என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ராணுவ தரத்திலான உறுதித் தன்மை கொண்ட கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.2 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஜிபிஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் இதயத்துடிப்பு சென்சார் மற்றும் சாம்சங் பே வசதியை வழங்கும் NFC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    20 மில்லிமீட்டர் அளவு கொண்ட ஸ்டிராப்களை எளிமையாக மாற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 5ATM சான்று கொண்ட வாட்டர் ரெசிஸ்டண்ட் பெற்றுள்ளது. இதனால் 50 மீட்டர் அளவு தண்ணீரில் பயன்படுத்த முடியும். ஸ்பீடோ எனும் நீச்சல் பயிற்சி செயலியும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் கியர் ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 360x360 பிக்சல் வளைந்த சூப்பர் AMOLED ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே
    - 1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
    - 768 எம்.பி. ரேம் 
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - டைசன் இயங்குதளம்
    - 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - வைபை, ப்ளூடூத், NFC
    - அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், இதய துடிப்பு சென்சார்
    - 300 எம்ஏஎச் பேட்டரி
    - வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கியர் ஸ்போர்ட் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைப்பதோடு, 349.99 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரயிருக்கும் கியர் ஸ்போர்ட் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட புதிய சியோமி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியினை புதிய டீசரில் அறிவித்துள்ளது. பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட இரண்டாம் தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் பிரென்ச் நாட்டு வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் வடிவமைத்திருப்பதை சியோமி ஏற்கனவே உறுதி செய்திருந்தது. இதே வடிவமைப்பாளர் சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனையும் வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    சமீபத்தில் ஸ்டார்க் வெளியிட்ட கான்செப்ட் வீடியோவில் ஸ்மார்ட்போனில் மெல்லிய வடிவமைப்பு, வலதுபுறத்தில் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. சாதாரன இயர்போன்களுக்கு மாற்றாக இவை கேன்டிலீவர் பைசோ-எலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் பயன்படுத்தும் என கூறப்படுகிறது. 



    சியோமி Mi மிக்ஸ் 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    * 6.4 இன்ச் AMOLED, 2540x1440 பிக்சல் டிஸ்ப்ளே
    * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    * 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    * 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    * 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    * 19 எம்பி பிரைமரி கேமரா
    * 16 எம்பி செல்ஃபி கேமரா
    * 4500 எம்ஏஎச் பேட்டரி 
    * ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    * டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்



    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 1080x2040 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4400 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் ஆண்டராய்டு 6.0 இயங்குதளம் வழங்கப்பட்டது.

    முதல் தலைமுறை Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனில் 91.3 சதவிகித ஸ்கிரீன்-டூ-பாடி வடிவமைப்பு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 93 சதவிகித ஸ்கிரீன்-டூ-பாடி வடிவமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் வழங்கப்பட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
    பீஜிங்:

    சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை விட முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

    சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட்போன் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி J7 பிளஸ் பிளாக் நிற மாடல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    வெய்போவில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 16 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். 



    முன்னதாக தாய்லாந்தில் இருந்து வெளியான தகவல்களில் டூயல் பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி J சீரிஸ் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இரட்டை கேமரா கொண்ட முதல் J சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கேலக்ஸி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 அமைந்தது. இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருந்தது, முதல் கேமராவில் f/1.7 அப்ரேச்சர், இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி எடுக்க 8 எம்பி கேமரா மற்றும்  f/1.7 அப்ரேச்சர் கொண்டிருக்கிறது.
    2017 ஐபோன் வெளியிடப்பட இருக்கும் அதே தினத்தில் மற்றொரு நிறுவனமும் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    ஆப்பிள் நிறுவத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கு்ம நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமும் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ஐபோன் 2017 வெளியாகும் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் சீனாவின் ஆப்பிள் நிறுவனமாக பார்க்கப்படும் சியோமி நிறுவனமும் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனத்துடன் நேரடியாக மோத இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் அனைவரையும் கவர்ந்திழுக்கும் புதிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் சியோமி ஒரே தினத்தில் தங்களது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பது சர்வதேச சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  



    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் ஐபோன் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது. சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் வெளியிடப்படலாம் என்ற நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பல்வேறு நாடுகளில் வெளியிடப்படும். 

