search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப வழிபாடு"

    • திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
    • இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

    திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    அதில் ஒன்று ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள்.

    அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது.

    உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது.

    விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.

    இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.

    தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள்.

    பௌர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது.

    இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

    அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம்,

    ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது,

    அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

    விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.

    நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.

    தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது.

    ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார்.

    அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார்.

    முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியல் மகாபலி சக்கரவர்த்தியா பிறந்தார்.

    எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.

    ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோவிலுக்குச் சென்றார்.

    பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நட ந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி

    சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று.

    செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார்.

    தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.

    "தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோவிலில் தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.

    காலப் போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாக சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.

    நாள்தோறும் கோவிலுக்கு சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான்.

    இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய

    பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது.

    இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.

    இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.

    காலப்போக்கில் அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.

    சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

    ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்க செய்யும்

    வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும்.

    எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும்.

    என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும்

    எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது,

    அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அபிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

    தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது

    கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின்,

    இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

    • திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை-திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பக்தா்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சேவையாற்ற விருப்பமுள்ளவா்கள் 78454-81121 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோவில் அறங்காவலா் குழுவினா், கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும்.
    • 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் - தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி - எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    -சிவசங்கர்

    • தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    தேங்காய் விளக்குகள்

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    விளக்கு ஏற்றும் விதிமுறைகள்

    1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

    3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது.

    ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது.

    இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

    4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.

    திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம்.

    பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

    5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

    6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

    7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

    8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெ ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம்,

    சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் என ஏற்றி வழிபட வேண்டும்.

    11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும்,

    துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2  என அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு,

    வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி,

    சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

    14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.

    18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

    20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.

    மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.

    தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

    • அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.
    • திருக்கார்த்திகையன்று, ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    1. அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.

    2. அண்ணாமலையாரை நேரில் வந்து தரிசித்தாலும் தூரத்தில் இருப்போர் மனத்தால் நினைத்தாலும் போதும் வேதாந்தத்தின் உண்மைப் பொருளான ஆத்ம ஞானம் கிடைக்கும்.

    3. திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு குருவினுடைய தீட்சை முதலிய எதுவும் இல்லாமலேயே இறைவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி கிடைக்கும்.

    4. திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவன் சந்ததி தழைக்கும். அவனுக்கும் மறுபிறப்பும் இல்லை.

    5. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவன் பாக்கியவான் ஆகிறான்.

    6. கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.

    7. திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.

    8. தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.

    9. கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான்.

    அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.

    10. திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது பேறுகள் எல்லாவற்றையும் தருவதாகும்.

    சென்ற ஜென்மங்களில் செய்த பாவங்கள் கிரிவலம் செய்கிற ஒவ்வொரு அடியிலும் நசிந்து விடும்.

    • விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
    • எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை நெய் விட்டு ஏற்றுவதே நல்லது.

    விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.

    தீபத்திற்கு பஞ்சு திரியிடுவது சிறப்பானது.

    தாமரைத் தண்டுத்திரி, வாழைத்தண்டு நூல், வெள்ளெருக்கு பட்டை, புது மஞ்சள், துணி,

    புதுவெள்ளை வஸ்திரம் ஆகியவையும் உபயோகிக்கலாம்.

    காலையில் அதிகாலை நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல், ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

    • திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
    • பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

    திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருக்கோவில் வளாகங்களிலும்,

    மலைப்படிகளிலும், குளப்படிகளிலும், மற்ற இடங்களிலும் ஒரு லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படும்.

    இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமியன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது.

    மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

    அதற்கான அகவல்கள் அந்த ஆலயங்களில் நிரந்தரமாகவே பொருத்தப்பட்டுள்ளன.

    ×