என் மலர்
நீங்கள் தேடியது "G20"
- ஜெர்மனி வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
- பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்றார்.
பெர்லின்:
ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார். இதுதொடர்பாக அன்னாலெனா பேர்பாக் கூறியதாவது:
ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன்.
ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.
இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.
வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.
உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது என தெரிவித்தார்.
- ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
- தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இதற்கிடையே, ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றி. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி20 தலைமை பதவிக்கு பலமாக இருக்கும். ஒரு சிறந்த உலகை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பிய கவுன்சில் தலைவரான சார்லஸ் மைக்கேலுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
- இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.
பாரிஸ்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசம் இருக்கும்.
- ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.
வாஷிங்டன்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது
- தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும் விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்
புதுடெல்லி:
உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20 என்பது என அழைக்கப்படுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தலைவர் பதவியை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.
அந்த வகையில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசாங்கத் தலைவர்கள் மட்டத்திலான, ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 உறுப்பு நாடுகளுடன் ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும், சில சர்வதேச அமைப்புகளையும் அதன் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக அழைக்கும் பாரம்பரியம் உள்ளது.
அதன்படி, ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா ஜி20 கூட்டங்களுக்கு, வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை விருந்தினர் நாடுகளாக அழைக்கிறது. மேலும், ஐஎஸ்ஏ (சர்வதேச சோலார் அலையன்ஸ்), சிடிஆர்ஐ (பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி) மற்றும் ஏடிபி (ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய அமைப்புகளையும் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக இந்தியா அழைக்கிறது.
ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கல்வி, வர்த்தகம், திறன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, காலநிலை நிதி, பொருளாதாரம், உலகளாவிய உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், பேரழிவு ஆபத்து குறைப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, பொருளாதார குற்றங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய பகுதிகளாக விவாதிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளார். ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பலமடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

ஜி-20 மாநாட்டின் இரண்டாம் அமர்வாக உலக வர்த்தகம் தொடர்பாக இந்த அமைப்பில் உள்ள தலைவர்கள் உரையாற்றுவதாக இருந்தது. வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, சீனா, ரஷியா ஆகியவை நெருக்கமாகியுள்ளதால் கலக்கமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
அவர் பங்கேற்காததால் உலக வர்த்தகம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி அந்நாட்டின் சார்பில் வேறு யாரும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை என ரஷியா நாட்டின் நிதி மேம்பாட்டுத்துறை மந்திரி மேக்சிம் ஓரெஷ்கின் குறிப்பிட்டுள்ளார். #TrumpskipG20 #G20
