என் மலர்
செய்திகள்

புதுவரவு: பட்ஜெட் விலையில் லாவா A77 அறிமுகம்
இந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா A77 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லாவா நிறுவனத்தின் A77 எனும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ, 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா A77 நீலம், தங்கம், மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லாவா நிறுவனத்தின் Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.
4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா Z10 மற்றும் Z25 இந்தியாவில் முறையே ரூ.11,500 மற்றும் ரூ.18,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. Z10 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்திலும், Z25 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் லாவா Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு இந்திய மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

லாவா A77 சிறப்பம்சங்கள்:
* 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
* 1 ஜிபி ரேம்
* 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.0
* 2000 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் லாவா A77 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.4,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
Next Story






