search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அதிகாரி"

    • மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர்.
    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நல உதவிகள் வழங்க 2 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த விழாவில் எம்.பி. பார்த்திபன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, டி.ஆர்.ஓ. மேனகா மற்றும் அதிகாரிகள் மேடையில் இருந்தனர்.

    மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. நிலைகுலைந்த கலெக்டர் கார்மேகம் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்.

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார். மேடை 2 அடி உயரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மேடையிலையே விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை சஸ்பெண்டு செய்து சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவு படி கண்ணனை சஸ்பெண்டு செய்தது ஏற்புடையது அல்ல, வருகிற 30-ந் தேதிக்குள் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் கலெக்டரை சந்தித்து முறையிடுவோம், அதன்பிறகும் இசைவு தெரிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

    இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.

    • கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகேயுள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது30). இவர் பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் வந்தார்.

    அவர் தான் பட்டா மாற்ற மனு செய்ததாகவும், அது இன்னும் தரப்படவில்லை என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஆவணங்களை பார்த்து பட்டா மாறுதல் சரி செய்து தருவதாக கணேஷ் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் கணேஷ் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    நாகர்கோவில்:

    பத்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் புரோன் விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    கிராம நிர்வாக அதிகாரி முத்து (வயது 49) என்பவர் புரோன் கொடுத்த மனுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் நேரில் சந்தித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசியபோது ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவதாக கூறியுள்ளார். இது குறித்து புரோன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி முத்துவை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை புரோனிடம் கொடுத்து அனுப்பினார்கள். கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அதிகாரி முத்துவிடம் புரோன் ரூ.500 நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. எக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களையும் போலீசார் சரி பார்த்தனர்.

    அப்போது பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். சுமார் 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் குழித்துறையில் கிராம நிர்வாக அதிகாரி முத்து தங்கி இருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ராயகிரி ஆகும். 

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ரசாயன பொடி தடவப்பட்ட 4 500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர்
    • றைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    நாகர்கோவில் :

    குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4 500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்த ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் மதன்குமார். உதவியாளராக இருப்பவர் கருப்பையா. இவர்களது அலுவலகத்துக்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா இவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    • 1௦௦-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே துத்தாரிபாளையம் என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அங்கு குடியிருப்பவர்களிடம் இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. எனவே வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காம நாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராம அலுவலரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×