என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் ப்ளிப் போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில காலமாக இணையத்தில் கசிந்து வந்த கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் காலத்தில் ப்ளிப் போன்களை தயாரித்து வருவதாக கூறப்பட்டதை சாம்சங் உண்மையாக்கியுள்ளது. SM-G1650 என்ற மாடல் பெயரில் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வந்த கேலக்ஸி ஃபோல்டர் 2 தென் கொரிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. புதிய ப்ளிப் போன் வாடிக்கையாளர்களுக்கு பழைய ப்ளிப் அனுபவத்தை புதிய ஸ்மார்ட் அம்சங்களுடன் இணைந்து வழங்குகிறது. எல்டிஇ மற்றும் 3ஜி என இரண்டு மாடல்களில் புதிய ப்ளிப் போன் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 சிறப்பம்சங்கள்:
* 3.8 இன்ச் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 1950 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம்
சமூக வலைத்தளங்களை இயக்க பிரத்தியேக பட்டன்களை கொண்டுள்ள கேலக்ஸி ஃபோல்டர் 2 கருப்பு மற்றும் கர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போனின் விலையை பொருத்த வரை 297,000 won அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருவதாக சீன இணையதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. SM-G1650 பெயரில் தயாராகி வரும் புதிய ப்ளிப் போன் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்
பீஜிங்:
சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முன்னணியில் இருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருகிறது. சீன இணையத்தளம் ஒன்றில் SM-G1650 பெயரில் சாம்சங் ப்ளிப் போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே இதே பெயரில் ப்ளிப் போனின் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சாம்சங் ப்ளிப் போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 என அழைக்கப்படும் என்றும் கருப்பு நிறத்தில் கோல்டு நிற கீபேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹோம் பட்டன், பேக் பட்டன்கள் மட்டுமின்றி கேமரா, மின்னஞ்சல் மற்றும் மெசேஜிங் அம்சங்களுக்கு ஷார்ட்கட் பட்டன்களும் இடம்பெறும்.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 3.8 இன்ச், 800x480 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, 1950 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 மற்றும் மேம்படுத்தப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் வெளியிடப்பட்டது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி இந்தியவில் விராட் கோலி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.
புதுடெல்லி:
ஜியோணி ஏ1 ஸ்மார்ட்போனின் விராட் கோலி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுவதோடு விற்பனை ஜூன் 27-ந்தேதி துவங்குகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோணி ஏ1 டூயல் சிம் ஸ்லாட், 5.5 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1980 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 5P லென்ஸ் மற்றும் செல்ஃபி பிளாஷன் வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ P10 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க பொக்கே-செல்ஃபி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் செல்ஃபி போட்டோக்களின் பேக்கிரவுண்டினை பிளர் செய்யும், இதனால் செல்ஃபி வழக்கத்தை விட அழகாக காட்சியளிக்கும்.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் மேக்ஸ்ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 4ஜி வோல்ட்இ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அமேசான் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அவர்களது அமேசான் கணக்கில் ரூ.1,280 கேஷ்பேக், பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2,000 வரை கூடுதல் தள்ளுபடி மற்றும் வோடபோன் நெட்வொர்க்கில் 45 ஜிபி டேட்டா ஐந்து மாத வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் கில்லர் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் 22-ந்தேதி வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 5 இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 5 479 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.31,000 மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் 499 டாலர்கள் அதாவது இந்தி்ய மதிப்பில் ரூ.32,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இதோடு ஒன்பிளஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஒன்பிளஸ் 5 பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
* எல்டிஇ, வோல்ட்இ
ஆப்பிள், சாம்சங், சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலையை விட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், ஆக்சிஜன் ஒ.எஸ். 4.5.0 கொண்டு இயங்குவதோடு ஸ்லேட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
உலகில் விலை உயர்ந்த தொலைகாட்சி பெட்டிகளை தயாரித்து வரும் சி சீட் நிறுவனத்தின் புதுவரவு தொலைகாட்சி சி சீட் 262. மிகப்பெரிய வைட்ஸ்கிரீன் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ள டிவியின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வியன்னா:
சர்வதேச மின்சாதன சந்தையில் ஆடம்பர தொலைகாட்சிகளை தயாரிக்கும் நிறுவனமான சி சீட் நிறுவனத்தின் புதிய மாடல் டிவி வெளியிடப்பட்டுள்ளது. சீ சீட் 262 என அழைக்கப்படும் புதிய தொலைகாட்சி உலகின் மிகப்பெரிய வைட்ஸ்கிரீன் 4K டிவி என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த சி சீட் நிறுவனம் போர்ஷ் வடிவமைப்பு கொண்டிருந்த 201 இன்ச் அவுட் டோர் எல்இடி டிவிக்காக 'பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் 2012' எனும் விருதினை பெற்றது. புதிய 262 மாடல் எல்-அகௌஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஆடியோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதில் மொத்தம் பத்து உயர்-ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

20.16 அடி அகலம் கொண்ட சி சீட் 262, உயரத்தில் 8.44 அடி உள்ளது. இதன் கருப்பு நிற எல்இடி தொழில்நுட்பம் 5,000:1 வீதத்தில் 800 நிட் பிரைட்னஸ் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 4K மீடியா சர்வெர் கொண்ட சி சீட் 262 சினிமா அனுபவத்தை வழங்க டிவியின் மானிட்டர் விசேஷ துணி கொண்டு மூடப்பட்டுள்ளது. ரிமோட் பட்டனை கிளிக் செய்ததும் திரை தானாக அவிழ்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய டிவியை பொருத்தும் இடவசதி கொண்டவர்கள் 800 கிலோ எடை கொண்ட இந்த டிவையை 5,49,000 டாலர்களுக்கு வாங்க முடியும். இதன் இந்திய மதிப்பு ரூ.3,53,91,285 ஆகும். இதில் டிவியை பொருத்தும் கட்டணம் மட்டும் 38,500 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,81,902.50 ஆகும். சுமார் மூன்று கோடியே ஐம்பது லட்சம் கொடுத்து டிவி வாங்க தயார் என்பவர்களுக்கு டிவி தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களில் கட்டாய அம்சமாகிவிட்ட கைரேகை ஸ்கேனர்கள் பொதுவாக பிரைமரி கேமரா அருகில் அல்லது ஹோம் பட்டனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் வழங்குவதில் சீன நிறுவனம் முந்தியுள்ளது.
பீஜிங்:
ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கைரேகை ல்கேனர் வழங்க முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் திணறி வரும் நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனரினை டிஸ்ப்ளேவில் வழங்கியுள்ளது.
விவோ எக்ஸ் 9 பிளஸ் என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனின் பணிகள் நிறைவுற்றதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் கூடுதல் இட வசதியை வழங்கும். இதனால் வழக்கமாக கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்ட இடத்தில் பல்வேறு இதர வசதிகளை வழங்க முடியும்.
இதுகுறித்து கிஸ்சைனா வெளியிட்டுள்ள தகவல்களில் டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் 9 தான் என குறிப்பிட்டுள்ளது. இதை விவரிக்கும் வீடியோ வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டது. வெய்போ வீடியோவில் டிஸ்ப்ளேவை தொட்டே ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யப்படுகிறது.
புதிய விவோ எக்ஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர், மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் 20 எம்பி + 8 எம்பி டூயல் கேமராக்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அழுத்தி பிடித்தால் உங்களுக்கு விருப்பமான அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ள எச்டிசி யு11 முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட எச்டிசி யு11 ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவில் வெளியிட்டது. புதிய எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.51,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் எச்டிசி யு11 ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ள எச்டிசி யு11 முன்பதிவு ஜூன் 17-ந்தேதி துவங்குகிறது. எச்டிசி யு11 ஸ்மார்ட்போனினை எச்டிசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1,999 மதிப்புள்ள எச்டிசி பிளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிசி யு11 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் குவாட் எச்டி 1440x2560 பிக்சல், சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், எச்டிசி சென்ஸ் ஸ்கின்
* 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
எச்டிசி யு11 கேமரா:
* 12 எம்பி பிரைமரி கேமரா, 1.4 மைக்ரான் பிக்சல்,
* அல்ட்ரா ஸ்பிரெட் ஆட்டோஃபோகஸ்
* f/1.7 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்
* 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
எச்டிசி யு11 கனெக்டிவிட்டி:
* ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர்
* 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சாரக்ஜ் 3.0
* GPS/ A-GPS, GLONASS, யுஎஸ்பி 3.1
* டைப் சி-போர்ட், ப்ளூடூத் 4.2, வைபை, என்எஃப்சி
* IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
* கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா

புதிய எச்டிசி யு11 விசேஷ அம்சமாக அதன் ஸ்க்வீஸ் (squeeze) அம்சம் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் ஓரங்களில் அழுத்தி பிடித்து கேமரா, குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இத்துடன் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அம்சங்களையும் ஸ்க்வீஸ் ஜெஸ்ட்யூரில் சேர்க்க முடியும். இதனால் ஸ்மார்ட்போனின் ஓரங்களில் அழுத்தி பிடிக்கும் போது இயக்கப்பட வேண்டிய அம்சத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.
