என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச சந்தையில் நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டது: முழு சிறப்பம்சங்கள்
    X

    சர்வதேச சந்தையில் நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டது: முழு சிறப்பம்சங்கள்

    ஃபின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதிக தரமுள்ள ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் நிறைந்த நோக்கியா 8 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 8 ஸ்மார்டபோனினை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உயர் ரக ஆடியோ மற்றும் அதிகநவீன வீடியோ அம்சங்கள் நிறைந்த நோக்கியா 8 விலையை பொருத்த வரை மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8 ஆப்பிளின் அதிகம் எதிர்பார்க்க்படும் ஐபோன் 2017, சாம்சங் கேலக்ஸி நோட் 8 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. 599 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.45,301 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல்-சைட் வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்யலாம். ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டுள்ளதோடு புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் கேமராக்கள் செய்ஸ் நிறுவன லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    எச்எம்டி நிறுவனத்தின் முதல் உயர்-ரக ஸ்மார்ட்போனான நோக்கியா 8 ஆகும். முன்னதாக மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 (2017), நோக்கயா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை எச்எம்டி வெளியிட்டது. 

    நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஆடியோ அம்சம் இருக்கிறது. ஹூவாய் சமீபத்தில் வெளியிட்ட P10 ஸ்மார்ட்போன் போன்றே சரவுண்டு சவுண்டு அம்சம் மற்றும் நோக்கியாவின் சொந்த OZO விர்ச்சுவல் ரியாலிட்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட நோக்கியா 6000-சீரிஸ் அலுமினியம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளாஸி பாலிஷ்டு காப்பர் மற்றும் பாலிஷ்டு ப்ளூ, மேட் டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் ஸ்டீல் ஃபினிஷ் நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 8 IP54 சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0 RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரே சமயத்தில் முன்பக்க கேமரா மற்றும் பிரைமரி கேமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு கேமராக்களில் ஒரே சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக மாற்றுவதோடு, நோக்கியா 8 கேமரா ஆப் இரண்டு படங்களையும் போத்திசை (bothies) ஃபுல் எச்டி வீடியோக்களை பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்ய முடியும். முன்பக்கம் 13 எம்பி RGB கேமரா மற்றும் இரண்டு கேமராக்களும் 4K தரம் கொண்ட வீடியோக்களும் பதிவு செய்யும். பின்புற கேமராக்களில் லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3090 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    5.3 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆணட்ராய்டு நௌக்கட் 7.1.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு விரைவில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×