என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் ஃப்ளிப் போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நிறுவனத்தின் ஃபிளிப் போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் 'W' சீரிஸ்-இன் கீழ் புதிய ஃப்ளிப் போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.
இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் இந்த போன் 'SM-W2018' என்ற கோட் நம்பர் கொண்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த போன் உயர்-ரக மாடலாக இருக்கும் என்றும் ஃபிளாக்ஷிப் பிராசஸர், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 6 ஜிபி ரேம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய ஃப்ளிப் போனில் சாம்சங் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் ஃப்ளிப்போனில் 4.2 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, இரண்டாவது டிஸ்ப்ளே ஃபிளாப்பின் வெளிப்புறம் பொருத்தப்படும். போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவிலும் தரவுகளை பார்க்க முடியும்.
சாம்சங் ஃப்ளிப் போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் 2300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஃப்ளிப் போன் முதற்கட்டமாக தென் கொரியாவிலும் அதன்பின் மற்ற பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட MIUI 9 யூசர் இன்டர்ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் சார்ந்து இயங்கும் புதிய யூசர் இன்டர்ஃபேஸ்-இன் முழு தகவல்களை பார்ப்போம்.
பீஜிங்:
சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட MIUI 9 கஸ்டம் ஆண்ட்ராய்டு ரோம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்து இயங்கும் புதிய இண்டர்ஃபேஸ் பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது.
புதிய MIUI 9-இல் இமேஜ் சர்ச், ஸ்மார்ட் அசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் ஆப் லான்ச்சர் என மூன்று முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய MIUI 9 சியோமி எம்.ஐ. 5X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சீனாவில் புதிய MIUI 9 ரோம் பீட்டா ஆகஸ்டு 11-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முதலில் சீனாவில் சியோமி எம்.ஐ. 6 எம்.ஐ. 5X மற்றும் ரெட்மி நோட் 4X ஸ்மார்ட்போன்களில் MIUI 9 வழங்கப்பட இருக்கிறது.

MIUI 9 அம்சங்கள்:
முந்தைய பதிப்புகளை விட புதிய MIUI 9-இல் செயலிகள் மிகவேகமாக இயங்கும், புதிய வடிவமைப்பு அம்சங்கள், லாக் ஸ்கிரீனில் ஷார்ட்கட்கள், ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம், ஸ்மார்ட் ஃபன்ஷனாலிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய MIUI 9 சிஸ்டம் இயக்கத்தை ஆப்டிமைஸ் செய்து செயலிகளை முன்பை விட வேகமாக இயக்கும். மற்றொரு அம்சமான இமேஜ் சர்ச், முக்கிய குறியீடுகளை டைப் செய்து புகைப்படங்களை தேட வழி செய்கிறது.
இத்துடன் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் அம்சம் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் மிக எளிமையாக தேட வழி செய்கிறது. ஹோம் ஸ்கிரீனில் வலது புறத்தில் ஸ்வைப் செய்தால் செயலி, செய்திகள் மற்றும் கஸ்டமைஸ் செய்யக் கூடிய விட்ஜெட் உள்ளிட்டவற்றை இயக்க முடியும்.
