search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol and Diesel price"

    • லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
    • வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழக அரசு நேற்று முன்தினம் வாகன சாலை வரியை உயர்த்தி உள்ளது.லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் வாகனங்கள் உள்ளன. முன்னறிவிப்பு இல்லாமல் இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு அடுத்தது லாரிகள் மூலம் தான் பொருளாதார மேம்பாடு நடைபெறும்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தற்போது டீசல் விலை 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது.

    அதனை ஏன் குறைக்கவில்லை.தேர்தல் அறிக்கையில் டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தனர். பெட்ரோல் விலை தான் குறைக்கப்பட்டது.ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை.தென் தமிழகத்தில் தான் டீசல் விலை அதிகமாக உள்ளது.

    கர்நாடகாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் குறைவாக உள்ளது. தமிழக லாரிகள் கர்நாடகாவில் டீசல் பிடிப்பதால் தமிழக அரசுக்கு தான் வரி இழப்பீடு ஏற்படுகிறது உயர்த்தப்பட்ட வரி உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    தொழில் நலிவு

    லாரி தொழில் தற்போது நலிவடைந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலுக்கு என்று எந்த சலுகை கொடுப்பதில்லை.

    இதுவரை எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு வரியை உயர்த்தியது இல்லை.

    உயர்த்தப்பட்டுள்ள வானங்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.வேலூரில் நிரந்தர வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இல்லை.அவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×