என் மலர்
புதிய கேஜெட்டுகள்
உலகின் சிறிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை விட மிகச் சிறியதாக இருக்கும் புதிய மொபைல் போன் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சர்வதேச மொபைல் போன் சந்தையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிகச்சிறிய மொபைல் போன் யெஹ்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எலாரி நானோபோன் சி என அழைக்கப்படும் இந்த போன் கிரெடிட் கார்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலாரி நானோபோன் சி விலை ரூ.3,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள நானோபோன் சி அழகிய தோற்றத்தில், மிக எளிதாகவும் ஆண்டி-ஸ்மார்ட் மொபைல் போன் ஆகும்.
நானோபோன் சி 30 கிராம் எடையில் 1-இன்ச் 128x96 பிக்சஸ் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் MT6261D சிப்செட் மற்றும் RTOS இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 32 எம்பி ரேம், 32 எம்பி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நானோபோன் சி 280 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி 4 மணி நேர டாக்டைம், 4 நாள் ஸ்டான்ட்பை டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எம்.பி.3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ, போன் ரெக்கார்டிங் வசதிகளை கொண்டுள்ளது.
போன் அழைப்புகளுக்கு GSM கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ள நானோபோன் சி 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மோட்டோ இ4 விற்பனை நடைபெற்று வரும் நிலையில் புதிய மோட்டோ இ4 பிளஸ் இன்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மோட்டோ இ4 ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* மெமரியை நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5,000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும், இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ4 பிளஸ் விற்பனை இன்று இரவு 11.59 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அறிமுக சலுகையாக மோட்டோ பல்ஸ் ஹெட்போன்கள் தள்ளுபடி விலையிலும், ஹாட்ஸ்டார் சேவையில் இரண்டு மாத இலவச சந்தா, ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் டேட்டா, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.9000 வரை தள்ளுபடியும், ரூ.4000 வரை பைபேக் சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனத்தின் கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய எல்.ஜி. Q6 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய Q சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Q6 ஸ்மார்ட்போனுடன் அதிக ரேம் மற்றும் மெமரி கொண்ட Q6 பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது. இரு மாடல்களிலும் 5.5 இன்ச் FHD+ஃபுல்விஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மினிமல் பெசல்ஸ் மற்றும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளதோடு கைரேகை ஸ்கேனர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்ட யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எல்.ஜி. ஜி6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்த ஸ்கொயர் கேமரா மோட், ஜிஃப் மோட் மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. Q6 சிறப்பம்சங்கள்
* 5.5 இன்ச் 18:9 FHD+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளே
* ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* Q6α – 2 ஜிபி ரேம் / 16 ஜிபி மெமரி
* Q6 – 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி
* Q6+ – 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* சிங்கிள் / டூயல் சிம்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
* 4ஜி வோல்ட்இ, வை-ஃபை, ப்ளூடூத்
* 3000 எம்.ஏ.எச். பேட்டரி
எல்.ஜி. Q சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆஸ்ட்ரோ பிளாக் மற்றும் ஐஸ் பிளாட்டினம் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் Q6 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் வைட் மற்றும் டெரா கோல்டு நிறங்களிலும் Q6α டெரா கோல்டு மற்றும் Q6+ மெரைன் ப்ளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய எல்.ஜி. Q6 ஸ்மார்ட்போன் ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து ஆசிய சந்தைகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செல்போன் எவ்வாறு சக்தியூட்டப்படுகிறது என்ற முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (இந்திய வம்சாவெளினர் உள்பட) பேட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் இயங்க தேவையான மின்சாரத்தை ஆம்பியன்ட் ரேடியோ சிக்னல்கள் மற்றும் வெளிச்சத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
பேட்டரி இல்லாமல் இயங்கும் செல்போன் ப்ரோட்டோடைப் விளக்கத்தின் போது ஸ்கைப் கால்களை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஆஃப்-தி-ஷெல் உபகரணங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
புதிய செல்போனில் செல்லுலர் டிரான்ஸ்மிஷன்களில் பவர்-ஹங்ரி எனும் வழிமுறையை பயன்படுத்தினர். இது மொபைல் போன்கள் புரிந்து கொள்ளும்படி ஒலியை ஏற்படுத்தும் அனலாக் சிக்னல்களை டிஜிட்டல் டேட்டாவாக மாற்றும்.
