பல்லடம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்ற காட்சி.
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன்படி திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com