    முன்னதாக வெளியான தகவல்களில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் 95 சதவிகித ஸ்க்ரின்-டூ-பாடி வடிவமைப்பு, 6.4 இன்ச் டூயல் கர்வ்டு AMOLED 2K டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோன்று புதிய 2017 ஐபோனில் டூயல் பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு வசதிகள், மேம்படுத்தப்பட்ட வாட்டர் ப்ரூஃப் போன்ற வசதிகளும், வாடிக்கையாளர்களை கவரும் புதிய அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை, டூயல் பிரைமரி கொண்டு வெளிவர இருக்கும் முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் நடுத்தர பட்ஜெட்டில் கிடைக்கும் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ சீரிஸ் மாடல்களில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    தாய்லாந்து இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களில் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் இரட்டை கேமரா அமைப்பினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விளம்பர படத்தில் முன்பக்க பேனல் தெளிவாக தெரிவதோடு, இரட்டை கேமரா வழங்கப்படுவதை உணர்த்தும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. 



    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் கேமரா அமைப்பு, இதில் 5 எம்பி f/1.9  அப்ரேச்சர் மற்றும் 13 எம்பி f/1.7 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி கேமரா மற்றும் f/1.9 அப்ரேச்சர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட், டூயல் சிம் கார்டு, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். இரட்டை கேமரா அமைப்பு கொண்ட முதல் சாம்சங் ஜெ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படும் ஜெ7 பிளஸ் வெளியீடு சார்ந்து எவ்வித தகவல்களும் இல்லை. முன்னதாக கேலக்ஸி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டது. முதல் கேமராவில் f/1.7 அப்ரேச்சர் மற்றும் இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் வழங்கப்பட்டது. முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி கேமராவும், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டது. இரண்டு பிரைமரி கேமராக்களிலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசர் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா உள்பட பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    நியூ யார்க்: 

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் நியூ யார்க் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள நோட் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

    புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்ச்சிட் கிரே மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 துவக்க விலை 930 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு கியர் 360 கேமரா அல்லது சார்ஜிங் பன்டிள் கூடுதல் விலையின்றி வழங்கப்படும். இத்துடன் கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்கள் நோட் 8 வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ப்ளூடூத் 5.0, எல்டிஇ
    - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3300 எம்ஏஎச் பேட்டரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

    புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. 

    இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 18:9 டிஸ்ப்ளே-ஸ்கிரீன் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக கேன்வாஸ் இன்ஃபினிட்டி அமைந்துள்ளது. 

    கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் புதிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற இருக்கும் முதல் விற்பனையில் வாங்கிட முடியும். தலைசிறந்த டிஸ்ப்ளே மட்டுமின்றி பல்வேறு தலைசிறந்த சிறப்பம்சங்களை இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

    இந்தியாவில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ், எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 



    கேன்வாஸ் இன்ஃபினிட்டி சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் எச்டி 720x1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 2900 எம்ஏஎச் பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - கைரேகை ஸ்கேனர்



    புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 24 மணி நேரத்தில் சர்வீஸ் செய்யும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்படும் போது 24 மணி நேரத்தில் சரி செய்தோ அல்லது புதிய சாதனத்தை வழங்கப்படும். மைக்ரோமேக்ஸ் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் சென்டர்களில் இந்த வசதி வழங்கப்படும் என்றும் இந்தியாவில் இயங்கி வரும் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் சென்டர்கள் சார்ந்த தகவல்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். 

    கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் எதிர்காலத்தில் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    இந்தியவில் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அமேசான் பே கணக்கில் ரூ.250 கேஷ்பேக், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 30 ஜிபி வரை கூடுதல் டேட்டா, அமேசான் கின்டிள் சேவையில் சைன்-இன் செய்து அதிகம் விற்பனையாகும் ஐந்து புத்தகங்களை இலவசமாக பெற முடியும்.
    ஆண்ட்ராய்டு 8.0 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    நூற்றாண்டிற்கு பின் அமெரிக்காவில் நிகழ்ந்த சூரிய கிரகண தனத்தன்று கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 8.0 ஏற்கனவே அதிகம் எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஓரியோ என அழைக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு மார்ச் மாதம் முதல் பிரீவியூ வழங்கப்பட்ட புதிய இயங்குதளத்திற்கான அப்டேட்கள் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது.

    புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அம்சங்களில் ஐகான் வடிவங்கள், நோட்டிபிகேஷன்களுக்கு புள்ளிகள், அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள், ஆட்டோஃபில் சேவை, ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்ஷன் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் உள்ளிட்டவை இருக்கிறது. சில அம்சங்கள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 

    யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் அனுபவம்:

    புதிய இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் கஸ்டம் சேனல்களில் நோட்டிபிகேஷன்களை தனித்தனியாக செட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் நோட்டிபிகேன்களின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப 0 முதல் 4 வரையிலான அளவுகளை செட் செய்து கொள்ள முடியம். இத்துடன் படிக்கப்படாத நோட்டிபிகேஷன்களின் செயலியில் சிறிய புள்ளி மூலம் படிக்க வேண்டியதை உணர்த்தும். 