ஸ்மார்ட் லான்ச்சர் அம்சம் திரையில் உள்ள தரவுகளுக்கு ஏற்ப செயலிகள் இயங்க பரிந்துரை செய்யும். மேலும் புதிய இன்டர்ஃபேஸ் அம்சங்கள் சீனாவில் மட்டும் வேலை செய்யும் என்றும் சர்வதேச சந்தையில் வழங்கப்படும் அம்சங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என சியோமி தெரிவித்துள்ளது. புதிய கஸ்டம் இயங்குதளத்தில் மூன்று புதிய தீம்களும் வழங்கப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 16-ம் தேதி நோக்கியா போன்களின் அடுத்த மைல்கல் விழாவிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் நோக்கியா 8 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
எச்எம்டி குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 16-ம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. பிரத்தியேக கூட்டத்தில் நோக்கியா போன்களின் அடுத்த மைல்கல் விழாவாக இது அமையும் என அழைப்பிதழலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் அந்நிறுவனம் நோக்கியா 8 சாதனங்களை வெளியிடுவது குறித்து எவ்வித அறிவிப்பையும் வழங்கவில்லை. எனினும் இவ்விழாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.3 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
* 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
* 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
* 13 எம்பி செல்ஃபி கேமரா
* கைரேகை ஸ்கேனர், நோட்டிபிகேஷன் எல்இடி
* டூயல் ஸ்பீக்கர்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
புதிய நோக்கியா 8 புளூ, ஸ்டீல் மற்றும் புளூ மற்றும் கோல்டு காப்பர் நிறங்களில் வெளியாகும் என்றும் இதன் விலை 686 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,195 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்எம்டி குளோபல் ஸ்மார்ட்போன் விழா லண்டன் நகரில் ஆகஸ்டு 16-ம் தேதி மாலை 7.30 மணி இந்திய நேரப்படி அதிகாலை 12.00 மணிக்கு துவங்குகிறது.
மைக்ரோமேக்ஸ் யு டெலிவென்ச்சர்ஸ் பிரான்டின் யு யுனிக் 2 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் யு யுனிக் 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட யுனிக் ஸ்மார்ட்போனான யுனிக் 2 ட்ரூகாலர் இன்டிகிரேஷன் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 4ஜி வோல்ட்இ வசதி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் யு யுனிக் 2 ஜூலை 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆக்செல்லோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், பிராக்சிமிட்டி சென்சார் உள்ளிட்ட அம்சங்களுடன் மெட்டல் பேக் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ள யு யுனிக் 2 ட்ரூகாலர் வசதியுடன் வழங்கப்படுகிறது.

யு யுனிக் 2 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் IPS டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 சிப்செட்
* 2 ஜிபி ரேம்
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* 2500 எம்ஏஎச் பேட்டரி
யு யுனிக் 2 இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஷேம்பெயின் மற்றும் கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கும் யு யுனிக் 2 அறிமுக சலுகைகள் சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து எச்எம்டி குளோபல் புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்த வரையில் அந்நிறுவனத்தின் நோக்கியா 2 சார்ந்த தகவல்கள் இணையத்தில் சகசிந்துள்ளது.
நோக்கியா 2 ஸ்கெட்ச் படங்கள் சீனாவின் பெய்டு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போனுடன் புதிய நோக்கியா 2 இடம்பெற்றுள்ளது. புதிய தகவல்களின் படி புதிய நோக்கியா 2 ஏற்கனவே வெளியிடப்பட்ட நோக்கியா 3-யை விட சிறியதாக இருக்கிறது.
சில தகவல்களில் புதிய நோக்கியா 2 பழைய நோக்கியா லூமியா 620 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா லூமியா 620 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி நோக்கியா 2 எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மலிவு விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் நான்கு ARM கார்டெக்ஸ்-A7 சிபியு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், அட்ரினோ 304 கிராஃபிக்ஸ் வழங்கப்படும் என கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகியுள்ள ஸ்கெட்ச் படங்களில் நோக்கியா 2 பார்க்க நோக்கியா 3 அளவு கொண்ட டிஸ்ப்ளேவினை கொண்டிருக்கும் என்றே தெரிகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்சிடி ஸ்கிரீன் மற்றும் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் மாட்யூலர் ஸ்மார்ட்போன் சாதனத்தை தயாரிப்பதற்கான விண்ணப்பம் பேஸ்புக் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது சமீபத்திய தகவல்களில் அம்பலமாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கால்பதிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனத்தின் காப்புரிமை அமைந்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் பேஸ்புக் விண்ணப்பித்துள்ள தகவல்களில் மாட்யூலர் எலெக்ட்ரோமெக்கானிக்கல் சாதனத்தை உருவாக்குவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
காப்புரிமையில் பேஸ்புக் பதிவிட்டுள்ள தகவல்களில் புதிய சாதனத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஜி.பி.எஸ். மற்றும் போன் போன்று இயங்கும் சாதனத்தை குறிப்பட்டுள்ளது. இந்த காப்புரிமையில் போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருக்கிறது.