முன்னதாக எச்டிசி நிறுவனத்தின் யு11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் ஆப்ஷன் மற்றும் அமேசிங் சில்வர், சஃபையர் புளூ, பிரில்லியண்ட் பிளாக், ஐஸ் வைட், சோலார் ரெட் நிறங்களில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் புதிய எச்டிசி யு11 விற்பனை ஜூன் 26-ந்தேதி துவங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ப்ரூஃப் வசதி மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்பிரான்சிஸ்கோ:
உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சிறப்பம்சங்கள், வடிவமைப்பு, விலை என பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை உறுதி செய்துள்ளார்.
பெகட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்று ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனமான விஸ்ட்ரன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் வாங் புதிய ஐபோனில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஸ்ட்ரன் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் நடைபெற்ற வருடாந்திர விவாதத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறும் போது, 'முந்தைய ஐபோன்களுக்கும் புதிய சாதனத்திலும் தயாரிப்பு பணிகளில் அதிகளவு மாற்றங்கள் இல்லை என்றாலும், வாட்டர் ப்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்'. என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வெளியான பல்வேறு தகவல்களில் புதிய ஐபோனில் வாட்டர் ப்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்சமயம் வழங்கப்பட்டு வரும் Qi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமா அல்லது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இதோடு சமீபத்திய ஆப்பிள் காப்புரிமைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் வெளியாகின. இவை ஐபோன்களை வை-பை ரவுட்டர் போன்று சார்ஜ் செய்யும் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய ஐபோனில் சாம்சங் OLED வகை டிஸ்ப்ளேக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சாம்சங் நிறுவனத்தின் S8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் என அழைக்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட்போன் கீக்பென்ச் எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் கசிந்துள்ளது. இந்த தளத்தில் SM-G892A என்ற மாடல் நம்பர் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் கொண்டுள்ளது.
அதன்படி புதிய சாம்சங் கேல்க்ஸி S8 ஆக்டிவ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. இதுவரை வெளியான புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் அதிக உறுதியானதாக வடிவமைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இத்துடன் சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் டூயல்-கர்வ்டு டிஸ்ப்ளே, கீழே விழுந்தால் அதிக பாதிப்பு ஏற்படாத வடிவமைப்பு மற்றும் டஸ்ட், வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறாது என்றே தெரிகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் ரூ.31,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 சிப்செட், 6.0 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 16 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், 4ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹூவாயின் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் ஹூவாய் ஏற்கனவே வெளியிட்ட ஹூவாய் பி10 ஸ்மார்ட்போனும் ஒன்று தான். இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் பிரான்டிங் மற்றும் செய்கா லென்ஸ் வழங்கப்படவில்லை.
ஹானர் பி10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 960 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. ஹானர் 9 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கிரின் 960 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் 9 லஸ்மார்ட்போன் 4ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 9 சிறப்பம்சங்கள்:
* 5.15 இன்ச், 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கிரின் 960 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 20 எம்பி பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம்
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் 9 ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி, 4ஜி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டடுள்ளது.
முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 9 ஸ்மார்ட்போன் முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 3,50,000 முன்பதிவுகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை முன்பதிவுகளும் ஒரே இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்த ஆண்டு மோட்டோரோலாவின் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், மோட்டோ எக்ஸ் மாடலில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இம்மாத இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
மோட்டோ எக்ஸ் 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் நடுத்தர விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரி யாதிம் என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்களில் புதிய மோட்டோ எக்ஸ் 4 ஜூன் மாதம் 30-ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ரூ.20,999 என்ற விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியை வழங்கும் IP64 சான்று பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஸ்மார்ட்போன் சுற்றி கிளாஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மோட்டோ எக்ஸ் 4 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3800 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
* 13 எம்பி செல்ஃபி கேமரா f/2.2 அப்ரேச்சர்
மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுடன் மோட்டோ ஜி5எஸ்+ ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ இசட் 2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.38,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீயோல்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சிறு மேம்படுத்தல்களுடன் வெளியாகயிருக்கும் புதிய ஸ்னாப்டிராகன் 836 ஆக்டா கோர் பிராசஸர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கொண்டிருக்கும் என்றும் இதன் ஜிபியு 740 மெகாஹெர்ட்ஸ் வரை இருக்கும்.

மேலும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியாகவுள்ள எல்ஜி வி30, கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்சல் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்துடன் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் முன்பக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இது டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி S8, மற்றும் S8+ போன்றே நோட் 8 ஸ்மார்ட்போனிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, 3200 எம்ஏஎச் பேட்டரி, சாம்சங் பிக்ஸ்பி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.