    ஒவ்வொரு நோட்டிபிகேஷன்களுக்கும் தனித்தனி பேக்கிரவுண்டு நிறத்தை டெவலப்பர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன் டைம்அவுட் உருவாக்க முடியும், இது பயனுள்ள நோட்டிபிகேஷன்களை தவற வடாமல் செய்யும். இத்துடன் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்தால், நோட்டிபிகேஷன்கள் தானாக அழிந்து போகும்படி செய்ய முடியும். இதேபோல் நோட்டிபிகேஷன்கள் சிறிது நேரத்திற்கு ஸ்னூஸ் செய்து கொள்ளும் வசதியும், அதன்பின் திரையில் தோன்றும் படி செய்ய முடியும்.  



    ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் எனும் அம்சம் வாடிக்கையாளரை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளும். ஸ்மார்ட்போனில் அடிக்கடி பதிவு செய்யும் தகவல்களை (புதிய சேவை, கிரெடிட் டெபிட் கார்டு எண் உள்ளிட்டவை) நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த முறை பதிவு செய்யும் போது தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர்கள் ஆட்டோஃபில் ஃபிரேம்வொர்க் சேவையை செட் செய்து கொண்டு அனைத்து செயலிகளிலும் பயன்படுத்த முடியும்.

    ஆண்ட்ராய்டு டிவியில் வழங்கப்படும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் புதிய இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே வீடியோக்களையும் பார்க்க முடியும். இதேபோன்ற அம்சம் முதலில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்ட்டது. இந்த செயலியில் வீடியோ கால்களின் போது வழங்கப்பட்டது. எனினும் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.   

    புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அடாப்டிவ் ஐகான் அம்சம் இருக்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய யூசர் இன்டர்ஃபேசில் ஐகான் வடிவங்களை பிரத்தியேகமாக தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு வடிவம் கொண்ட ஐகான்களை செட் செய்ய முடியும். 

    கேச்சி பட்ஜெட்:

    ஸ்மார்ட்போனில் உள்ள ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி கேச்சி பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது அதிக கேச்சி கொண்டிருக்கும் செயலிகளில் முதற்கட்டமாக கேச்சி மெமரி அழிக்கப்படும். 



    திரையில் புதிய தகவல்களை தெரியப்படுத்த செயலிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தரவுகளையும் புதியதாக அப்டேட் செய்யும், இதற்கென வாடிக்கையாளர்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் பின்னணியில் இயங்கும் செயலிகள் தானாக இயங்க விடாமல் செய்து விடும். இதற்கென புதிய இயங்குதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    மீடியா பிளேபேக்:

    ஆண்ட்ராய்டு ஓரியோவின் மீடியா பிளேயர் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் ஸ்ட்ரீமிங் செய்யும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செயலிகள் பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ டிராக்களை ஒரே சமயம் இயக்க முடியும். கேம் பிளே வீடியோக்களை இயக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.  

    கனெக்டிவிட்டி மற்றும் செக்யூரிட்டி:

    இம்முறை வைபை அவேர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறைந்த மின்திறன் கொண்டு வைபை ஹாட்ஸ்பாட் அல்லது இண்டர்நெட் இணைப்பு இன்றி சப்போர்ட் கொண்ட ஹார்டுவேர் ஒவ்வொன்றுடன் சாட் செய்யும். இத்துடன் புதிய ப்ளூடூத் லோ எனர்ஜி 5.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 



    இத்துடன் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் புகைப்படத்தின் தரத்தை ஆய்வு செய்து, அதனை சரியாக இயக்கும் செயலியை பரிந்துரை செய்யும். ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கப்படும் போதும் ஸ்மார்ட் ஷேரிங் அம்சம் துல்லியமாக அறிந்து கொண்டு சிறப்பான பரிந்துரைகளை வழங்கும். இதேபோல் ஸ்மார்ட் காப்பி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் காப்பி செய்யப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ற செயலியை பரிந்துரை செய்யும். 

    ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் பல்வேறு ஆப்ஷன்கள் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் ஆபத்து நிறைந்தவையாகவும் இருக்கிறது. கூகுள் சேஃப் பிரவுசிங் API மூலம் பிரவுசிங் மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

    அக்டோபர் 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை மிஞ்சும் ஆண்ட்ராய்டு ஓரியோ முதற்கட்டமாக ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு ஓரியோ வழங்கப்படுவதை எச்எம்டி குளோபல் உறுதி செய்துள்ளது.
    கூல்பேட் நிறுவனத்தின் புதிய கூல் எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூல்பேட் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.5 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன் கொண்ட கூல் எம்7 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் புதிய JUI டாக் வழங்கப்பட்டுள்ளது. 

