என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது
    X

    ஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது

    ஒப்போ நிறுவனம் F3 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட ஒப்போ F3 இம்முறை ரோஸ் கோல்டு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒப்போ நிறுவனம் மே மாதம் இந்தியாவில் வெளியிட்ட F3 ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறம் கொண்ட புதிய ஒப்போ F3 விலை இந்தியாவில் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய ஒப்போ F3 ரோஸ் கோல்டு மாடலினை பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் கேமரா இருக்கிறது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா, 1.3 இன்ச் சென்சார் மற்றும் f/2.0 அப்ரேச்சர் மற்றும் 8 எம்பி டபுள் வியூ வைடு-ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒப்போ F3 ஸ்மார்ட்போனில் பல்வேறு கேமரா அம்சங்களை வழங்குகிறது. 

    இத்துடன் போனின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது, இந்த கைரேகை ஸ்கேனர் 0.2 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்ட ஒப்போ F3 கலர் ஒ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 



    5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட இன்-செல் TFT 2.5D வளைந்த டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்ட பாதுகாப்பு மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6750T6 ஆக்டாகோர் பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.  

    பின்பக்கம் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 1.3 இன்ச் சென்சார், எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ F3 ஸ்மார்ட்போனில்  64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஸ்லாட் டிரே வழங்கப்பட்டுள்ளதால் ஒரே சமயத்தில் இரண்டு சிம் ஸ்லாட் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட்களை பயன்படுத்த முடியும். 

    ஒப்போ F3 ஸ்மார்ட்போனின் இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3200 எம்ஏஎச் பேட்டரியும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒப்போ F3 ஸ்மார்ட்போன் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×