search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Meteorological Center"

    • தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோபல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,

    விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.
    • தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் கோடை வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமலேயே இருந்துவருகிறது. தமிழகத்தில் இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு மறுநாளும் (புதன்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
    சென்னை:

    நீலகிரி, கோவை, திருப்பூர். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி.தேனி,திண்டுக்கல், கரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுர், அரியலூர்,கடலூர்,தஞ்சாவூர்திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை (31-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர்,திருச்சி.பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் சில இடங்கள் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 39 முதல் 40 செல்சியஸ் வரை காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதியில் நீடித்து வருவதால் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது.

    கடந்த 5-ந்தேதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியதால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின.

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்றும் பணி ஒரு வாரம் முழுவீச்சில் நடைபெற்றது.

    அதையடுத்து கடந்த 15-ந்தேதி உருவான மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    கன மழையை எதிர் கொள்ள அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்று கரையை கடந்ததால் சேதம் ஏற்படவில்லை. மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    ஆனாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதியில் நீடித்து வருவதால் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் மேக கூட்டங்கள் திரண்டு இருப்பதால் அடுத்த ஒருசில நாட்களில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் ஏற்படுமா? என்று வானிலை நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

    வானிலை மையம்

    அதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகுமா? என்று ஆராய்ந்து வருகின்றனர். அந்தமான் பகுதியில் மேக கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர், “தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இல்லை. ஆனாலும் வங்க கடலில் மேக கூட்டங்கள் திரண்டு வருவதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையில் இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எந்த இடத்திலும் தண்ணீர் சூழவில்லை.

    மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் மழையை கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையும் படியுங்கள்...சப்-இன்ஸ்பெக்டர் கொலை: குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் - வைகோ

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில் தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை காரணமாக சென்னை, தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    சென்னை மழை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் ரெட் அலர்ட்டை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். 

    வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRain #ChennaiRain
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் பரவலான மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. 

    என கூறினார்.
    கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பெய்து வருகிறது.

    பருவமழை தீவிரம் அடைந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் (கோவை) 10 செ.மீ., தேவலா (நீலகிரி) வால்பாறை, பெரியார் (தேனி) ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், நீலகிரியின் கேபிரிட்ஜ், நடுவட்டத்தில் 3 செ.மீ., கோத்தகிரி, கேத்தி, குன்னூரில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடல் அலை 3.5 மீ முதல் 3.7 மீ. உயரம் வரை வீசும் என்பதால் தென் கடலோர மாவட்ட மீனவர்கள் மட்டுமின்றி, வடகடலோர மாவட்ட மீனவர்களும் வங்ககடல், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.
    ×