும் ஸ்மார்ட்போனுடன், அதை பாதுகாக்கும் பேக் கவர் ஒன்றையும் வாங்குகின்றனர். 

    எவ்வாறான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தினாலும், கையில் இருந்து நழுவி கீழே விழும் போது அதன் திரை அல்லது மற்ற பாகங்களில் கீறல்கள் ஏற்படும். நாள்பட சிறு கீறல்கள் ஸ்மார்ட்போன்களை உடைத்து விடுகின்றன. பல ஆயிரங்களை செலவு செய்து வாங்கும் ஸ்மார்ட்போன்கள், சில வாரங்களில் உடைந்து போவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.   

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் தொல்லைக்கு ஐயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய விடை கண்டுள்ளனர். எல்டன் சான்டோஸ் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ள புதிய வகை கவசம் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை உடையாமல் பார்த்து கொள்ளும். 



    மலிவு விலையில், எடை குறைவானதாக இருக்கும் புதிய வகை கவசம் செமிகன்டெக்டர் ஆலைகளில் அதிகளவு தயாரிக்க முடியும். சிலிகான் போன்ற இயற்பியல் அம்சங்கள் கொண்ட புதிய கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் 'மிராக்கிள் மெட்டீரியல்' (miracle material) என அழைக்கின்றனர். எனினும் இது சிலிகானை விடை மேம்படுத்தப்பட்ட இரசாயன தரம், குறைந்த எடை மற்றும் நெகிழும் தன்மை கொண்டதாகும். 

    புதிய கவசம் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என்பதால் சாதனத்தின் பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    புகைப்படம்: குயின்ஸ் பல்கலைக்கழகம்
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8  மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அந்நிறிவனம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 வெற்றி பெறாத நிலையில், புதிய நோட் 8 ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படலாம் என கூறப்படும் நோட் 8 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு நொக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 18.5:9 அளவு கொண்ட டிஸ்ப்ளேவினை சாம்சங் இன்ஃபினிட்டி என அழைக்கிறது. இவ்வகை டிஸ்ப்ளே வடிவமைப்பு வழக்கத்தை விட பெரிய திரையுள்ள அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    முன்னதாக வெளியிடப்பட்ட கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை விட பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்த் டிஸ்ப்ளே, அமெரிக்காவில் வெளியிடப்படும் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் மற்ற நாடுகளில் வெளியாகும் மாடல்களில் எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    இத்துடன் ஆப்டிக்கல் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 12 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும். மேலும் 3X ஆப்டிக்கல் சூம், 6P லென்ஸ் வசதி வழங்கப்படலாம். 

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என்றும் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரெட்மி 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரெட்மி 4 இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விற்பனை துவங்கிய நான்கு நாட்களில் மட்டும் 2.5 லட்சம் ரெட்மி 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    அந்த வகையில் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் என்ற தலைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் சீன தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. MAE136 என்ற மாடல் பெயரில் ரெட்மி 5 பட்டியலிடப்பட்டுள்ளது. 

    மேலும் புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    சியோமி ரெட்மி 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    * 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
    * 1.4 அல்லது 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
    * 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    * 5 எம்பி செல்ஃபி கேமரா
    * 4000 எம்ஏஎச் பேட்டரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ  

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: MobileXpose
    மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வாஷிங்டன்:

    மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான மோட்டோ Z2 பிளே அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ Z2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முந்தைய பதிப்புகளைப் போன்றே மோட்டோ மாட்ஸ்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மோட்டோ Z2 பிளே 499 டார்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் மோட்டோ Z2 பிளே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    மோட்டோ Z2 பிளே சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
    * 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 ஆக்டாகோர் பிராசஸர்
    * 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    * 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
    * 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
    * 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
    * 3000 எம்ஏஎச் பேட்டரி

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, GPS/ A-GPS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் சாதனங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பழைய மோட்டோ மாட்ஸ்களும் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்.



    புதிய மோட்டோ மாட்ஸ்:

    மோட்டோ பவர் பேக் - 2200 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருப்பதால், ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும். இதனால் ஸ்மார்ட்போனிற்கு 16 மணி நேரத்திற்கு கூடுதல் சார்ஜ் கிடைக்கும். இதன் விலை 49.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    டர்போ பவர் பேக் - 3490 எம்ஏஎச் கூடுதல் பேட்டரி மற்றும் அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 50 சதவிகித பேட்டரியை சார்ஜ் செய்திட முடியும். இதன் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. 

    வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டைல் ஷெல் - 39.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 என்ற விலையில் கிடைக்கிறது. இத்துடன் ஜெ.பி.எல். சவுண்டு பூஸ்ட் 2 மோட்டோ மாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிக்ஸ்டான்ட் வசதி கொண்டுள்ளது, இதன் விலை 79.99 டாலரக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

    மோட்டோ கேம் பேட் - கண்ட்ரோலர்களை கொண்டுள்ள அனைத்து கேம்களையும் இயக்கும் வசதி கொண்ட கேம்பேட் உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளுடூத் இல்லாமல் மோட்டோ மாட்ஸ் கொண்டு இணைந்து கொள்ளும். இத்துடன் 1000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ள மோட்டோ கேம் பேட் விலை 79.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் 15-ந்தேதி வெளியாகும் என்றும் இது மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த டீசர்களை அந்நிறுவனம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன் தற்சமயம் வரை வெளியாகியுள்ள டீசர்களில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக உறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

    இதுவரை ஒன்பிளஸ் 5 பிராசஸர், பெயர், சாத்தியமான நிறங்கள் மற்றும் கேமரா சார்ந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சமீபத்திய டீசர்களில் ஒன்பிளஸ் 5 வடிவமைப்பு, மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை தெரியவந்துள்ளது. 



    ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெய்போ தளத்தில் பதிவிட்டுள்ள தகவல்களில் ஒன்பிளஸ் 5 இதுவரை வெளியானவற்றில் மெல்லிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது ஒன்பிளஸ் 5 போனினை மெலியதாக்க எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே ஒன்பிளஸ் 5 சாதனத்தை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



    ஒன்பிளஸ் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே, 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன்
    * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் 
    * 8 ஜிபி ரேம்
    * 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * இரட்டை கேமரா அமைப்பு
    * வாட்டர் & டஸ்ட் ப்ரூஃப் வசதி

    ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ஜூன் 15-ந்தேதி வெளியாகும் என்றே தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களும் தெரிவிக்கின்றன. 

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 5 சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
    ஒப்போ நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் பிளாக் லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் பிளாக் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரையொட்டி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ F3 பி.சி.சி.ஐ. (BCCI) லிமிட்டெட் எடிஷன் போனிற்கான ஏலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு முந்தைய நாள் (ஜூன் 3-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    நிறத்தை தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டூயல் செல்ஃபி கேமரா, 16 எம்பி டபுள் வியூ வைடு ஆங்கிள் கேமரா, 8 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் போனினை அன்லாக் செய்ய கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.2 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலர் ஒ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ F3 சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன்
    * 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6750T6 ஆக்டா கோர் சிப்செட்
    * 4 ஜிபி ரேம்
    * 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    * 13 எம்பி பிரைமரி கேமரா, 1.3 இன்ச் சென்சார்
    * 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    * 3200 எம்ஏஎச் பேட்டரி

    ஒப்போ F3 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் பி.சி.சி.ஐ. லோகோ இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒப்போ F3 லிமிட்டெட் எடிஷன் ல்மார்ட்போன் ஜூன் 4-ந்தேதி முதல் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சீனாவில் இருந்து வரும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனத்தின் டூயல் பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பீஜிங்:

    சாம்சங் நிறுவனத்தின் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், டூயல் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    அதன்படி சீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) அந்நிறுவனத்தின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கின்றன. முன்னதாக சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வழங்கப்படும் என்றும் இதுவே சாம்சங்கின் முதல் டூயல் கேமரா போனாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 



    இந்நிலையில், சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) பிளாஸ்டிக் பேக் கவர் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. இதில் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் வெய்போவில் கசிந்துள்ள புகைப்படங்கள் கேலக்ஸி ஜெ7 (2017) போனின் சீன பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.  

    முந்தைய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா, ஸ்னாப்டிராகன் 425 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 7870 சிப்செட் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் 12 எம்பி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்லது 12 எம்பி செல்ஃபி கேமரா, என்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நோக்கியாவின் ரீ-எண்ட்ரி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய நோக்கியா 9 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    நோக்கியா 9 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பென்ச்மார்க்கிங் தளத்தில் 'அன்-நோன் ஹார்ட்' (UnKnown Heart) என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான நோக்கியா 9 சிறப்பம்சங்களும் இம்முறை வெளியாகியுள்ள அம்சங்களும் ஒரே மாதிரி இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 8 ஜிபி ரேம், ஆக்டா கோர் 1.9 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 5.27 இன்ச் 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 22 எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. நோக்கியாவின் 3D சவுண்டு வழங்கும் OZO ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் 350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    ×