என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்கோ: உலகின் முதல் அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்
    X

    இம்கோ: உலகின் முதல் அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

    அமேசானின் அலெக்சா மூலம் இயங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய இம்கோ வாட்ச் பல்வேறு வசதிகளை கொண்டிருப்பதோடு பட்ஜெட் விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:   

    அமேசானின் அலெக்சா மூலம் இயங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்சினை எர்ஹா இணைதளம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இம்கோ வாட்ச் சாதனத்தில் மாற்றத்தக்க டைம்-சோன், கேலெண்டர், மியூசிக் ப்ளூடூத் கண்ட்ரோல், நோட்டிபிகேஷன், ஸ்டெப் கவுன்ட்டர், ஹார்ட் ரேட் மாணிட்டர், மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் அலெக்சா வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை இந்த ஸ்மார்ட்வாட்ச் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டு ஸ்மார்ட் ஹோம் கேஜெட்களையும் இயக்க முடியும் என்றும், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் கேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் AMOLED ஃபுல் சர்க்கிள் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி பிளாஷ் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டுள்ள புதிய அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் விலை இந்திய சந்தையில் ரூ.13,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைனில் விற்பனைக்கு பட்டியலிடப்படவில்லை.
    Next Story
    ×