ஷபாலி வர்மா அதிரடி: 2வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.
ஷபாலி வர்மா அதிரடி: 2வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
Published on

விசாகப்பட்டினம்:

இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து, 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 34 பந்தில் 69 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com