search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லலித் மோடி"

    • நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை.
    • டெல்லி அணிக்காக விளையாட விரும்பினேன்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

    இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை லலித் மோடி அழித்து விடுவேன் என மிரட்டியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருந்து எனது வீட்டுக்கு செல்ல சுலபமாக இருக்கும்.

    ஆனாலும் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாங்க. அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூரு அணிக்கு விளையாட விரும்பவில்லை டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார்.

    இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

    • இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
    • மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது லலித் மோடி சார்பில் அவரது வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், 'எதிர்காலத்தில் நீதிமன்றங்களின் கண்ணியம், இந்திய நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    'நிபந்தனையற்ற, அடிமனதில் இருந்து மன்னிப்பு கோரும் பட்சத்தில், அதனை வழங்குவது தான் சரி என்று நீதிமன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் காரணமாக நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் பெருமனதோடு ஏற்றுக் கொள்கிறோம். மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம்,' என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

    அனைவரும் இந்த துறைக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி கூறிய அவதூறான கருத்துக்கு அவர் சமூக வலைதளங்கள் மற்றும் தேசிய நாளேடுகள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
    • மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, லலித் மோடியின் சார்பில் ஆஜராகி வாதாடினார்

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார். இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் லலித் மோடி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பதிவுகளில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.

    அப்போது, லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக லலித் மோடி சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய நிளிதழ்ளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    லலித் மோடி சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் மிகவும் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • லலித் மோடி 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.
    • இந்திய புலனாய்வு முகமைகளால் தேடப்படும் பட்டியலில் லலித் மோடி வைக்கப்பட்டு உள்ளார்.

    ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் நிமோனியா பாதிப்பும் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ நாட்டில் சிகிச்சைக்குப் பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு விமானத்தில் திரும்பினார். 

    லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலித் மோடிக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பதால் 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
    • இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பை:

    லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென், முன்னாள் ஐபிஏல் தலைவர் லலித் மோடியின் டீவிட்-க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சுஸ்மிதா சென்னுக்கு தற்போது வயது 46. திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

    இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.

    பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சுஷ்மிதா சென் ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    • இவர் தற்போது லலித் மோடியை டேட்டிங் செய்கிறார்.


    நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

    2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.


    லலித் மோடி - சுஷ்மிதா சென்

    இந்நிலையில், 46 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை, புதிய பயணம்" என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.


    லலித் மோடி - சுஷ்மிதா சென்

    மேலும், அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூட்டிய சுஷ்மிதாசென், 1996-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகம் ஆனார்.
    • 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதாசென் கடைசியாக ஒரு வெப் சீரியலில் நடித்து இருந்தார்.

    புதுடெல்லி:

    உலகளவில் பிரபலமாக திகழும் ஐ.பி.எல்.லின் முதல் சேர்மனாக இருந்தவர் லலித் மோடி.

    இவர் மோசடி புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.

    இந்நிலையில் லலித்மோடி இந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சுஷ்மிதாசென்னுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். சுஷ்மிதாசென் எனது பெட்டர் ஹாப் என்றும், புதிய வாழ்க்கை, புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

    அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டுவிட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று லலித்மோடி அதில் கூறியுள்ளார்.

    லலித்மோடி, மினால் என்பவரை 1991-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையேயிலான திருமண வாழ்க்கை 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லலித்மோடி தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூட்டிய சுஷ்மிதாசென், 1996-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகம் ஆனார். 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதாசென் கடைசியாக ஒரு வெப் சீரியலில் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் 46 வயதாகும் சுஷ்மிதாசென் தற்போது லலித்மோடியுடன் டேட்டிங்கில் உள்ளார்.

    லலித்மோடியின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

    ×