என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனி்ற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இம்மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வெளியிட்டுள்ள புதிய டீசரில் அந்நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் புதிய டீசரில் ஒவ்வொரு அம்சமும் முழுமையாக மாற்றப்பட்டு புதிய பெயர் பெற்றுள்ளது. இத்துடன் முடியாததை செய் (#DoWhatYouCan't) என்பதை விளக்கும் ஹேஷ்டேக் சாம்சங் பதிவிட்டுள்ளது.
டீசரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் எஸ்-பென் அம்சங்களை குறிப்பிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 சீரிஸ் போன்றே புதிய ஃபேப்லெட் 6.3 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 8 ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக ரேம் கொண்டு வெளியாகும் மூன்றாவது சாம்சங் ஸ்மார்ட்போனாக நோட் 8 இருக்கும் என்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்ப்லிட்- ஸ்கிரீன் அம்சம் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. நோட் 8 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் வெளியாகும் என்றும் சாம்சங் டெக்ஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சாம்சங் வெளியிட்டுள்ள புதிய டீசரை கீழே காணலாம்..,
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பலமுறை இணையத்தில் கசிந்து வருவதைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய மோட்டோ எக்ஸ்4 பல்வேறு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியள்ளது.
இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்கள் பிரேசில் நாட்டை சேர்ந்த டுடோசெல்லுலார் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மோட்டோ எக்ஸ்4 தடிமனாக இருப்பதால், இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுவது உறுதியாகியுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஹைப்ரிட் சிம் ஸ்லாட், பேனலின் வலது புறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் வழங்க்பபடுகிறது. இயர்போன்களுடன் வெளிவர இருப்பதாக கூறப்படும் புதிய ஸ்மார்ட்போன் சான் பாலோவில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதுவரை வெளாகியுள்ள தகவல்களில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 5.0 இன்ச் 1080x1920 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம், 16 ஜிபி அல்லது 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் / 16 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி என இரண்டு வித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
புகைப்படம்: Tudocelular
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் A41+ எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் வெளியிட்ட ஐடெல் நிறுவனம் இம்முறை மற்றொரு ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஐடெல் பவர்ப்ரோ P41 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஐடெல் பவர்ப்ரோ P41 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் ஒரே சமயத்தில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த வழி செய்கிறது.
ஷேம்பெயின், சில்வர் கிரே மற்றும் கிராஃபைட் என மூன்று நிறங்களில் ஐடெல் பவர்ப்ரோ P41 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் கேபாசிட்டிவ் நேவிகேஷன் பட்டன்களை கொண்டுள்ள பவர்ப்ரோ லது புறத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஒற்றை கேமரா மற்றும் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை பவர்ப்ரோ P41 ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 5.0 இன்ச் WVGA 480x854ல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி வோல்ட்இ, ஒடிஜி சப்போர்ட், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் ஐடெல் பவர்ப்ரோ P41 டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருப்பதோடு 51 மணி நேர டாக்டைம் மற்றும் 35 நாள் ஸ்டாண்ட்பை வழங்கும் என ஐடெல் தெரிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட எல்ஜி கியூ 6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே மற்றும் மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட எல்ஜி கியூ6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனுடன் எல்ஜி கியூ6+ மற்றும் எல்ஜி கியூ+a ஸ்மார்ட்போன்களுடன் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இத்துடன் அமேசான் தளத்தில் நடைபெற்று வரும் கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

எல்ஜி கியூ6 சிறப்பம்சங்கள்:
* 5.5-இன்ச் 18:9 FHD+ 2160x1080 பிக்சல் ஃபுல்விஷன் 442ppi டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், அட்ரினோ 505 GPU
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* டூயல் சிம் ஸ்லாட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* 3,000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக், ஐஸ் பிளாட்டினம் மற்றும் டெரா கோல்டு நிறங்களில் இந்தியாவில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமோசன் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படகிறது.
இந்தியாவில் எல்ஜி கியூ6 வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு முறை மட்டும் திரையை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.3,200 மதிப்பிலான இலவச கேம்களும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 எட்டு வித நிறங்களில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆகஸ்டு 23-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் கேலக்ஸி நோட் 8 எட்டு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
சீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகியுள்ள புதிய லைவ் புகைப்படங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் சில்வர், ஆர்ச்சிட் கிரே/ வைலட், கோரல் புளூ, டார்க் புளூ, டீப் சீ புளூ, பின்க் மற்றும் கோல்டு நிறங்களை கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறமும் பதிவிடப்பட்டுள்ளது, இதில் நோட் 8 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பக்க பேனல் பிளாக் நிறத்திலும் எஸ் பென் அதற்குரிய நிறத்தில் வழங்கப்படுகிறது.