இந்த வழிமுறையில் மின்சக்தி அதிகளவு பயன்படுத்தப்படும் என்பதால் ஆம்பியன்ட் மின்சாரத்தை சார்ந்த மொபைல் போன் வடிவமைப்பது சாத்தியமற்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டரி இல்லாமல் இயங்கும் செல்போனில்- மொபைல் போனில் வாடிக்கையாளர் பேசும் போதோ அல்லது கவனிக்கும் போது ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்களில் இருந்து சிறிய அதிர்வுகளை சக்தியூட்ட பயன்படுத்தி கொள்கிறது.
தகவல்களை பரிமாற்றம் செய்ய இந்த மொபைல் போன் பிரதிபலிக்கப்பட்ட சி்க்னல்களை பேச்சாக என்கோடு செய்ய மைக்ரோபோனை பயன்படுத்திக் கொள்கிறது. தகவல்களை பெறுவதற்கு என்கோடு செய்யப்பட்ட ரேடியோ சிக்னல்களை போனின் ஸ்பீக்கர் மூலம் ஒலி அதிர்வுகளாக மாற்றிக் கொள்கிறது.
ப்ரோட்டோடைப் சாதனத்தில் வாடிக்கையாளர்கள் தகவல் அனுப்பவும், கவனிக்கவும் இரு பட்டன்களை கிளிக் செய்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோட்டோடைப் கொண்டு சாதாரண போனின் அம்சங்களான தகவல் பரிமாற்றங்களை பட்டன்களை கிளிக் செய்து பெற முடிகிறது.
ஸ்கைப் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அழைப்புகளை பெறவும், மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளவும், முடிந்தது. ரேடியோ சிக்னல்களை பரிமாற்றம் செய்ய இந்த ஆராய்ச்சியாளர்கள் பிரத்தியேக பேஸ் ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் சாதாரண செல்லுலார் நெட்வொர்க் உள்கட்டமைப்புகளிலோ அல்லது வை-பை ரவுட்டர்களிலும் புகுத்தி அழைப்புகளை மேற்கொள்ள செய்யலாம்.
விவோ நிறுவனத்தின் X9s மற்றும் X9s பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனங்களின் சிறப்பம்சங்கள், முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ X9s மற்றும் X9s பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட X9 மற்றும் X9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.
விவோ அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் டூயல் செல்பி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விவோ X9s சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 20 எம்பி, 5 எம்பி செல்பி கேமரா அமைப்பு
* 3320 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

விவோ X9s பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.85 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 20 எம்பி, 5 எம்பி செல்பி கேமரா அமைப்பு
* 4015 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
இரண்டு ஸ்மார்ட்போன்களும் மேட் பிளாக், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் மெட்டாலிக் பாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் புதிய விவோ X9s மற்றும் X9s பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே CNY 2698 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,600 மற்றும் CNY 2998 அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிளின் 2017 ஐபோன் சார்ந்த கேட் ஃபைல்கள் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் வீடியோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் கசிந்த கேட் ஃபைல்களில் ஆப்பிளின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய ஐபோன் சார்ந்த வீடியோ ரென்டர்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இணைந்துள்ள புதிய வீடியோவில் கேட் ஃபைல்களில் இடம்பெற்றிருந்த தகவல்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐபோன் 8 ப்ரோட்டோடைப் சேர்ந்துள்ளது.

புதிய ப்ரோட்டோடைப் வீடியோவில் புதிய ஐபோன் கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபோன்களை விட புதிய கிளாஸ் மற்றும் மெட்டல் ஐபோன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஐபோனின் பவர் பட்டன் நீண்டதாகவும், டிஸ்ப்ளே அருகில் வழக்கத்தை விட சற்றே கீழே பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய தகவல்களில் அதிகம் இடம்பெற்றிருந்த டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஆண்டு ஐபோனில் இடம்பெறாது என்றும் இதன் டச்ஐடி-யாக பவர் பட்டன் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ள கேமரா அமைப்பு மற்றும் இரு கேமராக்களிடையே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 2017 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.8 இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளே
* டூயல் கேமரா அமைப்பு
* கைரேகை ஸ்கேனர்
* அதிக திறன் கொண்ட பேட்டரி
* சிறிய சிப்செட்
* கிளாஸ் வடிவமைப்பு
ப்ரோட்டோடைப் என்பதால் ஹார்டுவேர், முன்பக்க கேமரா, மைக் மற்றும் இதர சென்சார்கள் சார்ந்த தகவல்கள் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை.
2017 ஐபோன் ஸ்பெஷல் எடிஷன் என்பதால் ஐபோன் 8 என அழைக்கப்படாது என்றும், இதற்கென பிரத்தியேக பெயர் சூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் ஆப்பிள் வரலாற்றில் விலை அதிகமான ஐபோனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 2017 ப்ரோட்டோடைப் வீடியோவை கீழே காணலாம்..,
தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ், சென்போன் 4 சீரிஸ்-இன் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய சென்போன் 4 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை பார்ப்போம்.
