என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் வெளியாகும் ரெட்மி நோட் 5: முழு தகவல்கள்
    X

    விரைவில் வெளியாகும் ரெட்மி நோட் 5: முழு தகவல்கள்

    சியோமி ஏற்கனவே வெளியிட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட சியோமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட் 3 மற்றும் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரெட்மி ப்ரோ 2 எனும் ஸ்மார்ட்போனை சியோமி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதுதவிர சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை தயாரித்து வருகிறது என்றும் விரைவில் இவை விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அதிக பிரபலமாகியுள்ளதைத் தொடர்ந்து புதிய மாடல்கள் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படும் என்றும் ஹோம் பட்டனும் கைரேகை ஸ்கேனராக வேலை செய்யும் என கூறப்படுகிறது.  



    சியோமி ரெட்மி நோட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    * 5.5 இன்ச் FHD 1080 பிக்சல் டிஸ்ப்ளே
    * 64-பிட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் 
    * அட்ரினோ 508 கிராபிக்ஸ் 
    * யுஎஸ்பி டைப்-சி 3.1 
    * குவிக் சார்ஜ் 4.0, ப்ளூடூத் 5
    * 16 எம்பி பிரைமரி கேமரா f/2.0 அப்ரேச்சர் 
    * 13 எம்பி செல்ஃபி கேமரா 
    * 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி 
    * 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
    * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

    ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதன் விலை 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×