என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் மோட்டோ இ4 பிளஸ் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்
    X

    இந்தியாவில் மோட்டோ இ4 பிளஸ் வெளியானது: விலை மற்றும் முழு தகவல்கள்

    மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மோட்டோ இ4 விற்பனை நடைபெற்று வரும் நிலையில் புதிய மோட்டோ இ4 பிளஸ் இன்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    முன்னதாக மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மோட்டோ இ4 ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 



    மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே 
    * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் 
    * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 
    * 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி 
    * மெமரியை நீட்டிக்கும் வசதி
    * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர் 
    * 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
    * 5,000 எம்ஏஎச் பேட்டரி 
    * ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி  

    மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும், இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ4 பிளஸ் விற்பனை இன்று இரவு 11.59 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் அறிமுக சலுகையாக மோட்டோ பல்ஸ் ஹெட்போன்கள் தள்ளுபடி விலையிலும், ஹாட்ஸ்டார் சேவையில் இரண்டு மாத இலவச சந்தா, ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் டேட்டா, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.9000 வரை தள்ளுபடியும், ரூ.4000 வரை பைபேக் சலுகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×