search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 9: விரைவில் வெளியீடு
    X

    8 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 9: விரைவில் வெளியீடு

    நோக்கியாவின் ரீ-எண்ட்ரி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய நோக்கியா 9 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி: 

    நோக்கியா 9 சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பென்ச்மார்க்கிங் தளத்தில் 'அன்-நோன் ஹார்ட்' (UnKnown Heart) என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான நோக்கியா 9 சிறப்பம்சங்களும் இம்முறை வெளியாகியுள்ள அம்சங்களும் ஒரே மாதிரி இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 8 ஜிபி ரேம், ஆக்டா கோர் 1.9 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 5.27 இன்ச் 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 22 எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. நோக்கியாவின் 3D சவுண்டு வழங்கும் OZO ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் 350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    Next Story
    ×