புதுடெல்லி:
தாய்வானைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் தனது சென்போன் 4 சீரிஸ்-இன் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சென்போன் 4 மேக்ஸ் முதற்கட்டமாக ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் (ZC554KL) இருவித சிப்செட் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாடலில் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றொரு மாடலில் ஆக்டாகோர் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஐ.பி.எஸ். 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* ஆக்டாகோர் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* டூயல் சிம் ஸ்லாட்
அசுஸ் மேக்ஸ் ரக ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் பவர் பேங்க் வசதி சென்போன் 4 மேக்ஸ் ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் (ZC554KL) ரஷ்யாவில் RUB 13,900 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சியோமி ஏற்கனவே வெளியிட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட சியோமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட் 3 மற்றும் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரெட்மி ப்ரோ 2 எனும் ஸ்மார்ட்போனை சியோமி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை தயாரித்து வருகிறது என்றும் விரைவில் இவை விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிக பிரபலமாகியுள்ளதைத் தொடர்ந்து புதிய மாடல்கள் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படும் என்றும் ஹோம் பட்டனும் கைரேகை ஸ்கேனராக வேலை செய்யும் என கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் FHD 1080 பிக்சல் டிஸ்ப்ளே
* 64-பிட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
* அட்ரினோ 508 கிராபிக்ஸ்
* யுஎஸ்பி டைப்-சி 3.1
* குவிக் சார்ஜ் 4.0, ப்ளூடூத் 5
* 16 எம்பி பிரைமரி கேமரா f/2.0 அப்ரேச்சர்
* 13 எம்பி செல்ஃபி கேமரா
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதன் விலை 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இ4 மற்றும் இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ரூ.8,999 விலையில் துவங்கும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
மற்ற சந்தைகளில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் பாடி வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.
மோட்டோ இ4 சிறப்பம்சங்கள்:

* 5-இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* டூயல் சிம் ஸ்லாட்
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* கைரேகை ஸ்கேனர்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 2800 எம்ஏஎச் பேட்டரி
* ரேப்பிட் சார்ஜிங்
மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

* 5-இன்ச் 1280x720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
* 2 / 3 ஜிபி ரேம்,
* 16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* டூயல் சிம் ஸ்லாட்
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 13 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* கைரேகை ஸ்கேனர்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* ரேப்பிட் சார்ஜிங்
மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் ஐயன் கிரே மற்றும் ஃபைன் கோல்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டு ரூ.8,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ4 பிளஸ் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மோட்டோ சாதனங்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், மோட்டோ இ4 பிளஸ் விரைவில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலாவின் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மோட்டோ இ4 $179.99 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மோட்டோ இ4 விலை $179.99 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ரூ.8,500 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா வெளியிட்டது. இதே போல் மோட்டோ இ சீரிஸ் இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ இ4 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2800 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 427 சிப்செட்
* 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சர்வதேச சந்தையில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் 129.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,384 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் 179.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,609 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது.
சீயோல்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விலை 999 யூரோ அதாவது 1118 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.72,018 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 விலை 849 யூரோ என நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED 1440x2960 பிக்சல் டிஸ்ப்ளே, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 8 மேம்படுத்தப்பட்ட ஸ்ப்லிட்-ஸ்கிரீன் அம்சம், எஸ் பென் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைரேகை ஸ்கேனர் சரியாக பிளாஷ் லைட் மற்றும் இதய துடிப்பு சென்சார்களுக்கிடையே பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் புதிய S8 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் டெக்ஸ் வசதியும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ சில நாட்களில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஜிங்:
ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முந்தைய டீசரில் அந்நிறுவனம் புதிய அம்சம் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் கைரேகை ஸ்கேனர் லோகோ திரையினுள் பொருத்தப்பட இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எங்களின் புத்தம் புதிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம் என விவோ இந்தியா ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை வெளியிட்ட பெருமையை விவோ பெறும். ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு முன் புதிய தொழில்நுட்பம் கொண்டு வெளியாக இருக்கும் விவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இதுவரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற அம்சம் வழங்கப்படும் பட்சத்தில், 2017 ஐபோன் வெளியீடு தாமதமாகலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. முன்னதாக சாம்சங் நிறுவனம் இவ்வாறான தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போனில் தற்சமயம் வழங்காது என கூறப்பட்டது.






