search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காடுவெட்டி குரு"

    புதுச்சேரியில் இருந்து கனகசெட்டிக்குளம் பகுதியில் இன்று வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்தில் பயணித்தவர்களை கீழே இறக்கிவிட்டு மர்மநபர்கள் பேருந்துக்கு தீ வைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    பாமக மூத்த தலைவர் காடுவெட்டி குரு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனை அடுத்து, வட கிழக்கு மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இந்நிலையில், இன்று புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து மீது மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

    கனகசெட்டிக்குளம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பின்னர் அந்நபர்கள் தீ வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் வேகமாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக காலட்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    உடல்நிலை குறைவால் உயிரிழந்த காடுவெட்டி குரு உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினர். #KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.குரு (வயது 57) நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    இதையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குருவின் உடலுக்கு வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காடுவெட்டிக்கு வந்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


    முன்னதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமி, அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
    இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காடுவெட்டிக்கு நேரில் சென்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு காடுவெட்டி குரு உடல் இன்று அடக்கம் செய்யப்படும். #KaduvettiGuru #Ramadoss #PonRadhakrishnan
    ×