search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலைத்துறை"

    • சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.
    • பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காலகம் -ஆவுடையார் கோயில் சாலையில் நாடாகாடு முனி கோயில் பாலம் அருகில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.

    அவற்றில் ஒரு தென்னை மரம் முற்றிலும் பட்டுப்போன நிலையில் மட்டைகள் காய்ந்து அவ்வப்போது சாலையில் விழுந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்விடத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

    முற்றிலும் பட்டுப்போன தென்னை மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பட்டுப்போன தென்னை மரத்தின் அருகில் மின்சார கம்பிகள் செல்கின்றன. இதனால் பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது. உயிர் சேதங்கள் ஏற்படும் முன்பாக பட்டுப்போன தென்னை மரத்தை அப்புறப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறியதாவது, இந்த காலகம் - ஆவுடையார் கோயில் சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் அதிகம் உள்ளது. இவற்றை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  

    • தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை அடுத்த காட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்தப் சாலை பணிகளை மாநில நெடுஞ்சா லைத்துறை தலைமைப் பொறியாளர் செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நடந்து முடிந்த பணிகள் குறித்தும் இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகா ரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் வடிவ ழகன் மற்றும் ஒப்பந்தக்காரர் உடன் இருந்தனர்.

    • 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன்படி திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில்உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சுடலை யாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் துறைமுகம் மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆயிரக்க ணக்கான லாரிகள் , பஸ்களும், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றது.

    ஆனால் அப்பகுதியில் முறையற்ற வாகன பயணம் மேற்கொள்ளப் படுவதாலும், மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேலும் மிகப்பெரிய கிடங்குகள் ஏற்பட்டு இருப்பதாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன ர்.

    இதில் குறிப்பாக சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் இடத்தில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை.

    அதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர்பாளையம் நான்கு ரோடு அருகே கடநத 9-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்ப டுத்தும்வகையில் இன்று நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 10 மணிக்கு வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படஉள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை முன்னிட்டு அங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் , போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், ராமச்சந்திரன், இந்திராணி,10க்கும் மேற்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 க்குகும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் ,உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் ,உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஊழியர்கள், பரமத்தி வேலூர் தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஊழியர்கள் இடிக்கும் பணி நடைபெறும் இடத்தில் உள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    • சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
    • ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்,

    ஜூன். 17-

    கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து அந்த பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு சாலை யில் ரவுண்டானா அமைக்கப்ப டுகிறது.இந்த ரவுண்டானா அப்டா மார்க்கெட்டில் முன்பகுதியில் அமைப்ப தற்கு கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட கடை களுக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டது.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொ ண்டனர். இன்று காலை ஜேசிபி எந்திரம் உதவியு டன் அப்டா மார்க்கெட் முன் பகுதியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டது.

    ஓட்டல்கள் பேக்கரிகள் உள்பட 7 கடைகளை இடித்து அகற்றினார்கள். மேலும் இரண்டு கடைகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கடைகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×