என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுகிறது - ராமதாஸ் வருத்தம்
- கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது.
- எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வதந்தி வேண்டாம். எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
Next Story