இத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போனின் வால்பேப்பர்களும் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுடன் இலவச டிரான்ஸ்பேரன்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த கேஸ் சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படும் என்றும் இதன் விலை KRW 20,000 முதல் KRW 30,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,100 முதல் ரூ.1,600 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த கேஸ் இலவசமாக வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் புதிய எஸ் பென் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. இதில் டூயல் கேமரா செட்டப், கிளாஸ் பேக், பெசல் லெஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டச் சென்சிட்டிவிட்டி வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 8 அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD 1440x2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 8895 சிப்செட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12 எம்பி டூயல் கேமரா அமைப்பு, வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.7 அப்ரேச்சர் மற்றும் இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் மற்றும் 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்படுகிறது.

இரண்டு லென்ஸ்களிலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் EUR1,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.75,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் செப்டம்பர் மாதம் முதல் இதன் விநியோகம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் மற்ற நாடுகளை விட முதற்கட்டமாக இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஐபோன் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தியாவில் ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் SE விற்பனை மந்தமானதைத் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் SE விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் SE அடுத்த ஆண்டு வாக்கில் மேம்படுத்தப்பட்டு புதிய ஐபோன் SE 2 மாடல் மற்ற நாட்டு சந்தைகளை விட இந்தியிவால் முதற்கட்டமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் SE மாடல்களை தயாரித்து வரும் விஸ்ட்ரன் நிறுவனம் புதிய ஐபோன்களையும் தயாரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தன் பங்குகளை இருமடங்கு அதிகரிக்க புதிய ஐபோன் SE வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் SE தயாரிப்பு பணிகளுக்கென புதிய தயாரிப்பு கூடத்தை விஸ்ட்ரன் ஆலையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் ஆலையை விரிவுப்படுத்த கூடுதல் நிலத்தை வாங்குவது குறித்து கர்நாடகா அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய ஐபோன் SE ஸ்மார்ட்போனில் 4-4.2 இன்ச் ஸ்கிரீன், ஆப்பிள் A10 பிராசஸர், 1700 எம்ஏஎச் பேட்டரி, 32 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அனைவருக்கும் ஏற்ற சிறிய ஸ்மார்ட்போனாக ஐபோன் SE இருக்கிறது.
ஆப்பிள் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையி்ல், ஆப்பிள் நிறுவனம் வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 8, ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் உள்ளிட்ட மாடல்களை இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 7எஸ் பிளஸ் மாடலில் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுபத்தப்பட்ட ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்கள் மற்றும் 64 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, A11 பிராசஸர், 2/3 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீயோல்:
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான எல்ஜி இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய எல்ஜி Q6 சார்ந்த டீசர் புகைப்படம் அந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புதிய டீசர் புகைப்படத்தில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எல்ஜி Q6 ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் விஷன் 18:9 டிஸ்ப்ளே 2160x1080 பிக்சல் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த UX 6.0 யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் சென்சார், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி, எல்டிஇ, வைபை. ப்ளூடூத், யுஎஸ்பி டைப் 2.0 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களில் வெளியான முழு விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரீமியம் OLED ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியாகும் என்ற தகவல் சாம்சங் டிஸ்ப்ளே தயாரிப்பு பணிகள் நடைபெறும் A3 ஆலையில் இருந்து கசிந்துள்ளது. இதே ஆலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான OLED பேனல்கள் தயாரிக்கப்படுகிறது.
ஆகஸ்டு மாத இறுதியில் ஆப்பிள் ஐபோன்களுக்கான OLED-க்கள் முழுவீச்சில் தயாரிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆலையில் ஐபோன்களுக்கென 5.8 மற்றும் 6.0 இன்ச் அளவுகளில் OLED-க்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7S மாடலில் எல்சிடி வகை டிஸ்ப்ளேக்களையும், 5.8 இன்ச் அளவில் OLED ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஐபோன் 8 அல்லது ஐபோன் X என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். குறைந்த அளவு தயாரிப்பு மற்றும் அதிகபட்ச வரவேற்பு புதிய ஐபோன் பற்றாக்குறைக்கு காரணங்களாக அமையும். தற்போதைய தகவல்களின் படி ஆண்டு முழுக்க தயாரிக்கப்படும் பட்சத்தில் 124 மில்லியன் 6.0 இன்ச் OLED பேனல்களும், 130 மில்லியன் 5.8 இன்ச் OLED பேனல்களும் தயாரிக்க முடியும்.
இதில் 60 சதவிகித தயாரிப்பு சாத்தியம் என்பதால் 75 மில்லியன் 6.0 இன்ச் பேனல்களும், 79 மில்லியன் 5.8 இன்ச் பேனல்களும் ஐபோன்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்க முடியும். 200 மில்லியன் என்ற விற்பனை அளவுகளில் இருப்பதைத் தொடர்ந்து கட்டாயம் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதியாகிறது.
