search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலைப்பேட்டை"

    • சாக்கடை கால்வாயை சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    • மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு .எஸ் .எஸ் .காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

    மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது .மேலும் கால்வாய் பகுதியில் காட்டுச் செடிகள் புதர் போல் வளர்ந்து உள்ளதால் சாக்கடை நீர் வழிந்தோட வழியில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். தவிர மேலும் வாரச்சந்தை நாளான திங்கட்கிழமை பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளையும் வாரச் சந்தையில் வியாபாரம் செய்து செய்கின்றனர்.

    அப்போது மீதமாகும் காய்கறி கழிவுகள் அழுகிய நிலையில் கொட்டப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் தற்போது பெய்து வரும் மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அந்த பகுதியில் வழியாக நடந்து செல்ல செல்வதற்கு மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அவ்வப்போது கழிவுகளை அகற்றி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×