என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்ச்மார்க் லீக்ஸ்: சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் முழு தகவல்கள்
    X

    பென்ச்மார்க் லீக்ஸ்: சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் முழு தகவல்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பென்ச்மார்க்கிங் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சாம்சங் நிறுவனத்தின் S8 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் என அழைக்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட்போன் கீக்பென்ச் எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் கசிந்துள்ளது. இந்த தளத்தில் SM-G892A என்ற மாடல் நம்பர் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் கொண்டுள்ளது. 

    அதன்படி புதிய சாம்சங் கேல்க்ஸி S8 ஆக்டிவ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. இதுவரை வெளியான புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் அதிக உறுதியானதாக வடிவமைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.



    இத்துடன் சாம்சங் கேலக்ஸி S8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனில் டூயல்-கர்வ்டு டிஸ்ப்ளே, கீழே விழுந்தால் அதிக பாதிப்பு ஏற்படாத வடிவமைப்பு மற்றும் டஸ்ட், வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறாது என்றே தெரிகிறது. 

    முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் ரூ.31,900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 சிப்செட், 6.0 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 16 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், 4ஜி, ப்ளூடூத், வைபை மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×