search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dry weather"

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter
    சென்னை:

    வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ‘பெய்ட்டி’ புயல் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் அடுத்த 3 நாட்களுக்கு (20-ந் தேதி வரை) பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகரிலும் இதே நிலை தான் காணப்படும்.

    இதன் பின்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதன் நகர்வை பொறுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ‘பெய்ட்டி’ புயல் நேற்று (நேற்று முன்தினம்) தமிழகத்தை கடந்து சென்றபோது வட திசையில் இருந்து நிலப்பகுதி காற்று வீசியதால் குளிர் கடுமையாக இருந்தது. இதனால் பகல்நேர வெப்பநிலை இயல்பை விடவும் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக பகல் நேர வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இது இயல்பை விடவும் 3.6 டிகிரி செல்சியஸ் குறைவு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MeteorologicalCenter

    ×