2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள காப்புரிமையில் மெயின் சேசிஸ், 3டி பிரின்டிங் மூலம் செய்யக் கூடிய மாட்யூல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய மாட்யூல்களுக்கு ஏற்ப மென்பொருள்களை டவுன்லோடு செய்து அவற்றின் பயன்பாட்டை மாற்ற முடியும்.
காப்புரிமைக்கான விண்ணப்பம் பில்டிங் 8, கூகுளின் பிராஜக்ட் அரா குழுவினர் இடம்பெற்றிருந்த பேஸ்புக்கின் நுகர்வோர் வன்பொருள் ஆய்வு கூடத்தில் இருந்து சமர்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனம் பிராஜக்ட் அரா என்ற பெயரில் மாட்யூலர் போன்களை தயாரித்து வந்து பின் அத்திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போனினை ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
மும்பை:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோனினை அறிமுகம் செய்தார்.
புதிய ஜியோபோன் இந்தியாவின் 50 கோடி பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியாவில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இத்துடன் ஜியோபோன்களில் அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்த மாதம் ரூ.153 செலுத்தினால் போதுமானது. ஜியோபோனில் தண் தணா தண் சேவைகளை ரூ.153 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம்.
ஜியோபோன் மட்டுமில்லாமல் டிவியை மேலும் ஸ்மார்ட்மாக மாற்றும் ஜியோபோன் டிவி-கேபிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து டி.வி.க்களிலும் இணைத்து வீடியோக்களை பெரிய திரையில் காணலாம். இத்துடன் ஜியோ தண் தணா தண் சலுகை ரூ.309க்கு வழங்கப்படுகிறது
புதிய ஜியோபோன்களில் பயன்படுத்த இரண்டு சாஷெட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.24 செலுத்தி இரண்டு நாட்களும், 54 ரூபாய் செலுத்தி ஒரு வாரத்திற்கு ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் புதிய ஜியோபோன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோபோன் வாங்குவோர் திரும்பப் பெறக் கூடிய ரூ.1,500 மட்டும் செலுத்தி புதிய ஜியோபோனினை வாங்க முடியும். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த தொகை திரும்ப வழங்கப்பட்டு விடும்.
ஜியோபோன் சிறப்பம்சங்கள்:
* 4ஜி எல்டிஇ
* வாய்ஸ் கமான்ட்வசதி
* ஜியோ செயலி சப்போர்ட்
* பல மொழிகளில் இயக்கும் வசதி
* எண் 5 அழுத்தி அவசர எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி
* விரைவில் என்.எஃப்.சி. வசதி
* வங்கி சேவைகளை இயக்கும் வசதி
ஜியோபோன் வாங்க விரும்புவோருக்கு ஆகஸ்டு 15 முதல் பீட்டா சோதனை முறையில் வழங்கப்படுகிறது. பீட்டா சோதனை இல்லாமல் ஆகஸ்டு 24 ம் தேதி முதல் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்ய முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தகவல்களின் படி புதிய ஐபோன் SE அந்நிறுவனத்தின் விலை குறைந்த சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ஐபோன் SE ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் SE 2017 விலை €399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,517 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE விலை ரூ.36,239 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் வழக்கப்படி ஆகஸ்டு மாதம் ஐபோன்கள் வெளியிடப்படாது. செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆப்பிளின் முதல் ஐபோன் SE மார்ச் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
4-இன்ச் திரை கொண்ட ஐபோன் SE சக்திவாய்ந்த ஹார்டுவேர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. மற்ற ஐபோன்களை விட ஐபோன் SE பிரபலமில்லாத மாடலாகவே பார்க்கப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த மாடலுக்கு வழங்கி வரும் வரவேற்பு காரணமாக ஐபோன் SE அப்டேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடல்களின் மெமரி 32 ஜிபி மற்றும் 128 ஜிபி வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் SE தயாரிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இந்த ஐபோன்களின் விநியோகம் துவங்கிய நிலையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி ஐபோன் SE தற்சமயம் ரூ.23,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் 1 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரீபிளேஸ்மென்ட் கியாரண்டியுடன் அறிமுகமாகி இருக்கும் கேன்வாஸ் 1 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கேன்வாஸ் 1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளதோடு மேட் பிளாக் மற்றும் குரோம் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு லிமிட்டெட் ஹார்டுவேர் வாரண்டி கொண்டுள்ள கேன்வாஸ் 1 இத்தகைய சலுகையை பெறும் முதல் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 சிறப்பம்சங்கள்
