search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷபாலி வர்மா"

    • முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 126 ரன்களே அடிக்க முடிந்தது.
    • டெல்லி அணியின் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் மூன்று வீராங்கனைகளான வோல்வார்த் (7), மூனி (0), ஹேமலதா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    6-வது பேட்டராக களம் இறங்கிய பாரதி ஃபுல்மாலி 36 பந்தில் 42 ரன்கள் அடித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் மரிஜான்னே காப், ஷிகா பாண்டே, மினு மானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை மெக் லேனிங் 18 பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்சி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி 3-வது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் பிடித்த இந்த மூன்று அணிகளும பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    • ஜூனியர் உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.
    • பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இதுவாகும்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதல் ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இது தான்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மா ஜூனியர் உலக கோப்பை தொடரில் 7 ஆட்டங்களில் களம் இறங்கி 172 ரன்களுடன், 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அடுத்து இதே தென்ஆப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் 8-வது சீனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதிலும் இந்தியா அசத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூனியர் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய 19 வயதான ஷபாலி வர்மா, சீனியர் அணியிலும் பிரதான பேட்டராக அங்கம் வகிக்கிறார்.

    இந்நிலையில், எனது அடுத்த இலக்கு சீனியர் உலக கோப்பையை வெல்வது என ஷபாலி வர்மா தெரிவித்தார்.

    என்னிடம் என்ன இலக்கு இருக்கிறதோ அதில் எனது முழு கவனமும் இருக்கும். அந்த வகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் நுழைந்தபோது, உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது. வீராங்கனைகளிடம் நான் சொன்ன ஒரே விஷயம், 'உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்' என்பதுதான். அதை இன்று செய்து காட்டியிருக்கிறோம்.

    இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையோடு அடுத்து சீனியர் உலக கோப்பை போட்டிக்குச் செல்வேன். இந்த வெற்றியை மறந்துவிட்டு சீனியர் அணியினருடன் கைகோர்த்து அந்த உலக கோப்பையை வெல்ல முயற்சிப்பேன்.

    என்னைப் பொறுத்தவரை இதை மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இதில் கிடைத்த அனுபவங்களில் இருந்து மேலும் கற்றுக் கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து நிறைய ரன்கள் குவிக்க முயற்சிப்பேன். இந்த ஒரு உலகக் கோப்பையோடு மனநிறைவு அடைந்துவிட போவதில்லை. இது வெறும் தொடக்கம் தான் என குறிப்பிட்டார்.

    • ஷபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரிச்சா கோஷூம் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மகளிருக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக அடுத்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. ஜனவரி 14-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை நடக்கிறது.

    இந்த அணிக்கு ஷபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சா கோஷூம் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்துடன் டி20 உலக கோப்பையில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது.

    யு19 உலக கோப்பை போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    ×