search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீசல் விலை"

    • லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
    • வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழக அரசு நேற்று முன்தினம் வாகன சாலை வரியை உயர்த்தி உள்ளது.லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் வாகனங்கள் உள்ளன. முன்னறிவிப்பு இல்லாமல் இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு அடுத்தது லாரிகள் மூலம் தான் பொருளாதார மேம்பாடு நடைபெறும்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தற்போது டீசல் விலை 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது.

    அதனை ஏன் குறைக்கவில்லை.தேர்தல் அறிக்கையில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தனர். பெட்ரோல் விலை தான் குறைக்கப்பட்டது.ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.தென் தமிழகத்தில் தான் டீசல் விலை அதிகமாக உள்ளது.

    கர்நாடகாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் குறைவாக உள்ளது. தமிழக லாரிகள் கர்நாடகாவில் டீசல் பிடிப்பதால் தமிழக அரசுக்கு தான் வரி இழப்பீடு ஏற்படுகிறது உயர்த்தப்பட்ட வரி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    தொழில் நலிவு

    லாரி தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலுக்கு என்று எந்த சலுகை கொடுப்பதில்லை.

    இதுவரை எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு வரியை உயர்த்தியது இல்லை.

    உயர்த்தப்பட்டுள்ள வானங்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை.அவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 8-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக 13 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விசைப் படகு மீனவர்களின் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.முக. தலைவர் கருணாநிதி மற்றும் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கும், மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் இரங்கல் அனுசரித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    டீசல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டு எங்களது வாழ்வாதாரம் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் மீனவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற மீனவர்களுக்கு வழங்குகின்ற டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் சேதம் அடைந்து உள்ளன, நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொடுப்பது என்றும் முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இலங்கை அரசு அத்துமீறி 3 படகுகளை அரசுடமையக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற நட்பு நாடுகளுக்கு உதவாத சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முதல் கட்டமாக வேலை நிறுத்தம் செய்வது,

    2-வது கட்டமாக அடுத்த மாதம் அக்டோபர் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, படகு உரிமை சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பது,

    இதன்பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் 13 கடலோர மாவட்ட மீனவர்களும் இணைந்து போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சி துணையுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராடத்துக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #FuelPrice #BharatBandh #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயற்சிக்கிறது.

    2014 மே மாதம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 காசுகள். தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி ரூ.19.48 காசுகள், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 காசுகள் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

    2014-ல் மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் பதினொரு லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கின்றது. இது வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?


    தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    இந்நிலையில் தான் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குகிறது.

    பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10-ல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலா ளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FuelPrice #BharatBandh #Vaiko

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    ×