search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னியர் இட ஒதுக்கீடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
    • சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ம.க.வை வேடந்தாங்கல் பறவை போல் மாறி மாறி செல்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதை அவர்கள் முழு மனதோடு தரவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்தால்தான் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று தெரிவித்தனர். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தனர்.

    அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர அ.தி.மு.க. முயற்சி செய்யவில்லை. எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

    தற்போது கூட்டணிக்காக வலை வீசினார். திருமாவளவன், சீமான் போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கூட்டணிக்கு வராததால் எங்களுக்கு அழைப்பு கொடுத்தார்.

    அதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர அக்கறை காட்டவில்லை. சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. 2 வருடமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் பா.ஜ.க. பூஜ்ஜியம் மதிப்புள்ள கட்சியாக விமர்சனம் செய்யவில்லை. எந்த கட்சியையும் தரக்குறைவாக பேசியதில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்த உடன் பெரிதாக பேசுகிறார்கள். விமர்சனம் செய்யும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட தயாரா? நாங்கள் தனியாக நிற்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.
    • கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

    சென்னை :

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூக நீதி : இங்கில்லை.... அங்கே!

    உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.

    தமிழ்நாட்டில் இல்லை, மகாராஷ்டிராவில்.

    உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மகாராஷ்டிரா அரசு.

    அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டு, இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி

    ஆனால், உச்சநீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு; கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

    இப்போது சொல்லுங்கள்....

    இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    சென்னை:

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு குறித்தும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது.

    2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பு கூறுகையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது பின்னர் அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவசர சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறியிருந்தனர்.

    இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுகுறித்து அண்மையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    அதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சிலவற்றை நிலுவையில் வைத்திருப்பதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு வழக்கு தொடுத்திருந்த நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், கோர்ட்டில் முன் வைக்க வேண்டிய விவாதங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வில்சன் எம்.பி, சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு உறுதி செய்தது.
    • கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாக சந்தித்து, வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி மனு அளித்தோம். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி முடிவெடுப்பதாக சொன்னார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. பிறகு ரத்து செய்யப்பட்டது.

    உச்சநீதிமன்றம் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தரவுகளை சேகரித்து ஆய்வு செய்து வழங்குங்கள் என்று சொல்லி விட்டது. தரவுகளை ஆய்வு செய்வதற்கு அதிகபட்சமாக 5 நாள்கள் போதும். ஆனால், 9 மாதங்கள் ஆகியும் தரவுகள் வரவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை.

    தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுத்து உள்ளோம். தரவுகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் தரவுகளை சேகரித்து தந்தால் தான் தமிழக அரசு சட்டம் இயற்ற முடியும்.

    10.5 சதவீதம் இடஒதுக்கீடு சமூக நீதி பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினை தான். மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை, சாதி, மதம், இனப் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. கடந்த 30 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்புகளில் கடைசி 15 இடங்களில் வட மாவட்டங்கள் இருக்கிறது. அதிகமான குடிசைப்பகுதி, அதிக மது விற்பனை, வட மாவட்டங்களில் இருக்கிறது. இதனால், வட மாவட்டங்கள் பின்தங்கி காணப்படுகிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் பல முயற்சியை செய்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்.

    பீகார் மாநிலத்தைவிட குறைந்த நாள்களில் செய்து முடிக்கலாம். தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதி பேசினால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு வேண்டும். காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும். தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

    உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் என யார் சொன்னாலும் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை. அதனால், காவிரி படுகையில் உள்ள அணைகளும் காவிரி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×