என் மலர்
செய்திகள்

ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி கியூ6 இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட எல்ஜி கியூ 6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே மற்றும் மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
எல்ஜி நிறுவனத்தின் கியூ6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட எல்ஜி கியூ6 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, மிலிட்டரி கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனுடன் எல்ஜி கியூ6+ மற்றும் எல்ஜி கியூ+a ஸ்மார்ட்போன்களுடன் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இத்துடன் அமேசான் தளத்தில் நடைபெற்று வரும் கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

எல்ஜி கியூ6 சிறப்பம்சங்கள்:
* 5.5-இன்ச் 18:9 FHD+ 2160x1080 பிக்சல் ஃபுல்விஷன் 442ppi டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், அட்ரினோ 505 GPU
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* டூயல் சிம் ஸ்லாட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
* 3,000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக், ஐஸ் பிளாட்டினம் மற்றும் டெரா கோல்டு நிறங்களில் இந்தியாவில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமோசன் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படகிறது.
இந்தியாவில் எல்ஜி கியூ6 வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு முறை மட்டும் திரையை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.3,200 மதிப்பிலான இலவச கேம்களும் வழங்கப்படுகிறது.
Next Story






