என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் தினம்"

    • விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம்.
    • உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

    இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!

    விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

    கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

    • குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.
    • நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது.

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்!

    ரோஜாவின் ராஜா என்றும், நேரு மாமா என்றும் குழந்தைகளால் போற்றப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் உலகம் மகிழ்ச்சியானது; குழந்தைகளின் உலகம் உன்னதமானது.

    ஆனால், நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.

    திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

    மொத்தத்தில், திமுக ஆட்சியில், தமிழ்நாடு குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை குழந்தைகளின் சொர்க்கமாக மாற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர கூறினார்.

    • 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!!

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்!

    இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் #ChildrensDay நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்!! என்று கூறியுள்ளார். 

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

    அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும், ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற முயற்சி, சக்தி, துணிவு மூன்றும் துணை நிற்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.
    • உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,

    பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்,

    வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக்  காலை உணவுத் திட்டம்,

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,

    உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,

    ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தினம் நல்வாழ்த்துகள்!

    உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்! என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    • சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்

    சென்னை:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    "இன்று மிகவும் சிறந்த நாள்;

    எங்கள் நேரு பிறந்தநாள்;

    அன்பு மாமா உலகிலே

    அவதரித்த புனித நாள்!

    அன்று சிறிய குழந்தையாய்,

    அலகாபாத்தில் பிறந்தவர்

    என்றும் நமது நெஞ்சிலே

    இருந்து வாழும் உத்தமர்!"

    - என நேரு அவர்களைப் போற்றிப் பாடினார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. பண்டித நேரு அவர்கள் குறித்து "நேருவும் குழந்தைகளும்", "நேரு தந்த பொம்மை" ஆகிய நூல்களை இயற்றியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களைப் பாடியுள்ள அவரது நூற்றாண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம். எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு. குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

    இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

    குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.

    குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு. கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். "குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் ‘உலக வரலாற்றின் காட்சிகள்’, ‘சுயசரிதை’, ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’ உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
    • 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு- சுவரூபராணி தம்பதியருக்கு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மூத்த மகனாகப் பிறந்தார், ஜவஹர்லால் நேரு. செல்வ வளம் பொருந்திய வீட்டில் பிறந்த இவரது தந்தை வழக்கறிஞராக பணியாற்றினார். காஷ்மீர் கால்வாயைக் குறிக்கும் 'நெகர்' என்ற சொல்லே, மருவி ஜவஹர்லால் நேரு பரம்பரையைக் குறிக்கும் 'நேரு' என்று மாறியது.

    1916-ம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு, தனது தந்தையுடன் சென்ற நேரு, அங்கு காந்தியடிகளைச் சந்தித்தார். இருப்பினும் 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை சம்பவமே, நேருவை முழுமையாக காங்கிரசில் சேர்ந்து நாட்டிற்காக போராடத் தூண்டியது.

    1920-ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, முதன் முறையாக சிறைக்குச் சென்றார், ஜவஹர்லால் நேரு. விரைவிலேயே காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார்.

    தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் 'உலக வரலாற்றின் காட்சிகள்', 'சுயசரிதை', 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' உள்ளிட்ட நூல்களை எழுதினார். இந்த நூல்கள் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்ததுடன், இந்திய காங்கிரசிலும் நேருவின் மதிப்பை உயர்த்தியது.

    1929-ம் ஆண்டு லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் நிகழ்ச்சியை நேரு, தலைமையேற்று நடத்தினார். ஆங்கிலேய அரசின் பிடியில் இருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததும், டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறையில் வலிமையான திட்டங்களை உருவாக்க அவர் உறுதுணையாக இருந்தார்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவரது அஸ்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய தேசம் முழுவதும் தூவப்பட்டது. குழந்தைகளிடம் அன்போடு பழகிவந்த, ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், இந்தியாவின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    • குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.
    • குழந்தைகளின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள் ஆகும். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று கூறியுள்ளார்.

    • குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள்.
    • குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள் ஆகும். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று கூறியுள்ளார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில், நவ.14-

    குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவிகள், ஹோலிகிராஸ் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி பால சுப்பிரமணியன், சமூக நலத்துறை அதிகாரி சரோ ஜினி, குழந்தைகள் அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சன்ட் பரிசு வழங்கினார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை அருகே அமை ந்துள்ள வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், தனிப்பா டல் போட்டி, கதை சொல்லு தல், கவிதை படித்தல், நடனம், மாறுவேடப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி குறித்து வினாடி வினா போட்டியும் நடை பெற்றது.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 91 மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சன்ட் சான்றி தழ்களையும் பதக்கங்க ளையும் வழங்கினார். மாவட்ட மற்றும் மாநில அளவில் கராத்தே, செஸ், நீச்சல் மற்றும் நடனம் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்த மாணவர்கள் அஸ்லின், அப்ரிஜா, அமீ ஹாரிஸ், ரேஷ்னா ராணி, ரெக்ஸிகா, தர்ஷிகா மற்றும் அதிதி சந்திசேகர் ஆகியோ ருக்கு கேடயம் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்க ப்பட்டது. பள்ளி செயலாளர் டாக்டர் கிளா ரிசா வின்சென்ட் குழந்தை கள் தின விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் அஷ்ராபா ஜாஸ்மின் நன்றி கூறினார். நிகழ்வுகளை ஆசிரியர் ஜெகின் பிரிட்டோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிர்வாகி டெல்பின் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • விருதுநகரில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன் ெதாடங்கி வைத்தார்.

    பேரணியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்தல், அனைத்து தளங்களிலும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அள விலான வன்முறை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை, பாலின பாகுபாடு, ஜாதி வேற்றுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    இந்த பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா, குழந்தைகள் நலக்குழு தலைவர் கெங்கா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் சதீஸ்குமார், துணை தொழிலாளர் ஆய்வாளர் சதாசிவம், மனித வர்த்தகம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×