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 2 ஜிபி ரேம்
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 8 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2500 எம்ஏஎச் பேட்டரி
* டூயல் சிம் ஸ்லாட்
* ஆண்ட்ராய்டு நௌக்கட்
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, ஒ.டி.ஜி. சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஒ.டி.ஜி. சப்போர்ட் இருப்பதால் கீபோர்டு, மவுஸ் மற்றும் கேம் கண்ட்ரோலர்களை இயக்க முடியும்.
சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம், 5300 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஐ. மேக்ஸ் 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் புதிய ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்.ஐ. மேக்ஸ் 2 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் இதில் MIUI 9 சார்ந்த மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவச 4ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
சியோமி எம்ஐ. மேக்ஸ் 2 சிறப்பம்சங்கள்
* 6.44 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,
* ப்ளூடூத் 4.2, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* 5300 எம்ஏஎச் பேட்டரி
* குவிக் சார்ஜ் 3
இந்தியாவில் எம்.ஐ. மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்.ஐ. மேக்ஸ் 2 ஜூலை 20-ம் தேதி எம்.ஐ. தளத்திலும், எம்.ஐ. ஹோம் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிளிப்கார்ட், அமேசான், டாடா கிளிக் தளங்களிலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விற்பனை ஜூலை 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையி்ல், அதன் வடிவமைப்பு சார்ந்த புதிய தகவல்கள் ஆப்பிள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கசிந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 2017 வடிவமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இம்முறை கசிந்துள்ள தகவல்கள் ஃபோர்ப்ஸ் மூலம் வெளியாகியுள்ளது.
ஐபோன் கேஸ் வடிவமைப்பாளரான நொடஸ்-இல் பணியாற்றி வந்த ஃபோர்ப்ஸ்-இன் கார்டன் கெல்லி ஐபோன் 8 வடிவமைப்பு தகவல்களை ஒருங்கிணைத்துள்ளார். இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் விநியோக நிறுவனத்தில் இருந்து கிடைத்த கேட் ஃபைல்களை சார்ந்து உருவாக்கப்பட்டுளஅளது. தற்சமயம் நொடஸ் ஐபோன் 8 கேஸ்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களின் ஐபோன் 8 பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி-கியோ ஐபோன் 8-இல் அதிகப்படியான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

5.8 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க கேமரா, சென்சார் உள்ளிட்டவற்றிற்கு சிறிது இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக ஐபோன் 8-இல் சரிந்தநிலை இரட்டை கேமரா அமைப்பு, மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம். இதன் லைட்னிங் போர்ட் எவ்வித மாற்றமும் வழங்கப்படாமல் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் டச் ஐடி டிஸ்ப்ளேவினுள் வழங்கப்படலாம் அல்லது ஹோம் பட்டனில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க 3டி ஸ்கேனர் மாட்யூல் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 8 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் இத்துன் ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 8 விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,000 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டொங்சென் தெரிவித்துள்ளார்.
சீயோல்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஃபேப்லெட் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்
* 6.3 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ்
* ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் பிரைமரி கேமரா
* 3300 எம்.ஏ.எச். பேட்டரி