முன்னதாக டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட் சாதனங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காரணமாக சாதனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் இதே நிலை புதிய ஐபோன்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் F3 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட ஒப்போ F3 இம்முறை ரோஸ் கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஒப்போ நிறுவனம் மே மாதம் இந்தியாவில் வெளியிட்ட F3 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறம் கொண்ட புதிய ஒப்போ F3 விலை இந்தியாவில் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய ஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடலினை பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் கேமரா இருக்கிறது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா, 1.3 இன்ச் சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் மற்றும் 8 எம்பி டபுள் வியூ வைடு-ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒப்போ F3 ஸ்மார்ட்போனில் பல்வேறு கேமரா அம்சங்களை வழங்குகிறது.
இத்துடன் போனின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது, இந்த கைரேகை ஸ்கேனர் 0.2 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்ட ஒப்போ F3 கலர் ஒ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட இன்-செல் TFT 2.5D வளைந்த டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்ட பாதுகாப்பு மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6750T6 ஆக்டாகோர் பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
பின்பக்கம் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 1.3 இன்ச் சென்சார், எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ F3 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஸ்லாட் டிரே வழங்கப்பட்டுள்ளதால் ஒரே சமயத்தில் இரண்டு சிம் ஸ்லாட் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட்களை பயன்படுத்த முடியும்.
ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3200 எம்ஏஎச் பேட்டரியும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒப்போ F3 ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி:
மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று மாடல்களின் புகைப்படங்களும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு ஏற்ப வளைந்த டூயல் கேமரா அமைப்பு கொண்டிருந்தது. கேமரா லென்ஸ்களுடன் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஹோம் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றும் வேலை செய்வது தெரியவந்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் மற்றும் 13 எம்பி இரண்டாவது கேமரா, மோனோகுரோம் சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 625 பிராசஸருடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் யுஎஸ்பி டைப்-சி, 3072 எம்ஏஎச் பேட்டரி, முன்பக்க கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஏற்கனவே வெளியான தகவல்களில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இதில் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே, மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மோட்டோ ஜி5எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூலை 25-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களில் இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்.ஐ. மிக்ஸ் 2 இருக்கிறது. அதிகப்படியான ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் எம்.ஐ. மிக்ஸ் 2 சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பணிகளில் முந்தைய எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனினை வடிவமைத்த பிரென்ச் வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் ஈடுபடுவார் என லெய் ஜூன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 இறுதி வடிவமைப்பு நிறைவடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

அதன்படி இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் முன்பக்கம் ஆப்பிள் ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கிறது. முழுமையான பெசல்-லெஸ் வடிவமைப்பு, ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ள நிலையில், செல்Hி கேமரா, சென்சார் மற்றும் இயர்போன் பொருத்துவதற்கான இடம் காலியாகவே காட்சியளிக்கிறது.
இதுதவிர முன்பக்க வடிவைப்புகளில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும் போனின் வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோலர்களும், இடது புறத்தில் சிம் கார்டு டிரே வழங்கப்பட்டுள்ளது.
பின்பக்க புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் சென்சார்கள் செங்குத்தாகவும், எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை. இதனால் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் கீழ் ஹெட்போன் ஜாக் இடம்பெறவில்லை. எனினும் புதிய சாதனத்தில் மேல் பகுதியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருந்தாலும் போனின் கீழ் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான அறிவிப்பு புதிய டீசர் மூலம் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெளியீடு சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனம் புதிய கில்லர்நோட் டீசரை தொடர்ந்து ஆகஸ்டு 9-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லெனோவோ பதிவிட்டுள்ள புதிய ஜிஃப் புகைப்படத்தில் எண் 8 பிரகாசமாக தெரிவதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கில்லர் நோட் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக லெனோவோ நிறுவனம் K7 நோட் ஸ்மார்ட்போனினை வெளியிடும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய K8 நோட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியுடன், அடுத்த நோட் ஸ்மார்ட்போன் எவ்வாறு அழைக்கப்படும் என்ற கேள்வியை லெனோவோ தனது வாடிக்கயாளர்களிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் புதிய K8 வெளியிடப்படுவது உறுதியானதைத் தொடர்ந்து லெனோவோ K7 ஸ்மார்ட்போனினை வெளியிடாமல் தவிர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 3T மாடலுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் 4 வெளியிடாமல் நேரடியாக ஒன்பிளஸ் 5 மாடலை வெளியிட்டது. இதேபோல் கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனமும் நோட் 6 மாடலை தவிர்த்து நேரடியாக நோட் 7 ஸ்மார்ட்போனினை வெளியிட்டது.
லெனோவோ நிறுவனம் நேரடியாக 8 மாடலை வெளியிடுவதற்கான காரணம் அறியப்படாத நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட லெனோவோ K6 நோட் ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா மட்டுமே வழங்கப்பட்டது.
சமீபத்தில் வெளியாகியுள்ள பென்ச்மார்க்கிங் தகவல்களில் புதிய லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ X20 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய மாடலில் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






