search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை   அகற்றும் பணி தொடக்கம்
    X

    ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

    ஜேடர்பாளையம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்

    • ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
    • இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் தார்சாலையின் நெடுகிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் இடத்தில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி தீர்ப்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை.

    அதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்யுமாறு கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கோரி அங்கு குடியிருப்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் அ.மு.மு.க.வை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜேடர்பாளையம் நான்கு ரோடு அருகே கடநத 9-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்ப டுத்தும்வகையில் இன்று நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று காலை 10 மணிக்கு வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படஉள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை முன்னிட்டு அங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( மதுவிலக்கு) மணிமாறன் தலைமையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் , போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், வீரம்மாள், ராமச்சந்திரன், இந்திராணி,10க்கும் மேற்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 க்குகும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் ,உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் ,உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஊழியர்கள், பரமத்தி வேலூர் தாசில்தார் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஊழியர்கள் இடிக்கும் பணி நடைபெறும் இடத்தில் உள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    Next Story
    ×