    இதனால் 12 எம்பி பிரைமரி கேமரா, f /1.8 அப்ரேச்சர், ஃபேஸ் டிடெக்ஷன், டூயல்டோன் எல்இடி பிளாஷ் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு, 6.9 எம்எம் தடிமனாக இருப்பதோடு கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    கூல்பேட் கூல் எம்7 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் எச்டி 2.5D டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர்
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2  அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி 2.0 டைப்-சி
    - 3200 எம்ஏஎச் பேட்டரி

    கூல்பேட் கூல் எம்7 ஸ்மார்ட்போன் மேட் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் விலை 2699 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆகஸ்டு 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் கூல் எம்7 மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    சீயோல்: 

    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிற்றேடு (பிரவுச்சர்) ஆஸ்டிராய்டு (Ausdroid) எனும் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் புதிய கேலக்ஸி நோட் 8 பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டீப் புளூ சீ நிறம் கொண்ட நோட் 8 வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. 

    இத்துடன் நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்மர்ட் எஸ்-பென், ஐரிஸ் ஸ்கேனர், 2X சூம் கொண்ட டூயல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி சாம்சங்கின் ஸ்மார்ட் ஸ்விட்ச் ஆப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சமீபத்தில் GFX தளத்தில் காணப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் தெரியவந்தது. இதில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1440x2960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 8 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஃபின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதிக தரமுள்ள ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் நிறைந்த நோக்கியா 8 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்டபோனினை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உயர் ரக ஆடியோ மற்றும் அதிகநவீன வீடியோ அம்சங்கள் நிறைந்த நோக்கியா 8 விலையை பொருத்த வரை மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8 ஆப்பிளின் அதிகம் எதிர்பார்க்க்படும் ஐபோன் 2017, சாம்சங் கேலக்ஸி நோட் 8 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. 599 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,301 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல்-சைட் வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்யலாம். ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டுள்ளதோடு புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் கேமராக்கள் செய்ஸ் நிறுவன லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    எச்எம்டி நிறுவனத்தின் முதல் உயர்-ரக ஸ்மார்ட்போனான நோக்கியா 8 ஆகும். முன்னதாக மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 (2017), நோக்கயா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை எச்எம்டி வெளியிட்டது. 

    நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஆடியோ அம்சம் இருக்கிறது. ஹூவாய் சமீபத்தில் வெளியிட்ட P10 ஸ்மார்ட்போன் போன்றே சரவுண்டு சவுண்டு அம்சம் மற்றும் நோக்கியாவின் சொந்த OZO விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளாஸி பாலிஷ்டு காப்பர் மற்றும் பாலிஷ்டு ப்ளூ, மேட் டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் ஸ்டீல் ஃபினிஷ் நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு கேமராக்களில் ஒரே சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக மாற்றுவதோடு, நோக்கியா 8 கேமரா ஆப் இரண்டு படங்களையும் போத்திசை (bothies) ஃபுல் எச்டி வீடியோக்களை பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்ய முடியும். முன்பக்கம் 13 எம்பி RGB கேமரா மற்றும் இரண்டு கேமராக்களும் 4K தரம் கொண்ட வீடியோக்களும் பதிவு செய்யும். பின்புற கேமராக்களில் லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் வைபை வேகங்களை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வழங்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.  
     
    இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியும். லைட் ஆன்டெனாக்கள் நம் கண்களுக்கு தெரிந்திராத கதிர்களை வெவ்வேறு கோணங்களில் பரப்பும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது ஆன்டெனா எல்லையை கடந்தால், மற்றொரு சிக்னல் மூலம் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும்.



    இனஃப்ராரெட் சிக்னல்கள் பயன்படுத்துவோர் கண்களில் நுழையாது என்பதால், பாதுகாப்பானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பயனருக்கும் தனி ஆன்டெனா கிடைக்கும் என்பதால் அனைவருக்கும் சீரான வேகம் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதிய தொழில்நுட்பம் அனைவருக்கும் சீரான அளவு இண்டர்நெட் வழங்குவதே இதன் தனி சிறப்பம்சம் எனலாம். மேலும் ஒருவருக்கு இணையம் தேவை என்றால் மட்டுமே பீம் அவர்களுக்கு கிடைக்கும், தேவையற்ற இடங்களில் பீம் கிடைக்காது என்பதால் அதிக திறன் கொண்டிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இத்துடன் இன்ஃப்ராரெட் சிக்னல்கள் சுவற்றை கடந்து வெளியே செல்லாது என்பதால் தகவல் பரிமாற்றத்தை யாராலும் கவனிக்க முடியாது, இதனால் இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு நிறைந்தது ஆகும். இவ்வகை தொழில்நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    ×